Special Contest - Message to My India!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,043
Location
Coimbatore
#1
Dear friends,

Very happy to meet you all with the Special Contest!

India is the greatest and powerful country in the world. But unfortunately the power is unexplored. You will get excited and thrilled even if you utter the name "India"!!!

We love this great nation, because... the reason varies from one to another. It may be for the great diversity of Peoples, rich culture, language, religion etc. Take this opportunity to Salute and Thank our Nation and express your views!

Though we love our India, we expect this change a must need to have a better INDIA in future.

Inshort,
1. Give us the reason for your love towards India &
2. The need/change you want to see in our country.

Note:

  • Judges panel will select the best entry.
  • Narrate it in your own words (copy paste should be avoided), there is no limitation in wordings.
  • Your entry can be either in Tamil or English.
  • The contest will be closed on August 30th 11.30 PM (IST).
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
#2
Super Ilavarasiyaarey!

go-ahead-smiley-emoticon.gif
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,791
Location
villupuram
#3
என் தாய் நாடே!!!! ....வணக்கம்!!!!
உன்னை வணங்கும் போது மட்டும் எனக்குள் பரவசம் ஏற்படுகிறது!!!

..............

என் நாடே!!! நான் உனக்கு என்ன செய்தேன்? ,என்னை நீ உன் கூட்டில் வைத்து பாதுகாக்கிறாய்!!.....எத்தனை கலாச்சாரங்கள்?.....அழகு மிகு பாரம்பரியம்!!........கோடி கோடி வரலாற்று சுவடுகள்!!!..உன்
னை எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்கள் ஆண்டு இருக்கிறது......

அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்களை உன் ஆகிம்சையாலையே வென்றாயே.புத்தகத்தில் வரைப்படமாய் உன்னை பார்க்கும் போது காஷ்மீர் முதல் குமாரி வரை நீ நீண்டு போகும் பாதை பார்க்க கண் கோடி வேண்டும்...

உன்னை அலங்கரிக்க மூன்று கடலும் போட்டி போட, நீயோ தவம் செய்யும் முனிவர் போலே அமைதியாக இருக்கிறாய்..........உன்ணுளே எத்தனை ஜீவ நதிகள்..............

உன்னை பார்த்து கொண்டே இருக்க ஆசை தானஅம்மா............
நீ ஒரு தாய்..ஆனால் உன் பிள்ளைகள் பல கோடி பேர்....நீ யாரையும் விலகாமல் உன்னுள் பாதுகாக்கிறாயே...நிஜமாக கேட்கிறேன் நான் உனக்கு என்ன செய்தேன்.........உன்னை பார்த்து ராசிக்கும் ஒரு மனிதனாக
நான் எங்கோ ஒரு மூலையில்...........உனக்குள் நான் இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன்.............நீ யார் என்று என்னை கேட்டால்,என் பெயரை சொல்லாமல் நான் இந்தியன் என்று தான் சொல்ல ஆசை படுகிறேன் ..என் ஆசையும் இது தான்....


எந்த எதிர்பாரும் இல்லாமல் எங்களை நீ பாதுகாக்கும் போது என் நன்றியை தவிர நான் கொடுக்க ஒன்றும் இல்லையம்மா.......
உன்னை நேசிக்க காரணம் கேட்டால் நான் என்ன சொல்வது...காரணமா இல்லாமல் நேசித்தால் தானே அது அன்பு.......

மாநிலங்கள் பலவாக நாங்கள் பிரிந்திருந்தாலும்,உன் திரு நாளான சுதந்திர தினத்தன்று உன்னை நாங்கள் ஒன்றாக சேர்ந்து போற்றுகிறோமே அது தான் நாடு பற்றா...

