SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விட&#2990

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
#91
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும்; - எம்.எல்.ஏ அபுபக்கர் பேச்சு!






தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அபுபக்கர் தெரிவித்துள்ளார்.




தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 90 நாளுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கிராம மக்களைத் தொடர்ந்து தெற்கு வீரபாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 21 கிராம மக்களும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகத் கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகள், மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் இன்று போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மக்களுடன் போராட்டக் களத்தில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல நீண்ட நாட்களாக தன்னெழுச்சியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 5 வயது சிறுவன் கூட ‘இழுத்து மூடு.. இழுத்து மூடு.. நாசக்கார ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு.., கேட்கலையா கேட்கலையா மத்திய மாநில அரசுகளே எங்கள் குரல் கேட்கலையா..” என உரத்த குரலில் கோஷம் எழுப்பியது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதன் கழிவால் நிலம், நீரில் ஏற்பட்ட பாதிப்புகளையும், உடலில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சொன்னார்கள்.

இந்த ஆலையை மூடிட வலியுறுத்திக் கடந்த ஜூலை மாத சட்ட மன்றக் கூட்டத் தொடரில் நான் கோரிக்கை வைத்தேன். இந்த ஆலைக்கு எதிரான மக்களின் தொடர் போராட்டத்தைப் பார்த்த பிறகும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசுதான் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் சட்டமன்றக் கூட்டத்தில் குரல் எழுப்பப்படும். தமிழகம் முழுவதும் மக்களின் போராட்டக் குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்களின் போராட்டங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் அரசிற்கு மக்கள் வரும் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
#92
இன்னொரு நெடுவாசலாகிறதா கரூர் கிராமங்கள்..? கொந்தளித்த விவசாயிகள்!

1526538914835.png

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எழுந்த கடும் போராட்டங்களுக்குப் பிறகு, அந்தத் திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கரூரில் உள்ள சில கிராமங்களில் இரவு நேரங்களில் ஆழ்குழாய்க் கிணறுமூலம் ஆய்வு செய்ததால், மக்கள் பீதியில் உள்ளனர்.




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுக்க முயன்றதால், அங்குள்ள விவசாயிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதி விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.


இதன் வாயிலாக, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிறுவனம் பின்வாங்கியது. வேறு இடம் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், ஆழ்குழாய் போட்டு ஆய்வு செய்ததால், அந்தப் பகுதி மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில், சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகளும் பெண்களும் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.


அந்த ஊர் பெண்கள், ``கரூர் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள கிராமங்களான அரங்கநாதன்பேட்டை, நெரூர், தென்பாகம் உள்ளிட்ட கிராமங்களில், இரவு நேரத்தில் திடீர்னு ராட்சத இயந்திரங்கள் வந்து இறங்கி ஆழ்குழாய் கிணறுகள் போட்டு ஆய்வு செய்கின்றன. சில நாள்களாக, எங்களின் அனுமதியில்லாமல் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக இப்படி ஆய்வுசெய்கிறார்கள். நாங்க சந்தேகப்பட்டு கேட்டதுக்கு, சரியான பதில் இல்லை. அதனால், இன்னொரு நெடுவாசலாக எங்க ஊரை ஆக்கப் பார்க்கிறார்களோன்னு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவிரி ஆற்றில் தண்ணீர் வரலை. அதோடு, தமிழ்நாட்டிலேயே அதிகமா மணல் கொள்ளை கரூர் மாவட்டத்தில்தான் நடந்திருக்கு. களிமண் தெரியும் அளவுக்கு மண்ணை அள்ளிட்டாங்க.


இதனால், காவிரிக் கரை ஓரத்திலேயே 400 அடிக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சுட்டு. இதுல இயற்கை வளங்களை எடுக்க முயன்றால், எங்கள் பகுதி சஹாரா பாலைவனமாக மாறிவிடும். எங்க உயிரைக் கொடுத்தாவது இதைத் தடுப்போம்' என்றார்கள்.

பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரனும், ``திருட்டுத் தனமாக நடக்கும் இந்த ஆய்வை நிறுத்தாவிட்டால், ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்'' என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#93
கதிராமங்கலத்தில் ஓராண்டாகத் தொடரும் போராட்டம்

ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட ஆரம்பித்து ஒரு வருடம் ஆன நிலையில் இன்று, 365-வது நாள் போராட்ட நிகழ்ச்சியை நடத்தினர். அப்பகுதியில், மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.





`ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தில் எண்ணெய் எரிவாயு எடுத்துவருகிறது. இதனால், பெரும் பாதிப்புக்குள்ளான கதிராமங்கலத்தில் நிலம், நீர், காற்று போன்றவை கடுமையாக மாசுபட்டுள்ளது. குடிநீரில், எண்ணெய் கலந்து வருகிறது. இதனால், நாங்கள் பல துன்பங்களை அனுபவித்துவருகிறோம் என கதிராமங்கலம் ஐயனார் கோயில் திடலில், 'ஓ.என்.ஜி.சி வெளியேற வேண்டும், புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது, புதிய எண்ணெய்க் கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும்’ என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்போடு சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே 19-ம் தேதி போராட ஆரம்பித்தனர்.

போராட்டம்குறித்து அவர்களிடம் பேசினோம். `நாங்கள் போராட்டம் தொடங்கி ஒரு வருஷமாச்சு. போன வருஷம் மே மாதம் தொடங்கிய போராட்டத்திலிருந்து, இன்று வரை கதிராமங்கலம் ஒரு போர்களமாகவே காணப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார்கள். வீடு புகுந்து பலரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

`எங்க ஊரைச் சேர்ந்தவர்கள், எந்த நிகழ்ச்சிக்கும் வெளியே எங்கும் போகாதபடி இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதுபோல வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டோம். எங்க பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லக்கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினோம்.

விவசாய நிலத்தில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து தண்ணீர் பாய்ந்தோடவேண்டிய வயலில், எண்ணெய் பாய்ந்தோடியது. அப்போது, ஓ.என்.ஜி.சி குழாயை போலீஸாரே கொழுத்திவிட்டு, அறவழியில் போராடிய எங்கள்மீது பலி சுமத்தி தாக்குதல் நடத்தினர்.




எங்களின் கூக்குரல் கேட்டு பல அரசியல் கட்சித் தலைவர்கள், எங்கள் போராட்டத் திடலுக்கு வந்து எங்களுக்காகப் போராடி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரம் நடத்தினார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்க வீட்டுப் பெண்கள் பணிக்குச் செல்வதுபோல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் போராட்டத் திடலுக்கு வந்துவிடுவார்கள். வயதான மூதாட்டி ஒருவர், ஒருநாள் தவறாமல் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவர், `என் காலம் முடிந்துவிட்டது. என் பேரப்பிள்ளைகளான இந்த ஊர் பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும். அதான், ஒருநாள் விடாமல் கலந்துகொண்டேன். முற்றிலுமாக ஓ.என்.ஜி.சி வெளியேறும் வரை வருவேன்’ என தில்லாகத் தெரிவித்தார்’ என்று போராட்ட களத்தில் இருந்து ஒரு வருட நிகழ்வுகளைக் கண் கலங்கியபடி கூறினார்கள்.


மேலும், ``கதிராமங்கலத்தில் போராட ஆரம்பித்து இன்றோடு 365 நாள்கள் ஆகின்றன. இதற்காகப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்து அறவழியில் 365 நாள் நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஆனால், நாங்கள் தேச விரோதிகள் போல எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் பெரிய போலீஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக் களத்தை போர்க்களமாக மாற்றுவதுபோல அவர்கள் செயல்பாடுகள் உள்ளன. காவலர்களைக் குவிப்பதன்மூலம் எங்களை அஞ்சவைக்க நினைக்கிறது அரசு.



கடந்த வாரம், இதேபோல ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து, எண்ணெய் வெளியேறியது. பழைய குழாயை எடுத்துவிட்டு, புதிய குழாய் பதிக்கும்போது ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உரிமைக்காகப் போராடும் எங்களுக்கு காவல் துறை மூலம் அரசு எந்தப் பாதுகாப்பையும் இந்த ஓராண்டில் கொடுக்கவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பாரத் மாலா என்கிற பெயரில் நான்கு வழிச் சாலைகள் அமைப்பதற்காக கதிராமங்கலத்தின் விளை நிலங்களைப் பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயல்கின்றனர்’’ என்றனர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த 365 நாள் நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக, `ஓ.என்.ஜி.சி-யை கதிராமங்கலத்தை விட்டு முற்றிலுமாக வெளியேற்றுவோம். அது வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#94
`ஆட்சியர் உறுதியளிக்காவிட்டால் போராட்டம் தொடரும்' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு!

`ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்காவிட்டால் சொன்னபடியே ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.





தூத்துக்குடி, மடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பொன்பாண்டி, ``தூத்துக்குடியில் இயங்கி வரும் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 22 கிராம மக்கள் கடந்த 100 நாட்களாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கவில்லை. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் என யாரும் நேரில் வந்து சந்திக்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறது. இதற்கான நிரந்தர தீர்வு குறித்து முடிவெடுக்கவில்லை. ஆலைக்கு எதிராகப் போராடிவரும் அனைத்துக் கிராம மக்களும் ஒருமனதாக, வரும் 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்துள்ளோம்.

