Silence: A Relationship Killer - குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்போர்


தவறான பழக்கங்கள் நம்மிடையே இருக்கின்றன. அந்த பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும்! சில தம்பதிகள் சின்னச் சின்ன சச்சரவுகளில் கூட சிலர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு திரிவார்கள்.

எதற்காகவும் பேசிக்கொள்ளாமல் மவுனமாகவே செல்வார்கள். அப்படி ஒருவர் பேச்சுக்கு மற்றவர் பதிலளிக்காமல் மவுனம் காத்தால் (இங்கே மவுனம் சம்மதம் ஆகாது) அதுவே அவரை அவமதித்தது போலாகிவிடும். பிரச்சினையை மேலும் பெரிதாக்கி பிளவை உருவாக்கிவிடும். சுமுகமான பேச்சு செய்யும் வேலையை மவுனங்கள் சிலநேரம் செய்வதில்லை என்பதே உண்மை.

இன்னும் சிலர் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள். ‘ஆமாம்’, ‘இல்லை’, ‘…ம்ம்’, ‘ம்ஹ¨ம்’ என்று ஒற்றை வார்த்தையில் பேசிக் கொண்டிருப்பது நம்மிடம் பேசுபவரை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். இதுவும் தவறான பழக்கம். புரியும்படியாக பேசித் தீர்த்துக் கொண்டால் சுபம் கூடும்.


 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
re: Silence: A Relationship Killer - குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்

Nice sharing, Letchmy.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#3
re: Silence: A Relationship Killer - குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்

அட போங்க சிஸ், என்னோட அபிப்ப்ராயத்துல, மௌனமா இருந்தாலே பாதி போர் உருவாகாது.


-இப்படிக்கு வாய வச்சிக்கிட்டு அமைதியா இருக்கத்தெரியாத ஒரு அ(ட)ப்பாவி:rolleyes:
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#4
re: Silence: A Relationship Killer - குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்

அட போங்க சிஸ், என்னோட அபிப்ப்ராயத்துல, மௌனமா இருந்தாலே பாதி போர் உருவாகாது.


-இப்படிக்கு வாய வச்சிக்கிட்டு அமைதியா இருக்கத்தெரியாத ஒரு அ(ட)ப்பாவி:rolleyes:
ஹஹஹா உண்மைதான் ரதி.....நானும் இதை வழிமொழிகிறேன்:bigsmile:
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#6
re: Silence: A Relationship Killer - குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்

அட போங்க சிஸ், என்னோட அபிப்ப்ராயத்துல, மௌனமா இருந்தாலே பாதி போர் உருவாகாது.


-இப்படிக்கு வாய வச்சிக்கிட்டு அமைதியா இருக்கத்தெரியாத ஒரு அ(ட)ப்பாவி:rolleyes:
மௌனமாக எப்ப இருக்கணும் ............காரசாரமாக விவாதிக்கும்போது ...........தப்பு என்றாலும் மௌனமாக வாங்கி கொள்ளனும் ..............அப்புறம் ரெண்டு நாள் கழித்து சுமுகமான நிலையில் தவறைச் சொல்லணும் .............நம்ம மேலே தப்புன்னாலும் ...........பேசாமல் போய்டணும்
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#7
re: Silence: A Relationship Killer - குடும்ப உறவுகளை பாதிக்கும் மவுனப்

மௌனத்தை ஆயுதமாக்க கூடாது ...........மனது விட்டு பேசினாலே பாதி துன்பம் ,சண்டை போய்டுமே .............nice sharing .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.