உன்னை வெறும் வார்த்தையால் வாழ்த்தினால் மட்டும் போதுமா..........போதாதே...போதவே போதாது....
எங்களுக்குள் என்று ஒற்றுமை பெருகுகிறதோ,எங்களுக்குள் என்று ஏற்ற தாழ்வு என்று குறைக்கிறதோ...பணம் இல்லாமல் தவிக்கும் மனிதர்களை ஏளணமாய் பார்ப்பதை நிறுத்துகிறார்களோ அன்று தான் என் தாய் திரு நாட்டின் சுதந்திரம் போற்றப்படும்..போற்றவும் வேண்டும்..


நீ சுதந்திரம் பெற்று பல வருடங்கள் உருண்டு ஓடியது..
நாங்கள் பேருந்தில் நடு இரவில் தனியாக பயணம் செய்ய முடியவில்லையே......காம மிருகங்கள் எங்களை வேட்டை ஆட வெறியோடு உலா வருகிறது....
நாங்கள் போராடி கொண்டு தானே இருக்கிறோம்....
எங்களுக்கு கற்பு முக்கியம் என்று போதித்தது நீ தானே...

ஒவ்வொரு பெண்ணின் கற்புக்கும் என்று முழு உத்ரவாதம் கிடைக்குமோ என்று சீறி பேச ஆசை தான்..ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் என் சகோதரிகள் நான் இங்கு இதை பதிவு செய்யும் போது ஒரு காம மிருகத்தால் சித்திரவதை அனுபவி
த்து கொண்டு தான் இருப்பாளோ என்று நினைக்கும் போது என்னால் இதை எழுத கூட முடியவில்லை....

அம்மா பாரத தாயே.....நாங்கள் பட்டினியோடு கூட இருக்க தாயார்..ஆனால் எங்கள் கற்பை மட்டும் எங்களை விட்டு போக விடாமல் பார்த்துக் கொள்... என்று உன்னிடம் நாங்கள் யாசகம் கேட்க வில்லை.......நாங்கள் தற்காப்பு கலையை கற்று கொள்ள வேண்டும்..இதை உன் மூலமாக நான் ஒவ்வொரு இந்திய பெண்ணிற்க்கும் நான் அறைகூவல் விடுகிறேன்..........

என் இந்திய சகோதிரிகள் அனைவரும் தங்கள் கற்பை தாங்களே பாதுகாக்க தற்காப்பு கலையோடு இருந்து தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.......இதுவே நான் காண விரும்பும் இந்தியா!!!!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Sep 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:
Joined
Aug 16, 2013
Messages
4
Likes
43
Location
pondicherry
#4
indian_flag_on_flower_11767.jpg
first of all really very proud 2 b an indian. :cheer:my mother land INDIA. shes really awesom. she consists of more nd more natural resources wit her. india is really proud of her kids who vary in their languages, culture, clothing, etc. though v all vary in these thing v r one in the thought tat v r kids of our mother india. nd tis year it has been 67 since she had got her freedom. our mother land is nt an exception frm being slaved by the british. lots nd lots of struggles fr saving our mother land. blood rolld off on the cheeks of our freedom fightes instead of tears. finally 2day v all r enjoying our freedom. bt r u very sure tat v all r completely happy? ya, the reply is exactly 'NO'. wen v search for the reason the answer is our political leaders. y dont u old leaders giv a chance fr the youths 2 take the power? do u think tat v don have enough knowledge? but i think tat the young guys don have the knowledge 2 cheat people also. they dont knw 2 corrupt. they wuld use the money nly fr the gudness of people. there wuld b no fi8s in kashmir. our own siblings in srilanka wuld have nt been killed unnecesarily, each citizen wuld receive their needs without aadhar card, unemployment wuld b ruined, poverty in the country vil b reduced, etc.... you old political leadres c the holes in the dresses of the poor child as nly as a hole. bt v youngsters can show the shining stars to them through tat hole. there is no doubt in making india 'A DEVELOPED COUNTRY' if the youngsters take the power. so, present political leaders wish the present generation nd let them 2 lead the country.
JAIHINDH! lOV U INDIA!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Sep 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

aarthibalakanan

Friends's of Penmai
Joined
Apr 1, 2011
Messages
278
Likes
273
Location
chennai
#5
As individual citizen of mighty country having a great demographic dividend , ancient special features and bulky youth power who is now directionless , dimensionless going to convey my dreams about my nation and going to express my pain towards present scenario.