அதன்படி, ஜனநாயக ரீதியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறோம். இப்போராட்டம் வாயிலாக ஆலையை மூட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்கும் ஓர் முறை மட்டுமே. ஆலையை நோக்கி நாங்கள் யாரும் செல்லப்போவது இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்கப் போவதாக சில விஷமிகள், ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் வீண் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். எங்களது போராட்டம் அறவழிப் போராட்டம் மட்டுமே. வன்முறை என்பது எங்களின் நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலிகளும், உளவுத்துறைப் போலீஸாரும் இணைந்து எங்களின் அமைதியானப் போராட்டத்தை சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விசமிகளைக் கண்டறியும் வகையில் எமது கூட்டமைப்பு சார்பில், 20 வீடியோ கிராபர்களை நிகழ்வுகளைப் படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.





வரும் 21-ம் தேதி, ஆலை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் முற்றுகைப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம்.

இல்லாவிட்டால், 22-ம் தேதி முற்றுகைப் போராட்டம் உறுதியாக நடைபெறும். அன்று முழுக்கடையடைப்பு நடத்த வணிகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள், மீனவர்கள், விவசாயிகள், திருநங்கைகள்,


வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மக்கள் போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மாநிலம் முழுவதும் விரிவடையும்" என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
#95
100-வது நாளில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பொங்கிய 21 கிராம மக்கள்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வணிகர்கள் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். பழைய பேருந்து நிலையம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.





ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் 21 கிராம மக்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதால், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுத்து ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரசாத் மற்றும் எஸ்.பி. மகேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வணிகர்கள் சங்கம், மீனவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டு, ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடைபெறுவதாக இருந்த முற்றுகைப் போராட்டம், பழைய பேருந்து நிலைய எதிரில் உள்ள எஸ்.ஏ.வி., பள்ளி மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



ஆனால், "இக்கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை. எனவே, இந்த உடன்பாட்டு முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம். திட்டமிட்டபடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடக்கும்" என கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று (21.5.18) இரவு தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் ஆட்சியர் வெங்கடேஷ்.






இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆட்சியர் அலுவலகம், எஸ்.ஏ.வி., பள்ளி மைதானம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கடற்கரைகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிபேருந்துகள் ஓட வில்லை.

போாட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 21 கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
#96
ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தது: போராட்டக்காரர்கள் கல்வீச்சு - போலீஸ் தடியடி

1526969294025.png

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.



விவிடி சிக்னல் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பேரிகார்டுகள் அமைத்தும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

இதேபோல் போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#97
தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

1526989636466.png

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்ட குழுவினருடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்கள்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம் தெற்கு போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. போராட்டக்குழுவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டனர்.

மேலும் கலவரம் ஏற்பட்டால் தடுக்க கூடிய வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டன.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள்.



இதனிடையே தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டாது. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் கல்வீசினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

பொதுமக்கள் கல்வீசியதால் தங்களை காத்து கொள்ள போலீசார் ஓடும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்த போலீஸ் வாகனங்களை தாக்கினார்கள். சிக்னல் மற்றும் தடுப்புகளும் உடைத்து எறியப்பட்டன. தொடர்ந்து போலீசாரை கடந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினார்கள்.

அதே வேளையில் மடத்தூர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றார்கள். அவர்களை மடத்தூர் பகுதியில் போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும்-பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் எண்ணிக்கையை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பதட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

எனினும் போலீஸ் தடுப்பையும் மீறி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்கள். தூத்துக்குடி 3-ம் மைல் பாலம் அருகே பொதுமக்கள் திரண்டு சென்ற போது கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தின் போது போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த தனியார் வங்கி மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

ஜெயராமன், கிளாட்சன்,கந்தையா,வினிஸ்டா,தமிழரசன்,சண்முகம், மணிராஜ் உள்ளிட்ட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மணிநேரத்திற்கு பின்னர் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும் போலீசார் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே போர்க்களமானது. இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#98
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 10 ஆயிரம் கடைகள் அடைப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

1526989723698.png


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடியில் உள்ள 65 வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பிரைண்ட் நகர், திரேஸ்புரம், அண்ணாநகர் தெர்மல் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திரமரப்பட்டி, புதுக்கோட்டை, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சிறிய பெட்டி கடைகள், பால் பூத்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. பெரிய ஓட்டல்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

இதே போல ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதி, பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. புதியம்புத்தூர் பகுதியிலும் பிரதான வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்திலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.

தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தபட்டுள்ளன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#99
ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

1526989835951.png

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி தொழிற்சாலை இயங்கி வருகின்றது.

கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள்.

இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மூடுதல் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து, ஜெயலலிதா அவர்கள் 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.

இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் தாமிர உருக்காலை 2018-2023 வருடத்திற்கான இசைவாணையை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது.

இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது:

1. தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

2. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

3. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன் கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து
வெளியேற்றி வந்துள்ளது.

4. தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

5. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்கூறிய காரணங்களினால், இசைவாணை புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், “வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது” என்று 12.4.2018 நாளிட்ட நடப்பாணையின் மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. 17.5.2018 அன்று இம்மனு விசாரணைக்கு வந்து விசாரணை 6.6.2018க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்கள், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார். இவ்விவரம் அன்றைய செய்தித் தாள்களிலும் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 2013ல் ஜெயலலிதா அவர்கள் இவ்வாலையை மூடுவதற்கு உத்தரவிட்டதைப் போலவே, தற்போதும் இவ்வாலை இயங்காமல் இருப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (22.5.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல்துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி
மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அரசு சட்டபூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
``உயிர்ப்பலிகளால் போராட்டம் ஓயப்போவதில்லை!” துப்பாக்கிச்சூட்டுக்குத் தலைவர்கள் கண்டனம்!


1527045533104.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று (22-ம் தேதி) 100-வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர். அவற்றை இங்கே பார்ப்போம்...



காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: ``தமிழகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரைப் போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். அரச பயங்கரவாதத்துக்கு இது ஒரு காட்டுமிராண்டித்தனமான எடுத்துக்காட்டாகும்”.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும், இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. போராடும் யாரையும் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்து, அதிகாரம் என்ற கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு மக்கள் போராட்டம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவரின் (முதல்வர்) நிர்வாகத் திறமையின்மைதான் 10 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பறிக்கும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை”.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்: ``ஒரு நல்ல நோக்கத்துக்காக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம் ஆகும். தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமானவை; இவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்”.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: ``போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது கொடுமையான சம்பவம். ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக எடப்பாடி அரசு மாறிவிட்டது. தமிழக அரசு ஜனநாய விரோத அரசாகச் செயல்படுகிறது. அடக்குமுறையால் போராட்டத்தை நிறுத்த முடியாது. உயிரிழப்புகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்”.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ``மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உயிர்ப்பலிகளால் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை. இது மேலும் தீவிரத்தை ஏற்படுத்ததான் செய்யும்”.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: ``என்னுடைய கேள்வியெல்லாம் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தலாம் என ஆணை பிறப்பித்தவர் யார்... அதைத் துப்பாக்கிச்சூடுவரை கொண்டுபோகலாம் என அனுமதி அளித்தது யார்? இது மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல; தமிழகத்தின் கேள்வி. இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். யாராவது ஓர் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது. மேலிடத்திலிருந்து ஓர் உத்தரவு வராமல் இந்தச் சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற அரச வன்முறையை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது”.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்: ``துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கொல்ல வேண்டும் என ஆட்சியாளர்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார்கள். இது எதிர்பாராமல் நிகழ்ந்த துயரம் அல்ல. கதிராமங்கலம், நெடுவாசல், தூத்துக்குடி என மக்கள் தங்களது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள எழுச்சியுடன் போராட்டங்கள் நடத்துவதை, மத்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியை மகிழ்ச்சியடைய வைப்பதற்காகத்தான் தூத்துக்குடி மக்களை முதல்வர் பழனிசாமி பலி கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்காக முதல்வர் பழனிசாமியை மோடி பாராட்டுவார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸை அமித் ஷா பாராட்டக்கூடும்”.




நடிகர் ரஜினிகாந்த்: ``மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக நேற்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு”.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: ``பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களின் உயிரும், உடைமைகளும்தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக இல்லை. எனவே, மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக ஆளும் அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூடவேண்டும். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய ஆளும் அ.தி.மு.க அரசு கலைக்கப்பட வேண்டியதாகும்”.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: ```பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திவந்த நிலையில், காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது”.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்: ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்

தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: ``காவல் துறையைப் பயன்படுத்தித் தமிழக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறது”.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா: ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்”.

தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன்: ``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: ``லண்டனில் இருக்கும் வேதாந்தா குழுமத்தின் முதலாளிகளுக்காக, தன் சொந்த மக்களையே கொல்லும் அரசு தமிழகத்தில்தான் இருக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்படும். விரைவில், இந்தப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடைபெறும்”.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.