Sanitizer - சேனிடைசர்

#1
கை கழுவ வேண்டாமா? சேனிடைசர் தடவினாலே போதுமா?
நன்றி குங்குமம் டாக்டர்

கண்ட இடங்களில் கை வைத்து விளையாடுவதால் குழந்தைகளின் கைகளில் கிருமிகள் சேர்ந்து விடுகின்றன. சாப்பிடச் செல்வதற்கு முன்பு இதற்கென தண்ணீரில் கை கழுவத் தேவை இல்லை... தங்களது நிறுவனத்தின் சேனிடைசரை தடவிக் கொண்டாலே போதுமானது என்கிறது ஒரு நிறுவனத்தின் சேனிடைசர் விளம்பரம்... சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கை கழுவ வேண்டும் என சிறு வயதிலிருந்தே சுகாதாரமான வாழ்க்கை முறை நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.

நாம் கற்றுக்கொண்டு பின்பற்றுவதைத்தான் நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சேனிடைசரை தடவிக் கொண்டாலே போதும் கை கழுவ வேண்டாம் என்பது தார்மீக அடிப்படையில் சரியான வழிகாட்டுதலாக இருக்குமா? சரி அதை விட முக்கியமானது சேனிடைசர் என்பது மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதித்த பின்னர் மருத்துவர்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி.

கிருமி களைக் கொல்லும் தன்மையுள்ள சேனிடைசரை தடவி விட்டு கை கழுவாமல் சாப்பிட்டால் சேனிடைசரும் தானே உணவில் கலக்கும்? எந்த அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத செயல் இது. சேனிடைசரின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பொதுமருத்துவர் தேவி சுகன்யாவிடம் கேட்டோம்...

‘‘சேனிடைசர்களில்
Alcoholic, Non Alcoholic என இரண்டு வகைகள் இருக்கின்றன. இவை ஜெல், நுரை மற்றும் திரவம் என மூன்று வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஆல்கஹால் சேனிடைசரில் Isopropyl Alcohol (Rubbing alcohol) மற்றும் எத்தனால் ஆகியவை 4590 சதவிகிதம் வரையிலும் சேர்க்கப்படுகிறது. இவை Active ingredients ஆக செயல்பட்டு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து விடும்.

காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் கொல்கிற அளவுக்கு இவை வீரியம் மிக்கவை. இருந்தாலும் நமக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடுவதால் அதன் மூலம் நமக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகளை நாம் இழக்க நேரிடுகிறது. டிடெர்ஜென்ட் சோப்பில் கூட இதே விதமான
Active ingredients இருக்கின்றன. இவை நல்ல பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதால் சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் எண்ணெயை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடும்.

60 சதவிகிதத்துக்கும் அதிகமாக

ஆல்கஹால் இருக்கும் சேனிடைசர்தான் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கும். சேனிடைசரில் வாசனைக்காக சேர்க்கப்படும் வாசனைப் பொருட்கள் மற்றும்
Triclosan எனும் உட்பொருள் தீவிர விளைவுகளை ஏற்படுத்துபவை. ட்ரைக்ளோசனை பூச்சிக்கொல்லி மருந்தின் மிக முக்கியமான சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இவை ரத்தக்குழாய்களுக்குள் சென்று ஒரு விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தசை வலுவிழத்தல். மலட்டுத்தன்மை போன்ற விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சில ஆய்வுகள் இவை புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் பயன்படுத்தும் சேனிடைசரில்
Benzalkonium Chlorideஐ கலப்பார்கள். சில வீரியம் மிக்க பாக்டீரியாக்களை அழிப்பதற்காக அது பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியாக்களை சிதைத்து அழிப்பதைப் போலவே அவை நமது
சருமத்தையும் அழிக்கும்.

சில சேனிடைசர்களில் ஸ்ட்ராபெர்ரி போன்ற ஃப்ளேவர்களுக்காக
Phthalates எனும் ரசாயனத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். இதனைக் கையில் தடவிக்கொண்டு ஏதேனும் உணவுப் பொருளை உட்கொள்ளும்போது அந்த ரசாயனம் உணவில் கலந்து உடலுக்குள் சென்று விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறாக உட்கொண்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணிக்கு, ஆசனவாய் வேறு இடத்தில் மாறிய நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது.

இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சருமமும் கடினமாகி விடும். மேலும் சருமத் துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு வறட்சி ஏற்படும்.
Paradens எனும் உட்பொருள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, சுரப்பிகள் மற்றும் சருமப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.
இறுதிக் கட்டமாக புற்றுநோய் வரையிலும் கொண்டு செல்லக்கூடியது.

ஆல்கஹால் சேனிடைசரில் 65 சதவிகித எத்தனால், 35 சதவிகித
Isopropyl Alcohol இருக்கின்றன. ஆல்கஹால் அல்லாத சேனிடைசரில் Benzalkonium Chlorid மற்றும் Triclosan ஆகியவை முக்கிய மூலப்பொருட்களாக இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியான கார்சினோஜெனை உருவாக்குகின்றன. ஆல்கஹால் சேனிடைசரை விட ஆல்கஹால் அல்லாத சேனிடைசர் அதி தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சேனிடைசர்கள் குறித்து இதுவரை கூறினோம். விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வணிக ரீதியிலான சேனிடைசர்களின் விளைவுகள் குறித்துப் பார்க்கலாம். இவற்றுள் எத்தனால் ஆல்கஹால் மற்றும் ஐசோப்ரொஃபைல் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது.
Tocopheryl Acetate எனும் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் பயன்பாட்டுக்கு இவற்றைக் கொடுக்கும்போது இவற்றின் நறுமணம் காரணமாக குழந்தைகள் அவற்றை உட்கொண்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகள் இவற்றை 10 மில்லி அளவு உட்கொண்டாலே அது கொடிய விஷத்துக்கு நிகரான விளைவுகளை ஏற்படுத்தி விடும். சேனிடைசரை உட்கொண்டு இதுவரையிலும் யாரும் இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அமெரிக்காவின் தேசிய விஷக்கட்டுப்பாட்டு வாரியம் சேனிடைசரில் இருக்கும் ரசாயனங்கள் காரணமாக அதனை நேரடியாக உட்கொண்டவர்களுக்கு சுயநினைவு இழத்தல், பார்வைக் குறைபாடுகள், வயிற்றுப்போக்கு, வலிப்பு, உள் உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

கையில் தடவிக்கொண்டு கை கழுவாமல் சாப்பிடுவது நல்லது அல்ல. குறிப்பாக குழந்தைகள் கையில் தடவும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வளர்ந்து வரும்போது சவாலான சூழலை சமாளிக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுவர். ஆல்கஹால் சேனிடைசரை நியூயார்க்கில் உள்ள சிறைக்கைதிகள் போதைக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆல்கஹால் பாய்சனிங் ஏற்பட்டு சர்க்கரை அளவு குறைந்து மூளை பாதிப்புக்கு ஆளாகி உயிரிழப்பைக் கூட சந்திக்க நேரிடலாம்.

எப்படிப் பார்த்தாலும் சேனிடைசர் என்பது மனிதர்களுக்கு ஊறு விளைப்பதாகவே இருக்கிறது. சேனிடைசராலுமே கூட எல்லா விதமான வைரஸ், பாக்டீரியாக்களையும் அழிக்க முடியாது. 2000ம் ஆண்டு தொடக்கத்தில் உலகெங்கும் பரவிய ஆந்த்ராக்ஸ் வைரஸை அவை அழித்தாலும், அதன் முட்டைகளை அழிக்க முடியவில்லை. தேவைப்படும் இடத்தில் மட்டும் சேனிடைசரை பயன்படுத்தலாமே தவிர, அதனை ஒரு மாற்றாக வைத்துக் கொள்ளக் கூடாது. கை கழுவத் தேவையில்லை... இதை துடைத்துக் கொண்டாலே போதும் என்பது சோம்பேறித்தனத்தை வளர்க்கும் செயலாக மாறி விடும். சோப்பு போட்டு கை கழுவுவதுதான் சரியானது என நம் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும்’’ என்கிறார் தேவி சுகன்யா
.
 
Last edited:
#2
Mmm gud sharing ka ...
மனித உடலை பாதுகாக்கவென்று கண்டு பிடிக்கிறார்கள்
ஆனால் அவைகளோ அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிறது....
 
#3
Mmm gud sharing ka ...
மனித உடலை பாதுகாக்கவென்று கண்டு பிடிக்கிறார்கள்
ஆனால் அவைகளோ அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிறது....
Thank you Sumy :)