Senses - ஐம்புலன்களை ஆராதிப்போம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஐம்புலன்களை ஆராதிப்போம்!

[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
உலகைக் காணக் கண்கள், இசையை ரசிக்கக் காதுகள், வாசத்தை நுகர மூக்கு, சுவையை உணர நாக்கு, ஸ்பரிசத்தை உணர சருமம் என ஐம்புலன்களும் துய்க்கும் இன்பங்கள் ஏராளம். இவற்றைப் பற்றி மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குமரேசன், மனநல நிபுணர் திருநாவுக்கரசு, குழந்தைகள் மன நல மருத்துவர் பி.பி.கண்ணன் ஆகியோர் தரும் கருத்துகளின் தொகுப்பு இங்கே...

1. ஒலி
ஒலி எழுப்பும் அதிர்வு நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பக் கூடியது. பிடித்த ஒலிகளைக் கேட்கும்போது உற்சாகம் பிறக்கும். உணர்வு செல்கள் வளர்ச்சி அடையும். சேதமடைந்த செல்களை மீள்கட்டமைப்புச் செய்து சுறுசுறுப்பாக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. இசைக் கருவிகளைக் கேட்கும் போது ஆற்றல் அதிகரிக்கும். ஹம்மிங் மற்றும் சான்டிங் போன்ற மந்திர ஒலிகளைக் கேட்கும்போது இதயத் துடிப்பு சீராகும். மூளை புத்துணர்வு பெறும். அம்மா, அப்பா, சகோதர - சகோதரி போன்ற உரிமை உள்ளவர்களின் குரல்களைக் கேட்கும்போது மன அழுத்தம் மறைந்து போகும்.


2.நுகர்வு

மாதவிடாய் நிற்கப்போகும் நிலையில் இருக்கும் பெண்கள், மலர்களை நுகர்ந்து பார்த்தால், வலிகள் மறைந்து, மனநிலையில் மாற்றம் தெரியும். ஆரஞ்சு, பெப்பர்மென்ட் வாசம் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும். மல்லிகை, ரோஜாப் பூக்களின் வாசம் தன்னம்பிக்கை தந்து, திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கும். பனிமூட்டமான விடிகாலையில் வீசும் சுத்தமான காற்று புத்துணர்வு தரும். எதையும் சாதிக்க முடியும் என்ற உணர்வு மேலிடும். துளசிச் செடியின் வாசம் அர்ப்பணிப்புக் குணத்தை அதிகரிக்கச் செய்யும். பூஜை அறையில் இருந்து வரும் சாம்பிராணி, ஊதுவத்தி, சந்தன வாசம் மனதில் அமைதியைத் தந்து, வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். எலுமிச்சை, நார்த்தங்காய், கிடாரங்காய் போன்றவற்றின் வாசனை வாந்தி, குமட்டல் வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும்.

3.பார்வை
பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்கும்போது மன வேகம் சீராகும். பார்வையானது நரம்பு மண்டலம் விழிப்புடன் இருக்க உதவுகிறது. ஏகாந்த இரவில் ஆகாயத்தை ரசிப்பதன் மூலம் கற்பனைத் திறன் அதிகரிக்கும். வாழ்வின் மீதான பிரமிப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பச்சைப் பசேல் என இயற்கைச் சூழல், வயல் வரப்புகள் மனதை லேசாக்கி, சந்தோஷத்தை தரும். உள்ளத்தில் உற்சாகம் பீரிடும். இருட்டில் ஓர் அகல் விளக்கு அல்லது மெழுகுவத்தியை ஏற்றி, சிறிது நேரம் உற்றுப் பார்த்தால், எண்ணச் சிதறல் நீங்கித் தெளிவு பிறக்கும். கடல் அலைகளைப் பார்க்கையில் ஆனந்தம் தாண்டவம் ஆடும். உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் தொடங்கும்.

4.தொடுதல்
கை கொடுப்பது என்பது, ஒரு சமூக உறவாடலுக்கானதுதான். நட்புரீதியாகக் கை கொடுப்பதன் மூலம் நட்பு பலப்படும். கை குலுக்கும்போதே சிலர் மற்றொரு கையையும் சேர்த்துப் பிடித்துக்கொள்வார்கள். இதன் மூலம் 'நான் இருக்கிறேன் உனக்கு’ என்ற ஆதரவையும் பலத்தையும் காட்டுவதாக இருக்கும். உள்ளுக்குள் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் காலை மற்றவர் மசாஜ் செய்யும்போது ஏற்படும் தொடு உணர்ச்சியினால் இதயத் துடிப்பு சீராகும். அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். அழும் பிள்ளைகளை இரண்டு கைகளால் அரவணைத்தாலே போதும்... குழந்தை அழுகையை நிறுத்தும். லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தரும்.

5.சுவை

புளிப்புச்சுவை உள்ள மிட்டாய்கள் நாக்கு, தொண்டை மற்றும் மூக்குப் பகுதி நரம்புகளைத் தூண்டி வலுவடையச் செய்வதுடன் பசியையும் தூண்டும். பிடித்தவற்றைச் சுவைக்கும்போது ஆற்றல் அதிகரிக்கும். 'சுவிங் கம்’ மெல்லுவதால் சிலருக்கு பயம் மறைந்து தைரியம் வரும். இதய ஓட்டத்தையும் நரம்பு மண்டலத்தையும் சீராக்கும். முகத் தசைகளுக்கும் நல்லது. அறுசுவையை அளவோடு எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் பெருகும். துவர்ப்புச் சுவை, ரத்தத்தைப் பெருகச் செய்யும். இனிப்பு, தசை வளர்ச்சிக்கு உதவிடும். கசப்பு, நரம்புகளைப் பலப்படுத்தும். உவர்ப்பு, உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும்!
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.