SaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விட&#2990

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உண்மை கண்டறியும் குழுவைக் கைதுசெய்த போலீஸ்!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, வழக்கறிஞர்கள் தலைமையில் சென்ற உண்மை கண்டறியும் குழுவை காவல்துறை கைதுசெய்துள்ளது.


தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அதை அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ கண்டுகொள்ளவே இல்லை. அதனால், போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் மட்டுமல்லாமல், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது 40 பேர் சிகிச்சைபெற்று வருகிறார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி கலவரம் தொடர்பாகப் பல்வேறு சமூக நல அமைப்பினரும் வழக்கறிஞர் குழுவினரும் விசாரித்துவருகிறார்கள்.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் மலரவன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி கலவரம்குறித்து உண்மை கண்டறியும் குழுவாக களநிலவரம் பற்றி விசாரித்துவருகிறார்கள். தூத்துக்குடியில் விசாரணை நடத்திய அந்தக் குழுவினர், துப்பாக்கிக்குண்டுக்குப் பலியான ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசனின் வீட்டிற்குச் சென்று, நடந்த சம்பவங்கள்குறித்துக் கேட்டறிந்தார்கள். அப்போது அங்கு சென்ற போலீஸார், உண்மை கண்டறியும் குழுவினரைத் தாக்கியதுடன், அவர்களைக் கைதுசெய்தார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மலரவன், ’’தமிழ்நாடு குடியுரிமைக் கழகம் சார்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசிவருகிறோம். நேற்றிரவு வழக்கறிஞர் சரவணன், சட்டக் கல்லூரி மாணவர்கள் கணேஷ்குமார், முனியசாமி, புதியம்புத்தூரைச் சேர்ந்த நன்னிபெருமாள், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவேந்தன், சமயன், முருகன் ஆகியோர், ராமச்சந்திரபுரத்தில் தமிழரசனின் குடும்பத்தினரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சென்ற புதியம்புத்தூர் காவல்துறையினர், அவர்களை அவதூறாகப் பேசியதுடன், அடித்து உதைத்து வேனில் ஏற்றிச் சென்றுள்ளார்கள். பின்னர், காவல்நிலையத்திலும் அவர்களைத் துன்புறுத்திய போலீஸார், அனைவரையும் கைதுசெய்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் காவல்துறையினர் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள்; அப்பாவி மக்களை போலீஸார் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்; நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களை அடித்து இழுத்துச்சென்று பொய் வழக்குப் போடும் அவலமும் நடக்கிறது.

உண்மை கண்டறியும் குழுவினரையே கைதுசெய்யும் அளவுக்கு அராஜகம் நடக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்குமாறு உறவினர்களை போலீஸார் நிர்ப்பந்திக்கிறார்கள். அதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் வழக்கறிஞர்கள், சமூக அமைப்பினர்மீதும் போலீஸார் ஆத்திரம் அடைந்து அடித்து உதைக்கிறார்கள். போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையால், தூத்துக்குடி மக்களிடம் பதற்றம் கூடியிருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலைமை’’ என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் - துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி


1528014773517.png

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார்.

துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியதாக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 22-ந்தேதி நான் தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்தேன். அந்த பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக நான் எதுவும் புகார் அளிக்கவும். ஆனால் நான் முன்பு பணிபுரிந்த திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நானும், எனது குடும்பத்தாரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே இதுபற்றி உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த கடிதம் காவல்துறை வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க செயலாளர் செந்தூர்ராஜன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் என்பவர் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து உள்ளன.

கோபால் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் புகார் அளிக்கவில்லை என மறுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வருவாய்த்துறை அலுவலர்களை இது போன்ற பொய்யான புகார் அளிக்க வற்புறுத்துவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பொய்யான பெயரை குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
துப்பாக்கி சூடு - தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் 2-வது நாளாக விசாரணை

1528015059946.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த பேரணியின்போது கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

துப்பாக்கி சூடு குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, இறந்தவர்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்த கார்த்திக், சண்முகம் ஆகியோர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், நேற்று மாலை அவர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றனர். பின்னர் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், “எங்களது விசாரணை அறிக்கையை ஓரிரு நாளில் மனித உரிமை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிப்போம்” என்றனர்.

