Solution for irregular Menstrual Cycle - ‘சீரற்ற மாதவிலக்கு... சிக்கலுக்கு த&#3008

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
‘சீரற்ற மாதவிலக்கு... சிக்கலுக்கு தீர்வென்ன?’

மகப்பேறு மருத்துவர் எஸ்.பாமா.

''பொதுவாக மாதவிடாய் பிரச்னை பற்றிப் பேசுவதில் உள்ள தயக்கத்தை, அனைத்துப் பெண்களுமே தள்ளி வைக்க வேண்டும். சீரற்ற சுழற்சி, அதிக ரத்தப்போக்கு, அதிக நாட்களுக்கு ரத்தப்போக்கு, மாதவிலக்கு நாட்களில் இயல்புக்கு மீறிய வயிற்று வலி, மெனோபாஸ் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.

பொதுவாக, 21 நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் ஏற்படும் மாதவிலக்கு இயல்பானது. ஆனால், இன்றைக்கு அதிகமானோர் இது தள்ளிப் போகும் பிரச்னைக்கு ஆட்படுகிறார்கள். காரணம், உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறை மாற்றமும்தான்.

வயதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், பருமனா, ஒல்லியா என்று உங்கள் உடல்வாகு பற்றி குறிப்பிடவில்லை. நீங்கள் குண்டாக இருந்தால், தைராய்டு பிரச்னை காரணமாக, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போயிருக்கலாம். உடனடியாக தைராய்டு பரிசோதனை அவசியம். நீங்கள் ஒல்லியாக இருந்தால், உங்கள் சினைப்பையில் உள்ள நீர்க்கட்டி காரணமாக இந்தப் பிரச்னை வரலாம். இதற்கான பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். இவை இரண்டும்தான் மாதவிலக்கு தள்ளிப்போவதற்கு பிரதான காரணங்கள்.


தைராய்டு பிரச்னையை மாத்திரை மருந்துகளாலும், சினைப்பையில் நீர்க்கட்டி என்றால் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சியாலும் குணப்படுத்தலாம். எப்படி இருந்தாலும், உடனே மகளிர் நல மருத்துவரை அணுகுங் கள். இல்லையென்றால், இப்பிரச்னை தீவிர மடைந்து குழந்தைப் பிறப்பு வரை சிக்கலை ஏற்படுத்தலாம்.

எல்லாப் பெண்களுமே தினம் 45 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வதும், பச்சைக் காய்கறிகளையும், கீரை, முளைகட்டிய பயிர்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதும், மா, பலா, வாழை தவிர்த்து தினம் ஒரு பழம் கட்டாயம் எடுத்துக்கொள்வதும் நல்லது. இதையெல்லாம் பூப்பெய்திய நாள் தொடங்கி கடைப்பிடித்து வர, மாதவிலக்கு மட்டுமல்ல... பெண்களின் ஆரோக்கியமும் சீராக இருக்கும், ஆயுள் முழுக்க!''
 
Last edited:

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#3
Re: Solution for irregular Menstrual Cycle - ‘சீரற்ற மாதவிலக்கு... சிக்கலுக்கு த&a

Thanks for sharing lakshmi akka.........
 

mahimana

Friends's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
323
Likes
799
Location
kalmunai
#4
Re: Solution for irregular Menstrual Cycle - ‘சீரற்ற மாதவிலக்கு... சிக்கலுக்கு த&a

thank you for sharing sis......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.