SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விட&#2990

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தூத்துக்குடி சம்பவம்: 8 வழக்குகள் நாளை விசாரணை

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் அதன் தொடர்பான 8 வழக்குகள் நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெறும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு தர வேண்டும். 3 மாவட்டங்களில் இணையதள சேவையை வழங்க வேண்டும். கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தூத்துக்குடி: ரயில்கள் இயங்கத்தொடங்கின

துாத்துக்குடியிலிருந்து வெளி ஊர்களுக்கு ரயில்கள் இயங்கத் தொடங்கின. துாத்துக்குடியிலிருந்து மைசூரு விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் புறப்பட்டு சென்றன. இரவு 7.30 மணிக்கு புறப்படும் பியர்ல் சிட்டி ரயிலும் புறப்பட தயாராக இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.




 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்; பெட்ரோல் குண்டு வீச்சு, போலீஸ் தடுப்புக்கு தீ வைப்பு

1527192611328.png

12 பேரை பலி கொண்ட தூத்துக்குடியில் கடந்த சில மணி நேரம் அமைதி நிலவி வந்த நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது. அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாக 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அண்ணா நகர் முக்கிய சாலையில் இருந்த போலீஸ் தடுப்புகளை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். முத்தம்மாள் காலனி பகுதியில் அரசு பணிமனை நோக்கி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
3 மாவட்டங்களில் ஏடிஎம்கள் செயல்படும்

View attachment 285382

இன்டர்நெட் சேவை துண்டிப்பால், வங்கி ஏ.டி.எம்., சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாதிப்பா?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டக்கார்ர்களும், பொது மக்களும் மூன்று நாள்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டங்கள் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுகின்றன.

இதை தடுக்கும் நோக்கில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பல்வேறு சேவைகள் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் முடக்கம் காரணமாக வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியவில்லை என்ற தகவல்களும் பரவுகின்றன.


மறுப்பு
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி சேவைகள் வி.சாட் மற்றும் ஐ.எஸ்.டி.என்., எனும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் இன்டர்நெட் சேவை மூலம் செயல்படுகிறது. இதனால், வங்கி ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டுக்கும், இன்டர்நெட் துண்டிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐ.எஸ்.டி.என்., சேவையில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே, வங்கியின் அனைத்து சேவைகளும் பாதிக்கும். பணம் இல்லை அல்லது இயந்திரத்தில் கோளாறு தவிர ஏ.டி.எம்.,கள் செயல்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே, 3 மாவட்டங்களிலும் மொபைல் இன்டர்நெட் மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை - ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

1527237865367.png


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ம் தேதி இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முதல் உலை மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

1527238542538.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையானது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சாதாரண உடையில் வாகனத்தில் ஏறி நின்று போலீசார் துப்பாக்கியால் சுடுவது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சரியான திட்டமிடல் மற்றும் தலைமை இல்லாததே தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு வழிவகுத்துள்ளது. போலீசார் தங்களது அடையாளத்தை மறைத்தது ஏன்?. சாதாரண உடையில் உள்ளவர்கள் கூட்டத்தில் கலந்து உளவு பார்ப்பது கிடையாது.



போலீஸ்  உடையில் இருந்து போலீசார் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும், சாதாரண உடையில் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. குறி பார்த்து திறமையுடன் சுடுபவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தொடக்க கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கூட்டத்தை கலைப்பதை விட தங்களை பாதுகாத்து கொள்வதற்காக போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியது போல் தோன்றுகிறது.

கட்டுக்கடங்காத கும்பலை கட்டுப்படுத்த ஒரு முறை துப்பாக்கிச்சூடு, ஒரு பலியே போதுமானது. 12க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல்படி போலீசார் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சி.பி.சி.ஐ.டி. மாற்றப்படும். அதன்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மணக்கோலத்தில் புதுமண தம்பதி மறியல்

1527238829255.png

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று காலை தண்டையார்பேட்டை சிக்னல் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

இதில் ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருது கணேஷ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது தண்டையார்பேட்டை சிக்னல் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த பாரி- தமிழரசிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் புதுமண தம்பதிக்கு அப்பகுதியில் மறியல் நடந்து கொண்டு இருக்கும் தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்த அவர்கள் மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுமண தம்பதியினர் பாரி-தமிழரசி ஆகியோர் தாங்கள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்களும் மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் போராட்டத்தை முடித்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு சென்றுவிட்டனர். இதுபற்றி புதுமாப்பிள்ளை பாரியிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது வருந்தத்தக்கது. இதனை கண்டித்து இன்று காலை அரசியல் கட்சியினர் திருமண மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்தோம். இதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.

எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த மனநிம்மதி ஏற்பட்டுள்ளது’ என்றார்.

புதுமண தம்பதியினர் சென்ற சிறிது நேரத்தில் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட எர்ணாவூர் நாராயணன், மருதுகணேஷ் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
தூத்துக்குடியில் அமைதி திரும்புகிறது

1527239065681.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் படை வர வழைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணித்தனர்.

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் மாற்றப்பட்டு உடனடியாக புதிய கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்றனர்.



ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்ததுடன் முதல் கட்டமாக ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

புதிய கலெக்டர் பொறுப்பு ஏற்றதும் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். மக்களுக்கு பால், குடிநீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

முதல் கட்டமாக தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் 2 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் நேற்று மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

இன்று அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு புதிய காய்கறிகள் வரத்தொடங்கியது. சிறு சிறு உணவகங்களும் திறக்கப்பட்டன. பால் வினியோகம் வழக்கம்போல் இருந்தது. பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டன.



ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. புறநகர் பகுதிகளான புதுக்கோட்டை, முத்தையாபுரம், ஸ்பிக் நகர், ஆத்தூர், முக்காணி, வாகைக்குளம், ஒட்டப்பிடாரம், குறுக்கு சாலை ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன.

ஸ்பிக், தெர்மல் உள்ளிட்ட ஆலைகளுக்கு வரும் லாரிகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தன. அவைகள் தொழிற்சாலைக்கு வரத் தொடங்கின. துறைமுக பணிகளும் முழுமையாக தொடங்கின.

இன்று காலை 10 மணிக்கு மேல் தூத்துக்குடியில் இருந்து பஸ்கள் ஓடத் தொடங்கின. இதற்காக டெப்போக்களில் இருந்த பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து முதலில் நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற ஊர்களுக்கும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார்- ஆட்டோ, இரு சக்கர வாகனங்களும் ஓடுகின்றன.



தூத்துக்குடியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று அது முடிவடைந்ததைத் தொடர்ந்து 27-ந்தேதி வரை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து வந்த போலீஸ் படை தொடர்ந்து தூத்துக்குடியிலேயே முகாமிட்டு உள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தூத்துக்குடியில் அமைதி திரும்பினாலும் முழு அமைதி ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை வெளி மாவட்ட போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
நீதிகேட்டு மண்ணில் சிந்திய ரத்தம் ஒரு போதும் உலராது! எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!






தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்..

ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் .
நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் போராடிய மக்களை இன்று வன்முறையாளர்களாக அரசு சித்தரிக்கிறது. ஜல்லிகட்டு போராட்டத்திலும் முடிவு இது போல தான் உருவாக்கபட்டது. அப்பாவி உயிர்களை கொன்று குவித்து வேட்டையாடுவது அநீதியின் உச்சம்.

நீதிகேட்டு மண்ணில் சிந்திய ரத்தம் ஒரு போதும் உலராது. குருதி கறை படிந்த மண் நீதியை அடைந்தே தீரும்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருந்த அரசை கண்டிக்கிறேன்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி நகர மக்கள் இன்றுடன்(சனிக்கிழமை) சேர்த்து 104-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது.

அதாவது, அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்கவேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது:-

இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியும், 23.3.2013, 9.4.2018 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ஏதாவது ஒரு அரசு அமைப்பு ஆலையை மூட உத்தரவிட்டால், மற்றொரு அமைப்பு மூலமாகவோ அல்லது மேல் முறையீடு மூலமாகவோ அனுமதி பெற்று ஆலையை நடத்தி வந்துள்ளனர். அது மட்டும் அல்ல அனுமதி இல்லாத நேரங்களில் கூட ஆலையை நடத்திய வரலாறும் உண்டு.

இது தவிர, ஸ்டெர்லைட் ஆலையின் மாசு கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மிகவும் தரக்குறைவாக உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பெரிய அபாயகரமான தொழிற்சாலைகளை சுற்றி 500 முதல் 1000 மீட்டர் அகலம் வரை பசுமை பட்டி வளர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 மீட்டர் மட்டும் போதும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் சலுகை அளித்துள்ளது.

இந்த 25 மீட்டர் அகல பசுமை பட்டிக்கூட ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அமைக்கப்படவில்லை.

அதிக காற்று மாசு உருவாக் கும் தொழிற்சாலைகள் மாசின் தாக்கத்தை குறைப்பதற்கான முக்கிய கட்டமைப்பு புகை போக்கி குழாய்கள் ஆகும்.

இதன் உயரம் சட்டப்படி 40 ஆயிரம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலைக்கு குறைந்தபட்சம் 70 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி குழாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால், 1996 முதல் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் புகை போக்கி உயரம் 60 மீட்டர் தான். இப்போது அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ள போதிலும் புகை போக்கியின் உயரம் அதிகரிக்கப்படவில்லை. இது குறைந்தபட்சம் 123 மீட்டர் உயரம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிதாக கட்டப்பட உள்ள இதே திறன் கொண்ட உருக்காலைக்கு 165 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி அமைக்கப்போவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது குறைந்த உயரம் கொண்ட புகை போக்கியின் காரணமாக காற்று மாசு சரியாக காற்றில் கலக்காமல், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் கலக்கிறது.

இவ்வாறு நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.


ஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாளில் இருந்து அனுமதி இன்றி இயங்கிய நாட்களின் விவரம் வருமாறு:-

* 1997 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)

* 1999 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை (49 நாட்கள்)

* 1999 டிசம்பர் 1-ந் தேதி முதல் 2005 ஏப்ரல் 18-ந் தேதி வரை (5 ஆண்டுகள், 4 மாதங்கள், 18 நாட்கள்)

* 2006 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)

* 2006 அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை (42 நாட்கள்)

* 2007 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை (36 நாட்கள்)

* 2007 அக்டோபர் 1-ந் தேதி முதல் 2009 ஜனவரி 1-ந் தேதி வரை (ஒரு ஆண்டு, 3 மாதங்கள்)

* 2009 ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை (4 மாதங்கள், 13 நாட்கள்)

* 2010 ஜனவரி 1-ந் தேதி முதல் 2011 ஏப்ரல் வரை (ஒரு ஆண்டு, 4 மாதங்கள்)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.