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், மூத்த போலீஸ் சூப்பிரண்டுமான புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால் பகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த‌னர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தின்போது ஜன்னல், கதவுகள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டு இருந்ததையும், இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்து கிடப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலவரம் நடந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தீவைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

தேசிய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இன்று துப்பாக்கி சூடு தொடர்பான‌ பல்வேறு வீடியோ பதிவு காட்சி பதிவுகளையும் பார்வையிட்டனர். பின்பு பேரணி புறப்பட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மற்றும் மடத்தூர் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்த குழுவினர் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயமடைந்தவர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நாளை(திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகத்திலும் விசாரணை ஆணையம் செயல்பட இருக்கிறது.

இங்கு நீதிபதி அருணா ஜெகதீசனிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமான உறுதிமொழி பத்திரவடிவில் விசாரணை ஆணையத்தில் தலைமை அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வருகிற 22-ந் தேதி வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
ஆண்களைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும்..! தூத்துக்குடி ஆட்சியரிடம் பெண்கள் கோரிக்கை

துப்பாக்கிசூட்டுக்குப் பின் துாத்துக்குடியில், குடியிருப்புப் பகுதிகளில் போலீஸாரின் கைது நடவடிக்கையால் அச்சம் நிலவுவதாகவும் கைது நடவடிக்கையை நிறுத்திட வேண்டும் எனவும் பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


துாத்துக்குடியில், கடந்த , 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பின், மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் மறைந்து மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இருப்பினும், மாநகரின் முக்கியப் பகுதிகளில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு முழுமையாக விலக்கப்படவில்லை.
கடந்த திங்கள் கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை.

துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. 25-க்கும் குறைவானவர்களே ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களின் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

அதன் பின்னர் அப்பெண்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தூத்துக்குடியில் கடந்த, 23 ஆண்டுகளாக நச்சு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த மக்கள், கடந்த, 22-ம் தேதி நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றத்தைத் தணித்து அமைதி திரும்பிட வேண்டும். அப்பாவி மக்களை துப்பாக்கியால் சூட்டுக் கொல்ல உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தற்போது நடைபெறும் சட்டசபைத் கூட்டத் தொடரில், ஆலையை மூட வேண்டும் என, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 13 பேரின் நினைவாக நகரின் மையப்பகுதியில் நினைவுத்துாண் அமைக்கப்பட வேண்டும். இதில் துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியாலும் காயம்பட்டவர்களுக்கு, ரூ.20 லட்சம் நிவாரணம் அளிப்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் கால்களை இழந்த இரண்டு பேருக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும்.

இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில், வீடுகளுக்குச் சென்று தனியாக இருக்கும் பெண்களை மிரட்டியும், ஆண்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் காவல் துறையினரின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அதிகப்படியாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்க வேண்டும். இதனால், இயல்பான வேலைகளில் ஈடுபடமுடியவில்லை. அனைத்துக்கும் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது என உத்தரவாதம் அளித்து, ஆலையின் கட்டடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்' என்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
தூத்துக்குடியில் குண்டடிபட்ட 90 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை..! அதிர்ச்சி அறிக்கை

'இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடக்கநேர்ந்தாலும்
தீமையானதற்கு அஞ்சேன்!'

- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வருகின்றன. உறவினர்களின் கண்ணீர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மக்கள் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை என்பதைத்தான் தூத்துக்குடியிலிருந்து வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவுசெய்கின்றன. ஆனால் அரசின் தரப்பிலோ, `தூத்துக்குடி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது' என்கின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குப் பூட்டு போடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சித்தலைவர்களும் அமைச்சர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகும்கூட, தூத்துக்குடியில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 13-ஐத் தாண்டும் எனப் பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. உண்மையில், இன்று தூத்துக்குடி எப்படி இருக்கிறது? துயரம் பீடித்த அந்த மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டனரா எனத் தெரிந்துகொள்ள, தூத்துக்குடிப் போராட்டம் குறித்து கள அறிக்கை தயாரித்துவரும் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேனுடன் பேசினோம்.

