Simple Steps for Weight Loss - உடல் எடையை குறைக்க சுலபமான வழி

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
உடல் எடையை குறைக்க சுலபமான வழி

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் பயந்து போவார்கள்.

நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீண்டு கொண்டே போகும். இன்னொரு புறம் தேவையில்லாத நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி உண்டபின் எடை கூடியபிறகு `டயட்’ என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு.

மருந்து, சத்துமாவு, பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழங்களை மட்டும் உண்ண வேண்டும். அப்பிள், அன்னாசி, மாதுளை என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 கோப்பை பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள் சிறிதளவு அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 கோப்பை தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

ஏழாவது நாள் கொஞ்சம் சோறு காய்கறிகளுடன், பழ ரசம் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் முடிந்தது.

8-ம் நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
hi nisha,
neenga solra tips padi 7 days follow panni idai kuraithaalum... aduthadutha naatkalil palayabadi thirumbi vidumbodhu munnai vida idai adhigarikkadhapa... idhu en chinna doubt.....
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
Hi anitha,

ungal doubt sariyanathu dhan ma, naam ithai daily thodarnthu follow pannitu vanthale namakku antha unavu palakame palagi poidum, then namma weight um reduce aidum, nutritious foods sappidurathum palakam aidum la ma.
 
Joined
Nov 22, 2011
Messages
3
Likes
1
Location
Malaysia
#4
நீங்க சொல்வது எல்லாம் ஒரு வேலைக்குறிய சாப்படுகளா?? அல்லது இதனை காலை மாலை இரவு நேரங்களில் எந்த வேளையில் சாப்பிட வேண்டும்??
 
Joined
Jun 18, 2012
Messages
2
Likes
0
Location
US
#5
Hi all,
i m a new member. This 7 day diet is called GM diet. Definitely the weight will come back once the 7 diet is over. You cannot follow this diet continuously because it makes deficiency of some nutrients and it will create more side effects. As per the diet, they say you have to give atleast 3 days gap before you start another round of diet.

I tried once but it was too difficult to follow this diet. finally i dint reduce my weight. :-( ... i m not going to do this anymore.....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.