Spare time for elderly people - காது கொடுத்து கேளுங்களேன்! காதோரம் &#2

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1

என் அலைபேசியில் பரிச்சயமில்லாத ஒரு எண்ணிலிருந்து, திரும்பத் திரும்ப அழைப்பு; போனை எடுத்தால், ஒரு வயதான பெண்மணி, 'எப்பிடிம்மா இருக்கே... ஞாபகம் இருக்கிறதா...' என்று ஒரே பாச மழை. பல நினைவுபடுத்தலுக்குப் பின், சரளமாக பேச ஆரம்பித்தேன்.
'உனக்கு ஒன்று தெரியுமா... என் வீட்டிற்கு, அந்த சாய் பாபாவே வந்தார்... தானம் வாங்க வந்தவராக்கும்ன்னு நினைச்சு நான் துரத்தினேன். அவர் அதையும் மீறி உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார். சாப்பிடக் கேட்டார்; கொடுத்தேன்.
திடீரென மறைந்து விட்டார். அவர் உட்கார்ந்த இடத்தில் ஒரு புஷ்பம் கிடந்தது. அக்கம் பக்கத்து மனுஷாளையெல்லாம் கூப்பிட்டு காட்டினேன். அவர்களும், அவர் உட்கார்ந்த இடத்தை நமஸ்காரம் செய்தனர்' என்று என்னென்னவோ பேசிக் கொண்டே போனார்.
சமீபத்தில், என் கணவரின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது. அப்போது, பக்கத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த, 85 வயதான, திடகாத்திரமான பெரியவர் என்னிடம் பேச ஆரம்பித்தார்...
மனரீதியாக...
'முன்பெல்லாம், நான் நடந்து வந்தாலே பயப்படுவாங்க; மரியாதை தூள் பறக்கும். என் பேத்தி நல்லா படிக்கும். என்னோட, என்
மகனால வர முடியலை; டிரைவர் வந்திருக்கிறான்; எது கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டான்' என்று, முன் வாக்கியத்திற்கும், பிந்தையதற்கும் தொடர்பில்லாமல் பேசியபடி இருந்தார்.
அதிக பட்சம், 10 நிமிஷம் தான். ஆனால், நான் பொறுமையாக அவர் சொன்னதை கேட்ட போது அவர் அடைந்த சந்தோஷம், நிம்மதி,
அவர் முகத்தில் தெரிந்தது.
பொதுவாக பார்க்கும்போது, கேட்கும்போது ஒன்றும் புரியாத மாதிரி தான் இருந்தது. 'இதென்ன தேவையில்லாத பேச்சு? நாம இருக்கிற, 'பிசி'யில், 'டென்ஷனான' மன நிலையில், இதென்ன வெட்டிப் பேச்சு...' என்று தான் தோணும். ஒரே ஒரு நிமிஷம், இப்படி பேசுவோர் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் புரியும்.
வயதானவர்கள் இப்போது எதிர்பார்ப்பது, அவர்கள் சொல்வதை நாம் காது கொடுத்து, கரிசனத்துடன் கேட்க வேண்டும்; அவ்வளவு தான்! இதற்கு கூட, 'எங்களுக்கு நேரமில்லை' என்று அலட்டாதீர்கள். இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் தான் நீங்கள் இள வர்க்கமாய்
இருப்பீர்கள்; பின்னாளில், நீங்களும் வயதானவர்கள் வகையில் தான் சேருவீர்கள்... நினைவிருக்கட்டும்!
கூட்டுக் குடும்ப அமைப்பு இல்லாததால், குழந்தைகள் மட்டுமல்ல; முதியவர்கள் கூட, எப்படி மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கான உதாரணம் இது. வயதானவர்களை யார் பார்த்து பராமரிப்பது என்பதில் ஆரம்பிக்கிறது, அவர்களின் மனச் சிதைவு. மகனோ, மகளோ, ஒற்றை பிள்ளையோ, இரட்டை பிள்ளையோ... கடைசி காலத்தைப் பற்றிய ஒரு தெளிவற்ற எண்ணம், பயம், இப்போதுள்ள
வயதானவர்களிடம் காணப்படுகிறது.
சில, பல நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து கொண்டால், மகன் அல்லது மகளுடனான உறவை தொடர முடியும்; தன்மானத்தை விட்டும் சில நேரங்களில் இருக்க வேண்டி வரும். அப்படி இருந்தாலும், சில வீடுகளில் மருமகனோ, மருமகளோ செய்யும் புறக்கணிப்பை தாங்க முடியாமல், முதியோர் இல்லம் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
