Simple Weight Loss Tips - எடை குறைய எளிய டிப்ஸ்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஊளைச்சதை குறையும்.

வெள்ளை வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கிச் சாப்பிட்டாலும் உடல் பருமன் குறையும்.

அரை கிலோ கொள்ளுப் பயறை வாங்கி, சுத்தப்படுத்தி, வாணலியில் எண்ணெயில்லாமல் வறுத்து, மிஷினில் மாவாக்கவும். தினமும் மூன்று டீஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்து, ஆறியவுடன் உப்பு, மோர் போட்டுக் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும். (பால் வேண்டாம்).

வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்

எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள்? அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள்.

அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? சரி, சர்க்கரையைத் தவிருங்கள். மிகக் கடினமாகத் தோன்றுகிறதா?

அழகான, ‘சிக்’கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள்.


அடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள்.

கூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).

சிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை, போன்றவற்றைச் சாப்பிடவும்.

இனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப்புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#2
எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது

கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்…’ என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

கொள்ளு- பருப்பு பொடி
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 1/2 கப்
மிளகு – 20 மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்


செய்முறை
* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.
* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.


உபயோகிக்கும் முறை
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.
சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.
பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி’ சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#3
நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்

சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
#வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்

‘யானைக் கொழுத்தால் வாழைத் தண்டு கொடு’ என்பது பழமொழி. யானைக்கு மதம் பிடிப்பது மிதமிஞ்சிய கொழுப்பால். அந்தக் கொழுப்பைக் கரைத்து சம நிலைக்குக் கொண்டு வரும் ஆற்றல் படைத்தது வாழைத்தண்டு.
வாழைத் தண்டு நம் உடலிலுள்ள கொழுப்பை அறவே நீக்கிவிடும்

வாழைத்தண்டு சூப்


வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் எடை குறையும்

முருங்கைக் கீரை சூப்

நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில்

சின்ன வெங்காயம் - 4
மிளகு - 10
சீரகம் - 5 கிராம்

பூண்டு - 2 பல் போட்டு கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப்பாக காலை உணவுக்குப் பின் மதிய உணவுக்கு முன் 2 கப் அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைக் கீரை சூப் மிகவும் நல்லது. உடலுக்குத் புத்துணர்ச்சியைத் தரும் மேலும் கண் பார்வை தெளிவாகும்.எடை குறையும்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#4
வெந்தயக் கீரை சப்பாத்தி:

வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு:

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#5
அன்னாசி பழ பச்சடி:

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.


வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும்.

பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்

லெட்டூஸ் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பையைக் குறைக்கலாம்.

லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.


உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.

முள்ளிக் கீரை சாறு எடுத்து அதில் நெல்லிக்காயை ஊற வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#6
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.

பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.

நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரையும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,501
Likes
3,101
Location
India
#7
Eggplant a Good Food for Weight Loss

Eggplant is a great food to help you lose weight. Eggplant is a low-carb, nutrient-dense, calorie-poor food, meaning that it contains high levels of nutrients but not a lot of calories or carbohydrates. One cup of eggplant contains only eight grams of carbohydrates, two of those coming from fiber. It is also a low glycemic food, meaning that the small amount of carbohydrates in eggplant doesn't cause much of an impact on your blood sugar levels (another key for optimizing weight loss).

If you're looking for a great way to prepare eggplant, here is a healthy recipe

Middle Eastern Inspired Eggplant
Ingredients:

2 large eggplant, peeled and cut into ½-inch cubes

1 small onion, small dice

2 cloves garlic, minced

1 14 oz can whole plum tomatoes

Olive oil
2 Tbps tomato paste

1 ½ T Garam Masala

1 T Madras curry powder

¼ t ground clove

2 Tbsp balsamic vinegar
1 Tbsp honey

½ cup chicken broth

Servings: 4


Directions:
Add olive oil to coat the bottom of a large, hot skillet. Add onion and eggplant, salt and pepper generously. Add garlic and toss frequently until the eggplant has a little color to it. Next add the tomato paste, allowing to heat and toast just a bit from the heat of the pan. Pour in [COLOR=blue !important][FONT=inherit !important][COLOR=blue ! important][FONT=inherit ! important]balsamic[/FONT][/FONT][/COLOR][/COLOR] vinegar and heat until the liquid reduces by half. Stir in the spices, honey and raisins. Add tomatoes, crushing by hand as adding, reduce heat to a simmer. Add chicken broth and allow the dish to simmer until thickened to almost a stew consistency. Taste and adjust to liking.


Nutrition Information (per serving): 150 calories, 4 gram fat, 29 grams carbohydrates, 10 gram fiber, 5 grams protein
 
Last edited:

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,501
Likes
3,101
Location
India
#8
Egg plant water for weightloss
[h=2]Method[/h] To make eggplant water, slice up one or two whole eggplants into bite-sized pieces. Japanese eggplants may release more water than conventional American eggplants, according to the University of California at Davis.

Heat a large pot of water until the water boils, and drop in the eggplant slices. Boil for five to 10 minutes, and reserve the water.

Drain the eggplant pieces and reserve for later use. After you cool the water, you can drink it throughout the day. Some people drink about 8 oz. daily, but others prefer to have up to 60 oz. or more.

[h=2]Considerations[/h] Before using eggplant water as a weight loss aid, speak with your physician to discuss the details and potential effectiveness of the strategy.
 
Joined
Oct 8, 2012
Messages
10
Likes
8
Location
USA
#9
Here are some weight loss tips shared by me..
1. Don’t skip any meals
2. Learn about how to prepare foods Instead of deep frying, try grilling, stir frying, microwaving and baking.
3. Avoid a lot of sugar and use to little as you can.
4. Increase the use of water
5. Use freash fruits and vegetables
6. Use salads
7. Decrease the use of the Fats
8. Take exercise daily
9. Try to walking and cycling daily.
10. Have a cup of green tea daily after the launch.
 
Joined
Oct 8, 2012
Messages
10
Likes
8
Location
USA
#10
Here are some weight loss tips shared by me..
1. Don’t skip any meals
2. Learn about how to prepare foods Instead of deep frying, try grilling, stir frying, microwaving and baking.
3. Avoid a lot of sugar and use to little as you can.
4. Increase the use of water
5. Use freash fruits and vegetables
6. Use salads
7. Decrease the use of the Fats
8. Take exercise daily
9. Try to walking and cycling daily.
10. Have a cup of green tea daily after the launch.


Read more at: http://www.penmai.com/forums/weight-loss-diet-guide/36749-simple-weight-loss-tips.html#ixzz299wZXWCN
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.