SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விட&#2990

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

1527141986940.png

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.



இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
மாசுக்கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை - ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு

1527142103337.png

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்குள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியாகினர். நேற்று, அண்ணாநகர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் பலியாகினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5.30 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு

1527142196866.png


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று பிற்பகலில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.

ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இன்று செல்வசேகர் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,351
Likes
550
Location
chennai
பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என மனுதாரர் வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், பலியனாவர்களின் உறவினர்கள் உடலை கேட்பதால் சடலத்தை பதப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பபெற வேண்டும் என தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மே.30-ம் தேதி பலியானவர்களில் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும், அரசு கோரிக்கை தொடர்பாக மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

1527190075744.png

துாத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடியில் நாளை(மே-25) காலை 8 மணி முதல் மே-27 காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியில் தொடர்ந்து பதட்டம் நிலவும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளது. தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
ஸ்டெர்லைட் ஆலை இயங்காது: கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி

1527190155183.png

ஸ்டெர் லைட் ஆலை இயங்காது என தூத்துக்குடிமாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர், மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை எனவும், அரசின் எண்ணமும் அதுதான். எனவே பொதுமக்கள் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

மேலும் துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட13 பேர் உயிரிழந்தனர்.19 பெண்கள் உள்பட 102 பேர் காயமடைந்தனர் என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி கூறினார். இது தொடர்பாக கலெக்டர் ,சிறப்பு கலெக்டர்கள் டேவிதார், ககன்தீப்சிங்பேடி கூட்டாக தெரிவித்தனர்.

அவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
சமீபத்திய கலவரத்தில் காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைதியை கொண்டு வர கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர். ஆண் போலீசார் 24,பேரும், பெண் போலீசார் 10 பேரும் காயமுற்றுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.29 லட்சம் மதிப்பிலான சேதம் அடைந்தது, ரூ. 1 கோடி மதிப்பிலான வாகனங்கள் 100 சதவீதம் சேதமடைந்தன. 24 கார்கள் சேதமடைந்தன. துாத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் பஸ்கள் இயக்க அரசு தயாராக இருக்கிறது.180 பஸ்கள் மாநகராட்சி பகுதியில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து காய்கறிகள் கொண்டுவந்து இங்கு வினியோகிக்கப்படும். மற்ற பகுதிகளுக்கு பஸ்களை இயக்குவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.
டேவிதார் பேட்டி: அமைதியை நிலைநாட்ட பல்வேறு தரப்பினருடன் காலை முதல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இவ்வாறு கூறினர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
ஸ்டெர்லைட்; பிரதமர் மவுனம் ஏன்?: காங்., கேள்வி

ஸ்டெர்லைட் எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி இது குறித்து அமைதி காப்பது ஏன் என காங்., கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்., மூத்த நிர்வாகியான அபிஷே க் சிங்வி இன்று நிருபர்களிடம் பேசியதாவது :

தூத்துக்குடியில் நடந்து வரும் விஷயங்களை பிரதமர் பார்த்து கொண்டுதானே இருக்கிறார். கோஹ்லி அளித்த சவால் குறித்து பேச முடிகிறது. தூத்துக்குடி விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் ? மக்களிடம் பேச பிரதமர் மோடிக்கு நேரமில்லையா ? ஸ்டெர்லைட் , பெட்ரோல் விலை குறித்து ஏன் பேச மறுக்கிறார் ?

ஸ்டெர்லைட் வேண்டாம் என சில மாநிலங்களில் மக்கள் கேட்டு கொண்டதும் ஏற்று கொண்டது போல் தூத்துக்குடி மக்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன் ? தூத்துக்குடியில் இவ்வளவு துயர சம்பவம் நடந்தும் ஒரு அதிகாரி கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லையே ! தமிழக அரசு நம்பிக்கை இழந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.




 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
துப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்

1527190710514.png

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. வேதனையளிக்கிறது. இது எதிர்பாராதது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க கோர்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். அரசு மற்றும், நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றினோம்.

கடமையை உணர்ந்த சமூகம் நாங்கள். அவர்களின் விருப்பம் மற்றும் எதிர்கால நலனுக்காக தொழில் துவங்கினோம்.தமிழகம், தூத்துக்குடி வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
Demonstrators, including a pair dressed as characters from the film ‘Avatar’, protest against mining company Vedanta in London 1527191633164.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
Sterlite protests: Vedanta chairman Anil Agarwal terms deaths 'unfortunate,' says company strictly follows court, govt orders

Vedanta Chairman Anil Agarwal on Thursday described the loss of 13 lives as 'unfortunate' in violent protests demanding closure of a copper factory owned by group firm Sterlite Copper at Tuticorin in Tamil Nadu.


Vedanta head Anil Agarwal.

In a video message on Twitter, Agarwal said the company would like to continue the business at the plant with the 'wish' of the community.

At present, the company is waiting for clearance from court and government to restart the plant, which is currently closed for annual maintenance, he added.

I am very sad to hear the incident... This was absolutely unfortunate. My full sympathy is with the families (of the deceased)," Agarwal said.

Claiming that the company strictly follows what the court and the government orders are, he said,"We always make sure the community and Tuticorin people at large prosper with us."

The NRI billionaire further said, "I am totally committed for the community, people at large, and with their wish and with their prosperity we would like to continue this business."


Reiterating the commitment of the company to environment and "the development of people of Tuticorin and Tamil Nadu", Agarwal said,"(we) will abide by the law of the land. Once again, I am very much in pain, (with) what happened...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.