SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விட&#2990

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.



ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி நகருக்கு வந்தார். அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சாதித்து ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தமிழக முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
1527071970912.png

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 11 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டுத் தள்ளியது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கலவரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்தும், காவல்துறையினர் துப்பாக்கியை உபயோகித்தது ஏன்? என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது.

தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி இடமாற்றம்





தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. எனினும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 65-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்றும் அங்கு பதற்ற நிலை தொடர்கிறது.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்






தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர்.

தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக புதன் அன்று துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பார்க்கச் சென்ற உறவினர்கள் மீது, போலீஸ் மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது.

இதில் ஒரு வாலிபர் பலியானார். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விடியோக்கள் மற்றும் ஆடியோ தகவல்கள் அலைபேசி இணைய சேவை வழியாக பல்வேறு இடங்களில் அனைவராலும் பகிரப்படுகின்றன.

போராட்டக்காரர்களின் ஒருங்கிணைப்புக்கும் இதுவே உதவுகிறது. ஆனால் இதன் மூலம் வதந்திகளும் பரப்படுவதாக காவல்துறை கருதுகிறது.

எனவே தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகு இணையதள சேவை மீட்கப்படும் என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன்! ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தப்பித்த ஒரு பத்திரிகையாளரின் பதிவு!






தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏராளமான கிராம மக்களும், சமூக ஆர்வலரும் கடந்த 100 தினங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மண்ணையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

100-வது நாள் போராட்டத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டனர். தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிய கிராம மக்களை காவல் துறையினர் ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி, நவீன ரக துப்பாக்கிகள், ஏ.கே.47 துப்பாக்கிளை பயன்படுத்தி சுடத் தொடங்கினர். அப்போது அந்தச் சம்பவ இடத்தில் பணியிலிருந்த பத்திரிகையாளரான காட்சன் வைஸ்லி தாஸ் (Godson Wisely Dass S) என்பவர் ஒரு நொடியும் அங்கிருக்க முடியாத நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஒருத்தனாவது சாகணும் என்ற ஒரு காவலரின் குரலைக் கேட்டவர் அங்கிருந்து பதறி ஓடத் தொடங்கினாராம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.