Agriculture should be respected and free from chemical pesticides
banners free urban and remote areas.
criminals should punished then and there and corruption free government -offices
Discrimination and violence against girls should be stopped and developing - self disciplined society.

education for all and sport should given equal importance.
free treatment for all
great educational system to encourage research in spite of eduction to get job
helping tendencies should devolp among the indiduval
Integration among people instead of various religion,language,states caste
Jail should be open and free
Keeping our heritage and nature as it not disturb it much
Love and peace in all place
Men and women have equal rights
No bomb blast and orphanages,old people houses
Opportunities to all
Proper planning for meting future demands(food shelter agriculture energy) and pollution free environment
Ques free public places and temples
River should be nationalized
Social responsibility in each and every individual and scam free country
Talents should be recognized without
Urban and rural areas with same facility
Village agricultural land should not be real estates
War less Kashmir and boarders
Xtreme weather and disaster should prevented by using eco friendly products
Youth energy should be properly channelized.
Zipping up finally india should be a super power in research and humanism after a decade.

I really proud to be Indian.
our country having varied heritage rich in wealth.
we have ancient civilization.
we have our own big kingdoms
great culture.
great great buildings and temble
great people like gandhiji,buddar,vivekanandha,kalam ji, who are they are inspiration to the whole world.
we people have many language which is ancient.
we having cute family structure..

i cant express in word how i love my country.
how i am patriotic.
as back to my country which give me a lot thinks
i promise her i will be loyal and a true citizen to her.
i will do possible things to her in back to develop a dynamic nation

"never ask what ur country give to u ,ask yourself what u given back to your country"

love u india
jai hind
vande mattaram
jakthe india
jai ho
aarthi

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Sep 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,452
Location
France
#6
அன்புள்ள நண்பர்களே!


வணக்கம்.


இந்தியா..... இந்த வார்த்தையைக் கேட்கும் பொழுதே ஒரு சக்தி கிடைக்கிறது எனக்கு. இந்தியத் தாயே உனக்கு என் வீரவணக்கம். யாராவது கேட்டால் என்னை இந்தியன் என்று அறிமுகப் படுத்திக் கொள்ளும் பொழுது ஒரு கர்வமும், புன்னகையும் இலவச இணைப்பாக ஒட்டிக் கொள்ளும். அத்தனை பெருமையும், பூரிப்பும்.

பல விஷயங்களுக்கு உனக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.
பல நாடுகளில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடைவெளியும், முழு சுதந்திரமும் இருக்கும். ஆனால் இங்கு மட்டுமே உறவினர்களோடும், தாய் தந்தையோடும் கடைசி வரை பிணைந்திருக்கிறேன். உறவுகளுக்கும், பாசத்திற்க்கும் கொடுக்கும் முக்கியத்துவம் வேறெங்கும் காணோம் தாயே!!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கோட்பாடுகளைக் கொண்ட நாடு என் தாய் நாடு. வெளிநாட்டினரும் நினைத்து வியக்கும் விந்தை வேறெங்கும் காணோம் தாயே!!

இமயத்தில் இருப்பவன் இருமினால் குமரியில் இருப்பவன் நீர் கொண்டு ஓடினான் என்ற சொல் உண்டு. இந்த மண்ணிற்க்கே உரிய மனித நேயம் என்ற சொல்லின் அர்த்தததை இங்கு தவிர வேறெங்கும் கண்டதில்லை தாயே!!

பல மொழிகள், பல இனம், பலதரப் பட்ட கலாச்சாரம், பல மதங்கள், பலதரப் பட்ட உணவு பழக்கங்கள், பல வகையான ஜாதி அமைப்புகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒன்றை இங்கு தவிர வேறெங்கும் கண்டதில்லை தாயே!!