'அமைச்சர்களும் தலைவர்களும், காயமடைந்த மக்களை மருத்துவமனைகளில் சந்தித்தனர்' என்று செய்திகள் வெளியாகின்றன. ஆனால், உண்மையில் வெளிவரவேண்டியவை அந்தச் செய்திகள் அல்ல. இதில் அடிப்படையாகவே சில முரண்கள் இருக்கின்றன. இவை பற்றிய கேள்விகள் எழுப்பப்படாமல் மறைக்கப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது 22-ம் தேதி. மே 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நகரத்துக்குள் 22-க்கும் அதிகமான ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருந்தார்கள். ஒரு ஏ.டி.ஜி.பி., நான்கு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., 15 எஸ்.பி இருந்தனர்.

அவர்கள் தயாரித்த தகவல்கள்தாம் இதுவரை வெளியான அனைத்தும். துணை வட்டாட்சியர் கொடுத்ததாகச் சொல்லப்படும் புகார், நமக்கு ஐந்து நாள்கள் கழித்தே தெரியவந்தது. எஃப்.ஐ.ஆர் பதிவதாக இருந்தால் 22-ம் தேதியே அல்லவா பதிவுசெய்திருக்க வேண்டும். ஆன்லைனில் இருக்கவேண்டிய அந்த எஃப்.ஐ.ஆர்., பிளாக் செய்யப்பட்டுள்ளது. க்ரைம் நம்பர் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை மறைக்கப்பட்டு, அவர்களுக்குத் தகுந்தாற்போன்ற `உண்மைகள்' தயாரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, ஐ.பி.எஸ் அலுவலர்களின் உத்தரவின் பேரில் பல எளிய மக்கள் தாக்கப்பட்டனர். கறுப்புச் சட்டை அணிந்து கோஷமிட்டவர்கள், போராட்டம் குறித்த செய்தியை முகநூலில் பரப்பியவர்கள் என அனைவரையும் வீடுவீடாகச் சென்று தாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்துச் சென்று சித்ரவதை செய்துள்ளனர்.

தகவல் சேகரிப்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு எங்கள் குழுவினர் நேரில் சென்றனர். அவர்கள் பேசவே அச்சப்படுகின்றனர். ஏதாவது தகவல் சொன்னால், போலீஸ் வழக்கு பதிவுசெய்து துன்புறுத்தும் என அவர்கள் பயப்படுகிறார்கள். அதில் நியாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பலரும் குண்டடி பட்டு காயத்துடன் வீடுகளில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட 90 பேரை நாங்கள் சந்தித்தோம். பலரும் சிறுவர்கள். அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.

மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களையும் போலீஸார் துன்புறுத்துவர் என அச்சப்படுகிறார்கள். உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், இயல்புநிலை திரும்பிவிட்டது என்பது எதன் அடிப்படையில் நியாயமாகும்? இங்கு உள்ள மக்களையெல்லாம் ஒன்றுதிரட்டி உண்மையான அறிக்கையைத் தயார்செய்துவருகிறோம். அந்த அறிக்கை தயாரானவுடன் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றார் ஆதங்கத்துடன்.

'இந்தத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், துணை வட்டாட்சியரின் உத்தரவின் பேரில்தான் நடந்தது' என்று செய்தி பரவுவதைப் பற்றி ஹென்றி திபேனிடம் கேட்டோம்.

"துணை வட்டாட்சியருக்கும் law&order-க்கும் என்ன சம்பந்தம்? பலர் தப்பிப்பதற்காக துணை வட்டாட்சியரின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அந்த மாவட்டத்தின் கலெக்டர் அல்லவா இதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். எங்கே சென்றார் அவர்? 144 தடை உத்தரவு போட்டவர் கலெக்டர். மக்கள் தடை உத்தரவை மீறி வரும்போது கலெக்டர் மாவட்டத்தில் இல்லாமல் ஏன் வெளியே சென்றார்? 144 தடை உத்தரவைப் போட்டுவிட்டு அவர் ஜமாபந்திக்காக கோவில்பட்டி செல்லவேண்டிய காரணம் என்ன? இவையெல்லாம் மறைக்கப்பட்டு, அந்த மஞ்சள் சட்டை அணிந்த காவலரை மட்டும் குற்றவாளி ஆக்குகிறார்கள்.

