SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விட&#2990

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? காவல்துறை விளக்கம்

1527049514611.png

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து
காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டனர்.

மேலும், அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் அமைதி நிலவ சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
தூத்துக்குடி சம்பவம்: விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன்





தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, முற்றுகையிட்டவர்களை கலைந்து செல்லும்படி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தடை உத்தரவையும் மீறி, காவலர்களின் அறிவுரையையும் புறக்கணித்து காவலர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் கல்வீசி தாக்கியும் சேதப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டும், பொது மக்கள் உயிருக்கும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் பொருட்டும், முற்றுகையாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

10 பேர் பலி: இந்தச் சம்பவத்தில் துரதிருஷ்டவசமாக 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்.

ஒரு நபர் விசாரணை ஆணையம்: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குத் தீவைத்த போராட்டக்காரர்கள்






தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குத் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கும்பலாக, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குச் சென்று, குடியிருப்புகளுக்கு தீ வைத்தனர்.

தகவல் அறிந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பிரிந்திருந்த போராட்டக்காரர்கள், திடீரென ஒன்றுதிரண்டு ஒரே பகுதியில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகிறார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
தூத்துக்குடி சம்பவம்: இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்- அரசு வேலை





தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அரசு வேலை: மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றவாறு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,262
Likes
3,171
Location
India
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலையின் 2வது பிரிவு அனுமதி பெறப்பட்ட இடத்தில் தொடங்கப்படாததால் விரிவாக்கப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டனர். மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,262
Likes
3,171
Location
India
தூத்துக்குடியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்

1527058231185.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் வரை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது நிலைமை மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது.



தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர், கோவில்பட்டி, நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

மேலும் தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு செல்லும் டவுன் பேருந்துகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தூத்துக்குடியில் இன்று (மே 23) நடக்கவிருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு - வாலிபர் உயிரிழப்பு

1527071111980.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.



இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.

ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் கூறுகையில், நான் பெங்களுரில் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு - பதற்றம் நீடிப்பு

1527071248121.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே தூத்துக்குடி பிரைன் நகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஒரு பேருந்தில் பற்றிய தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டது. மற்றொரு பேருந்தில் பிடித்த தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய படைகளை அனுப்ப தயார் - உள்துறை அமைச்சகம்

1527071324633.png

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். அண்ணாநகர் பகுதியில் இன்று போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்கு ரப்பர் குண்டு மூலம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், காளியப்பன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக தலைமை செயலாளரிடம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா, தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.


அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக உள்ளதாக கவுபா தெரிவித்துள்ளார். எனினும், தமிழக அரசு கேட்கும் பட்சத்தில் மட்டுமே மத்திய அடைகள் அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.