பல மத அமைப்புகளும் இணைந்து வாழும் வாழ்க்கை முறை இங்கு தவிர வேறெங்கும் சாத்தியமில்லை. பல சண்டைகளுக்கு நடுவிலும் நாங்கள் இணைந்து இருக்கிறோம் தாயே!!

பாரதியின் பொன்னான வரிகளை நினைவுக் கூற விரும்புகிறேன்.

பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள்
பாரத நாடு
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு

நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு

இன்னும் பல பொன்னான வரிகளை பாரத நாடு என்ற பாடலில் அழகாக விவரிக்கிறார் நம் நாட்டின் சிறப்பை.

என்னைக் காதலும், கர்வமும் கொள்ள வைத்தவை ஒன்றா, ரெண்டா பலப்பல.

உலக அதிசயமும், உள் நாட்டு பெருமையும் கொண்ட தாஜ்மஹாலை சொல்வதா?
உலகில் மிக உயரமான மலை எங்கள் இமயமலையை(8848) சொல்வதா?
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாம் எங்கள் மெரினாவை சொல்வதா?
உலக புகழ்பெற்ற வைரமாம் கோஹினூர், அது என் நாட்டை சேர்ந்ததை சொல்வதா?
உலகின் பழமையான ஐந்து மொழிகளில் ஒன்றான எங்கள் தமிழ் மொழியை சொல்வதா?
உலகின் பெரிய கோவிலான கம்போடியாவில்(அங்க்வர் வாட்) உள்ள கோவிலை கட்டியவன்
என் நாட்டை சேர்ந்தவன் என்று சொல்வதா?
கணிதத்தின் மூலதனமான பூஜ்ஜியத்தை இந்த உலகிற்க்கு அளித்தவன் ஆர்யபட்டா
என் முன்னோர்கள் என்று சொல்வதா?
கின்னஸில் இருக்கும் எங்கள் மீனாக்ஷி கோவிலை சொல்வதா?
பல நாட்டிற்க்கு கணித வல்லுனர்களையும், அறிவியல் மேதைகளையும் தந்திருப்பதை சொல்வதா?
அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சிறப்பை சொல்வதா?
சரியான தட்பவெட்ப நிலையை சொல்வதா?
எந்த நாடு சண்டை போட முயன்றாலும், வன்முறையை கையில் எடுக்காமல் அகிம்சையுடன்
இருப்பதை சொல்வதா?
மனித வளம் இல்லாமல் பல நாடுகள் தவிக்கின்றன. அவற்றில் கூட உலகில் இரண்டாம் இடத்தில் இருப்பதை சொல்வதா? :)
பலவிதமான இசைக் கருவிகள், நாட்டிய முறைகள், சங்கீத நுணுக்கங்கள், இவை எல்லாம் இங்கே மட்டுமே பார்க்க முடியும்.
உலகமே இன்று பின்பற்றும் ஒரு உடல், மற்றும் மனம் சம்பத்தப்பட்ட யோகாவை தந்ததை சொல்வதா?
இந்திய சினிமா உலகம் முழுதும் பார்த்து ரசிக்கப்படுகிறது. இதை சொல்வதா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பலப்பல.

இப்படி எல்லா வளங்களைக் கொண்ட நாடு ஏன் முன்னோக்கி நகராமல் இருக்கிறது. பல வளங்கள் மட்டும் இருந்து விட்டால்
போதுமா?
இல்லை. அதை எல்லாவற்றிற்க்கும் மேலான பல முன்னேற்றங்கள் நம் நாட்டில் தேவை.

1. கல்வி: கல்வியில் நாம் இன்னும் நிறைய பின் தங்கி உள்ளோம். அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்க்காவது பயில வேண்டும். முடிந்த வரையில் அனைத்து குழந்தைக்கும் கல்வி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பெண் கல்வி கிராமங்களில் இன்னும் முழுமையடைய வில்லை. இதை மாற்ற வேண்டும்.