அந்தக் காவலருக்குச் சுட அதிகாரம் கொடுத்த டி.ஐ.ஜி-யும் அல்லவா அதற்குப் பொறுப்பு! ஆனால், அப்பாவி மக்கள் தாக்கினார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். தாக்க வேண்டும் என முடிவுசெய்த மக்கள், இவ்வளவு நாள் காத்திருந்தா தாக்குவார்கள்? காவல் துறையைச் சேர்ந்த பலர் மாற்று உடையில் இருந்தார்கள். அந்தத் தகவல் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரும். அப்போது தெரியும் யார் கலவரத்துக்குக் காரணம் என்று; யார் வாகனங்களைக் கொளுத்தினார்கள் என்று'' என வேதனையுடன் கூறிய ஹென்றி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விரிவான அறிக்கை தயார்செய்து வருகிறார்.

ஒவ்வொரு போராட்டத்தின்போது நோக்கம் நிறைவேறியபோதும், போராட்டம் சதை கிழிந்து விழும் ரத்தத்தோடுதான் முடித்துவைக்கப்படுகிறது. காயம்பட்டவர்கள், உடைமையை இழந்தவர்கள் நியாயம் கிடைக்காமலே காலம் கடக்கிறார்கள். பிரச்னையின் சூடு குறைந்தவுடன் எல்லாம் மூடி மறைக்கப்பட்டுவிடும். ஆனால், உண்மையை நீண்ட நாள் புதைத்து வைக்க முடியாது. நியாயம் கிடைத்தே தீரும்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டார் டிஜிபி - 72 போலீசார் காயமடைந்ததாக தகவல்

1528354715891.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின்போது 72 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
ஸ்டெர்லைட் அதிகாரி அறிவிப்புக்கு தூத்துக்குடி மக்கள் கண்டனம்- போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை

1528355055481.png

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டமும், பரபரப்பும் உண்டானது.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்டு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக தூத்துக்குடி வந்து விசாரணை மேற்கொண்டன.

இதே போல நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவும் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தின. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முதல் கட்டமாக ஆலைக்கு மின்சாரம் வழங்குவது மற்றும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டன.

இதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.

இது தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று அந்த நிறுவன அதிகாரி கூறியிருப்பது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சனையில் 13 பேரை இழந்து விட்டோம். நல்ல காற்று, குடிநீர் கிடைக்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையால் படும் துன்பம் சொல்லி மாளாத நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியுள்ளது. எனினும் இதுபற்றி சட்டமன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை குறித்த தீர்மானம் நிறைவேற்றி ஆலையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் ஏற்பட்டு பலர் இறந்து விட்டார்கள். குடிநீர் மாசுபட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் இறந்து விட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கை, கால்கள் முடமாகி உள்ளனர். தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டமான நிலையில் காணப்படுகிறது.


தமிழ் மாந்தன், மகேஷ்
இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆலையை திறப்போம் என ஆலை நிர்வாகம் கூறியிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு முழுமையான தீர்வை காணவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன் கூறியதாவது:-

துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த வேதனை இன்னும் தீரவில்லை. கொந்தளிப்பு அடங்கவில்லை. மக்கள் மனதில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது சாத்தியமல்ல என கூறியிருந்தார். அனில் அகர்வால் கோர்ட்டு உத்தரவு பெற்று திறப்போம் என தெரிவித்தார்.

இதைவைத்து பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே உடன்பாடு இருப்பது போல் தெரிகிறது. தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது பூட்டு போடும் விழா போல நடந்துள்ளது.

எனவே சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: டெல்லியில் அதிகாரி பேட்டி


1528404951193.png

வேதாந்தா நிர்வாகத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கு நிருபர்கள் அவரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரம் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் தற்போது போராட்ட அனல் வீசி வருகிறது. அந்த அனல் ஓய்ந்த பிறகு நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம். அந்த பகுதி மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் எங்களை பற்றி தவறான செய்திகள் தரப்படுகின்றன. தமிழக அரசு எங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த உண்மைகளை விரைவில் மக்களிடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். எங்கள் நிறுவனம் எப்போதும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கும்.