கடைசி காலத்தில் துணையை இழந்து தனிமையில் இருப்பது, எல்லாவற்றையும் விட மிகக் கொடுமை. கடைசி காலத்தில் தனியான வருமானம் இல்லை, உறவு இல்லை, துணை இல்லை என்பதெல்லாம் சேர்ந்து, மனச் சிதைவை கொடுக்கும். இது அதிகமாகி அதிகமாகி, சம்பந்தம் இல்லாத ஒரு நிகழ்வை, தன்னுடைய கற்பனைத் திறன், திறமை, ஆர்வம், எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் சேர்த்து, இப்படி தொடர்பேயில்லாத விஷயத்தைக் கூட, சம்பந்தமே இல்லாதவர்களிடம் கொட்டத் தோன்றுகிறது. இது தான் அந்த வயதான பெண்ணை, இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு கூட்டத்தில் அறிமுகமான என்னிடம் இப்படி பேச வைத்துள்ளது; மருத்துவமனையில், 85 வயது பெரியவரை, முன்பின் அறிமுகமே இல்லாத என்னிடத்தில் பேசத் தூண்டியிருக்கிறது.
கூட்டுக் குடும்ப அமைப்பில் இருந்த பாசம், அரவணைப்பு, அன்பு, நேசம், உழைப்பு, பொறுமை, விட்டு கொடுத்தல் இன்றைய காலகட்ட வாழ்க்கை முறையில் இல்லை என்பதை நாம், தலை கவிழ்ந்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
வேதனையான விஷயம் வாழ்க்கையில் பல பெரிய பிரச்னைகளில் எதிர்நீச்சல் போட்டவர்கள் கூட, வயதான பின் திணறுவது ரொம்ப வேதனையான விஷயம். பல ஆண்டுகளுக்கு முன், பாரம்பரியமிக்க ஒரு மிகப் பெரிய நகைக் கடையின் நிறுவனர், தன் மனைவியுடன் வேறு ஒரு ஊரில் போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு பணம், பதவி அவர்களை காப்பாற்றவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இளவட்ட உறவுகளும், வயதானவர்கள் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கணும். அலுவலக வேலை, வீட்டு வேலை, நண்பர்களுடன் ஊர் சுற்றுதல் என்று, 24 மணி நேரமும் பயங்கரமான, 'பிசி' என்றால், உங்களுக்கு வயதான பின், நீங்கள் படும் வேதனையை காது கொடுத்துக் கேட்க யாரும் பொறுமையோடு காத்திருக்க மாட்டார்கள். தினமும் சாமி கும்பிட, பிரார்த்தனை செய்ய, இரண்டு நிமிடம் ஒதுக்குவீர்கள் தானே! அந்த இரண்டு நிமிடத்தை, வீட்டு பெரியவர்களிடம் பேச, அவர்கள் பேசுவதை கேட்க ஒதுக்குங்களேன்!
அந்த சாமி ஒன்றும் கோவித்துக் கொள்ளாது... கண்டிப்பாக நம்மை ஆசிர்வதிக்கும்!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#2
Re: Spare time for elderly people - காது கொடுத்து கேளுங்களேன்! காதோரம்

நல்லதோர் வழிகாட்டும் பதிவு சார், அனைவரும் இதை உணர்ந்து நடக்க வேண்டும்.
 
Last edited:

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,715
Likes
2,572
Location
Bangalore
#3
Re: Spare time for elderly people - காது கொடுத்து கேளுங்களேன்! காதோரம்

மிகவும் அவசியமான பதிவு. பிள்ளைகள் கட்டாயம் படிக்கணும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Re: Spare time for elderly people - காது கொடுத்து கேளுங்களேன்! காதோரம்

Very useful and necessary post
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#6
Re: Spare time for elderly people - காது கொடுத்து கேளுங்களேன்! காதோரம்

Very nice sharing sir.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.