2. சுகாதாரம்: நம் நாட்டில் அடிப்படை தேவையான குடி நீர்க் கூட மிக மிக மாசுப்பட்ட நிலையில்தான் கிடைக்கிறது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. நான் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் குழாயில் இருந்து அப்படியே தண்ணீரை குடிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் அப்படி குடிக்க முடியாது, மிகவும் மாசு அடைந்தது என்று கூறினார்கள் இங்குள்ளவர்கள். என்னால் எந்த பதிலும் கூற முடியவில்லை. ஏனெனில், இதை நானே அனுபவித்து, மருத்துவமனையில் சேர்ந்த அனுபவம் உண்டு.


3. சுற்றுச்சூழல்: நம் நாட்டில் இன்றைய பிரச்சினைகளில் முக்கியமானது இது. சரியான பாதாள சாக்கடை அமைப்பு கிடையாது.
காற்று மற்றும் நிலத்தடி நீர் முதலியவை பயங்கரமாக மாசடைந்துள்ளது. இதனால் நாம் அனைவரும் பல நோய் தொற்றுக்கு ஆளாகிறோம். சரியான குப்பயை எரிக்கும் வசதி, போடும் போதே மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று போடும் வாய்ப்புகள் இல்லை. சரியான குப்பை தொட்டிகள் பராமரிப்பு இல்லை. மழை நீர் உயிர் நீர் என்று எழுதி மட்டும் வைத்துக் கொள்கிறோம். அதை சரியாக சேமிப்பதில்லை. மரம் வளர்ப்போம் மனித வளம் காப்போம் என்கிறோம், ஆனால் வளர்ப்பதில்லை.
நிறைய மரங்களை வளர்த்தால் அது நம் அனைவரையும் காக்கும். மழை பொழியும், தண்ணீருக்காக நாடு முழுவதும் சண்டை தேவையே இருக்காது. இதைப் போன்ற அடிப்படை வாழ்வாதாரங்களில் நம்மிடையே நல்ல விழிப்புணர்வு வேண்டும். அது இல்லை. அந்த மாற்றம் நம் நாட்டில் வேண்டும்

4. சட்டம்: சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்வதுண்டு. ஆனால் அது நம் நாட்டை பொருத்தவரை உண்மையாகத்தான் உள்ளது.
செய்யும் தவறுகளுக்கு சரியான தண்டனை இல்லாததால் நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரங்கம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கடுமையான சட்டங்கள் தேவை. சுதந்திரத்திற்க்கு முன்பிருந்த அதே சட்டங்கள் இப்பொழுது செல்லாது. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுகு ஒரு சட்டமாக இருக்கக் கூடாது.
இதில் நிச்சயம் மாற்றம் தேவை.

6. அரசியல்: இன்றைய காலகட்டத்தில் அரசியல் என்பதும் ஒரு தொழிலாக பார்க்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது.
நாம் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவரால்தான் நமக்கு நன்மையும், தீமையும் என்பதிலே நமக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. மனிதனுக்கு பின்னால் செல்லும் கூட்டமாக நாம் இருக்கிறோம். ஒரு அரசு தப்பு செய்யும் பொழுது அதை கேட்கக் கூட திராணியற்றவர்களாக நாம் இருக்கிறோம். பிரியாணியும், சாராயமும் ஒரு அரசை நிர்ணயிக்கக் கூடாது. இலவசங்களை நம்பும் கூட்டமாக மக்கள் இருக்கக் கூடாது.