எங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் எங்கள் ஆலையில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு அமிலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பதுதான். உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் எதையும் நாங்கள் காற்றில் கலக்க விடுவது இல்லை. தூத்துக்குடி பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு அமிலம் மிகவும் அதிகமாக உள்ளது.

எங்கள் ஆலையில் கழிவாக வெளியேறும் கந்தக அமிலத்தை நாங்கள் வணிக ரீதியாக மாற்றி அதை நாங்கள் விலைக்கு விற்கிறோம். அதை நாங்கள் காற்றில் கலக்க விடுவது இல்லை. அதனை விற்று காசாக்குகிறோம்.

ஆனால் கந்தக அமிலத்தை அதிகமாக வெளியிடும் அனல் மின்நிலையங்கள் அதனை வர்த்தக ரீதியாக விற்பது இல்லை. காற்றில் கலக்க விடுகின்றன. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை காட்டிலும் அதிகமான சுற்றுச்சூழல் மாசு இந்த அனல் மின்நிலையங்களால்தான் ஏற்படுகின்றது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவினால் புற்றுநோய் ஏற்படும் என்பது தவறான செய்தி ஆகும்.

எங்கள் ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து மறு உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறோம்.

எங்களுக்கு எதிராக மிகவும் தவறான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். சமூக விரோதிகளும், வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் சில தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து நாட்டில் கலகம் விளைவிக்கிறார்கள்.

எங்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரங்களை முறியடித்து பிரச்சினையை சட்டரீதியாக அணுகி, ஸ்டெர்லைட் ஆலையை ஒருசில மாதங்களில் மீண்டும் திறப்போம்.

இவ்வாறு தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறினார். அப்போது ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 25 லாரிகள் மூலம் 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

1529565007898.pngதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்ப‌ட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையிலான குழு மூலமாக ரசாயன கசிவை உறுதி செய்தார். குடோனில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் கசிவாகி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை குடோனில் இருந்து கசிவான கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்தன. பிரத்யேக பாதை மூலமாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நிபுணர் குழு மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை 15 டேங்கர் லாரிகள் மூலம், சுமார் 350 டன் எடையுள்ள கந்தக அமிலம் அகற்றப்பட்டது. நேற்று மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் மேலும் 100 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

அகற்றப்பட்ட கந்தக அமிலத்தை கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனவே, அந்த ஆலைகளுக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இன்று காலையில் மேலும் 5 லாரிகள் ஆலைக்குள் சென்றன. அந்த லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் நிலவரப்படி சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அமிலத்தை டேங்கர் லாரிகளில் நிரப்பி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் கந்தக அமிலம் உடனுக்குடன் வெளியில் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முழுமையாக அகற்ற திட்டமிட்டுள்ளோம்” என்றார்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
பசுமை வழி சாலை துயரங்கள்!
சேலம் டூ சென்னை அமையவிருக்கும் 8 வழிச் சாலையால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு தவியாய் தவித்துப்போய் உள்ளனர்.


''பார்த்துப் பார்த்து செதுக்கி விளை நிலமாக மாற்றி வைத்துள்ள நிலத்தைச் சாலை அமைக்கின்றோம் என்று தடாலடியாக அளவீடு செய்து கற்களை நட்டு அடித்துப் பிடுங்க பார்க்கின்றனர்.


