Sidhdha maruththuvam

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
வயிற்றுப்பூச்சி ஒழிய:

மாங்கொட்டைப் பருப்பை நன்கு வெயிலில் காய வைத்துப் பொடியாக்கி, ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாளில் இரண்டு வேளை சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சி அழியும்.


2. தொண்டை வலி குறைய:


விளக்கெண்ணெயும், சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் பூசினால் தொண்டை வலி குணமாகும்.


3. புத்துணர்ச்சி பெற:


துளசி இலைகளைச் செம்புப் பாத்திரத்தில் இரவு முழுக்க நீரில் ஊர வைத்த பின் காலையில் அந்த நீரை எடுத்துக் குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.


4. உடல் எடை குறைய:


வாழைத் தண்டுச் சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றைத் தினமும் குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும், நம் உடலும் அழகு பெறும்.


5. நெஞ்சுவலி தீர:


இரண்டு பேரீச்சம்பழத்தை மதிய நேரம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.


6. முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர:


கருவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணெய் காய்ச்சி இவ்விரண்டையும் கலந்த கலவையைத் தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும்.


7. உடல் எடை அதிகரிக்க:


தினமும் இரவு படுப்பதற்கு முன்பு பேரீச்சம்பழத்தை நன்கு மென்று சாப்பிட்ட பின், பால் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.


8. ஞாபகசக்தி பெருக:


பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும்.


9. மூச்சிரைப்பு குறைய:


சுக்கு, மிளகு, கிராம்பு, பச்சைக் கற்பூரம் ஆகிய இவைகளைச் சம அளவு இடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் சிறு பொட்டலமாக வைத்து முகர்ந்து வர மூச்சிறைப்புக் குறையும்.


10. தேமல் சரியாக:


கமலா ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து வந்தால் தேமல் சரியாகும்
courtesy-----siragugal
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
சிறந்த சித்த மருத்துவ குறிப்புகளை தந்து எங்களுக்கு மிகவும் உதவி செய்துள்ளீர்கள் மிக்க நன்றி திரு கேசவன்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
பகிர்வுக்கு மிக்க நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.