7. ஊழல், இலஞ்சம் அற்ற அரசு:

தானே எடுத்துக் கொண்டால் அது ஊழலாம், பிறர் கொடுத்து வாங்கினால் அது இலஞ்சமாம் :)
எந்த ஒரு நாடு இவை இரண்டும் இல்லாமல் ஒழுக்கமாக மக்களுக்காக அரசு செய்கிறதோ அதுவே நல்லரசு. ஒரு சாதரண குப்பைத் தொட்டியில் தொடங்கி, சுடுகாடு வரைக்கும் ஊழலில் பெயர் எடுத்திருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை,மின்சாரம் மற்றும் உணவு இதில் நிறைவு பெற்றிருந்தால் அது நல்ல நாடு. அதை நடத்துவது நல்ல அரசு. உலகிலேயே வறுமையான நாடு இந்தியாதானாம். அந்த புள்ளி விவரங்கள் அவ்வளவு வருத்தத்தை ஏற்படுத்தியது. மக்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எங்கும் குடித்து விட்டு படுத்து கிடக்கும் அவலம் நம் நாட்டில் தலை தூக்கி ஆடிக்கொண்டிடுருக்கிறது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு, நல்ல அடிப்படைத் தேவைகள் இவைதான் நம் டிற்க்கு தேவை. நல்ல தொழிற்கூடங்கள் தேவை. இவை எல்லாம் நடந்தால் எந்நாடு வளர்ந்த நாடுகளில் இடம் பிடிக்கும் என்பதில் அய்யமில்லை.

இன்னும் எத்தனேயோ தேவைகள் இருக்கிறது. மன வருத்தத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 100 இளைஞர்களைத் தாருங்கள் இந்நாட்டை நான் மாற்றுகிறேன் என்றார் விவேகானந்தர். இந்த இளைஞர் பட்டாளங்கள் முழித்துக் கொண்டால்தான் நம் நாட்டை உலக வரிசையோடு ஒப்பிட முடியும்.

மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே

என்ற பாரதியின் வரிகளோடு முடித்துக் கொள்கிறேன்.

இந்தியர் என்பதில் பெருமைக் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனை செய்வோம்.

வாய்ப்பளித்த பெண்மைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி!!! வணக்கம்

ஜெய்ஹிந்த்!!! தாய் மண்ணே உனக்கு என் வணக்கங்கள்.




Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Sep 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,043
Location
Coimbatore
#7
பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

"Message to My India" என்ற தலைப்பில் நடந்த பெண்மை சிறப்பு போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்த உங்கள் அனைவருக்கும் பெண்மையின் சார்பில் பாராட்டுக்கள்...

இங்கு தங்கள் கருத்தினை பதிவு செய்த உங்கள் நால்வரது கருத்துக்களும் ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் கருத்துக்களே...

உலகமே வியக்கும் பல சிறப்பான பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், முழுமையாக உணரப்படாத குன்றாத இயற்கை வளம், அறிவுச்செல்வத்தை உலகுக்கு தந்த பல நல்லறிஞர்கள், படைப்பாளிகள், உலகின் முதல் பல்கலைக்கழகம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்...

இப்படி நம் பாரதம் பற்றி பெருமை பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றது. ஆனாலும் நாம் இன்றைய இந்தியாவில் எதிர்ப்பார்க்கும் சில இன்றியமையாத தேவைகளை மிக தெளிவாகக் நம் தோழமைகள் பட்டியலிட்டுள்ளனர்... நம் இன்றியமையாத தேவைகள் பெற்று முழு வல்லரசாகுவோம்...

நம்மை நாமுனர்ந்து நல்லிணக்கம் பேணுவோம்!

It's time for announcing the winner of the contest.

Geetha A @ Anu won the contest with highest votes from our juries...

Congratulations Anu!

Here is gift for you!




Vijivedachalam and aarthiaec@Aarthi stands next to Anu.

Please send your Indian Postal Address with Phone no. to Parasakthi through private message. Once you received the gift pls confirm the same with her.

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
#8
வாழ்த்துக்கள் அனு என்கிற கீதா, விஜி வேதாசலம் மற்றும் ஆர்த்தி!

smileys-flowers-719593.gif
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.