ஏன்.... எதற்கு.... என்றுகூட கேட்க இந்த நாட்டுல நாதி இல்லாமல் போயிடுச்சி... மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா கைவிட்ட 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தத் துடியாய் துடிப்பது ஏன் என்று தெரியவில்லை..." என்று கண்ணீர் வடிக்கின்றனர் பசுமை வழிச் சாலையால் நிலங்களை இழக்கும் விவசாயிகள்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்துள்ள இருளப்பட்டி கிராமத்தில் பசுமை வழிச் சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்களிடம், ''எனது அனுமதி இன்றி அளவீடு செய்தால், பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்துகொள்வேன்'' என்று கூறி அதிகாரிகளைத் திருப்பி அனுப்பிய சந்திரகுமாரை சந்தித்துப் பேசினோம்... ''15 வருடங்களுக்கு முன்பு பொழப்பு நடத்த வழியில்லாமல் சேலம் இளம்பிள்ளையிலிருந்து இங்க குடிபெயர்ந்தோம். அப்போது எங்க வீட்டம்மாவின் நகை நட்டுகளை எல்லாம் விற்று இந்த 3 ஏக்கர் பூமியை விலைக்கு வாங்கி எங்க மொத்தக் குடும்பத்தின் உழைப்பால் இன்று பொன்விளையும் பூமியாக மாற்றி அமைத்தோம். இன்றைக்கு எங்கள் நிலத்தில், தென்னை, பாக்கு மற்றும் தேக்கு மரங்கள் வளர்ந்து, நிறைந்திருக்கின்றன. இது அத்தனையும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் 15 ஆண்டுகால உழைப்பு.

இப்போது திடீரென்று வந்து, 'ஒரேயடியாக இதையெல்லாம் விட்டுப் போ' என்று விரட்டினால் நாங்கள் எங்கே போய் நிற்பது? இந்த நிலத்தை நம்பித்தான் 7 ஜீவன்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இது அரசாங்கத்துக்குத் தெரியுமா..?


இன்னும் வீடு கட்டின கடனையே முழுசா அடைக்கவில்லை. அதற்குள் 'நிலத்தையும் வீட்டையும் சாலைக்காக எடுக்கிறோம்' என்று சொன்னால், எங்கள் வலியையும் வேதனையையும் வார்த்தைகள் மூலமாக சொல்ல முடியாது. ஏன் என்றால், இந்த நிலத்தை நம்பித்தான் இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணமும், இரண்டு பசங்களின் எதிர்காலமும் உள்ளது. ஏர் கலப்பை எடுத்து விவசாயம் செய்துவந்த எங்கள் கையில் பெட்ரோல் கேன் எடுக்க வைக்கிறாங்களே ஆட்சியாளர்கள்'' என்று கதறியழுகிறார் சந்திரகுமார்.


காளிப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ஜெயா தனக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ''எங்களின் அனுமதியின்றி நிலத்தை அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிப்பேன்'' என்று பெட்ரோல் கேனை காட்டி மிரட்டித் திருப்பி அனுப்பினார்.

ஜெயா நம்மிடம் பேசும்போது, ''எங்களுக்கென்று இருப்பது இந்த 3.20 ஏக்கர் நிலம் மட்டும்தான். இதுதான் எங்கள் வாழ்க்கை. இதுதான் எங்கள் எதிர்காலம். எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் அழிக்க நினைப்பது சரியா...? கரும்பும், நெல்லும் விளையும் இந்தப் பூமியை சாலை அமைக்கக் கொடுத்துவிட்டால், வரப்போகும் பசுமை வழிச் சாலையில்தான் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டும். கணவரின் மறைவுக்குப் பிறகு நம்பிக்கையோடு வாழ வைத்தது இந்த நிலம்தான். உயிரே போனாலும் இந்த நிலத்தை விடமாட்டேன்'' என்றுகூறி அழுது கண்ணீர் வடிக்கிறார்.


தர்மபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் பகுதிகளில் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தங்கள் உடையில், கருப்பு பேட்ஜ் அணிந்துகொள்வதோடு நிலத்திலும் கருப்பு கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், நிலத்தை அளவீடு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.


ஆனால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எதிர்ப்பை அடக்க இருளப்பட்டி வி.ஏ.ஒ கதிரவன் மூலம் ஏ.பள்ளிபட்டி ஸ்டேஷனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்ய வைத்துள்ளது. அதாவது, 'பசுமை வழிச் சாலைக்காக அளவீடு செய்ய சென்றபோது சந்திரகுமார் காவலர்களை மிகவும் அவதூறாகப் பேசியதாகவும், காளைகளை அவிழ்த்துவிட்டு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளையும், போலீசையும் தாக்க முயற்சி செய்தார்' என்றும் இந்தப் புகார் சொல்கிறது. 'இது தொடக்கம்தான்... இதுபோல தொடரும்' என்கின்றனர் காக்கிகள் தரப்பில்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.