Special thread for Arranged Marriage Couples

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
Dear Friends,

You all may aware of an Exclusive thread for Love marriage Couples… After I have started that thread I got so many Chella Thittals and Mirattals from our friends, to commence a thread for Arranged Marriage Couple. As many of our Penmai mates request (After sweet scolding), here I am starting a special thread for Arranged marriage Couples. As like the love marriage couples arranged marriage couples also had been come through a lot of interesting and exciting moments, Chilli Fights, Funny Talks, etc., happened during their marriage or right after marriage. Share your most memorable things and also share your interesting and different ceremonies happened in your marriage.

What are all you can share here?
  • What did you think when you meet him for the first time? Did you Feel, “Yeah, He/She is the one who is going to share and care, rest of my life”?
  • How did you start your communication? Who called first? How did you feel during your first talk?
  • How much time you had from your engagement to wedding? In mean time, how was your understanding between both of you?
  • Did you have any illicit meeting with your partner?
  • Did you ever feel love marriage is better than arranged marriage? If yes, what made you to feel so?

Let share your interesting and thrilling experience of your Arranged Marriage… We are eagerly waiting for your scribbling...
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#2
மலரும் நினைவுகள்

செல்லமான மிரட்டல்களுக்கு பிறகு இப்படி ஒரு thread வெளியிட்டு எங்கள் மனதை சாந்தப்படுத்திய சக்திக்கு நன்றி....
நம்ப கதைக்குள்ள போவோமா....

பொண்ணு பாக்க இந்த தேதில இந்த ஊர்ல இருந்து இன்னார் வர்றாங்கன்னு சொன்னாங்கப்பா....ரெண்டு பக்கமும் photos ல மட்டும் பாத்தது...என்ன இருந்தாலும் நேர்ல பாத்தாதான கரெக்டான figure என்னனு தெரியும் ... [ரொம்ப அலங்காரமெல்லாம் நான் பண்றது கிடையாது....எப்பவுமே காஷுவல் தான் ]

எங்க வழக்கப்படி வந்தா ஒரு பத்து பதனஞ்சி பேர் குடும்பத்தோட கும்பலா வந்து இறங்குவாங்கன்னு நான் காத்துகிட்டு இருந்தா மொத்தம் எழுபது பேர் ரெண்டு பஸ் நிறையா வந்து இறங்கி கலவர படுத்திட்டாங்க..... அவங்க சொந்தகாரங்க மட்டுமே ரெண்டு பஸ்ஸாம்...... மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க தனியா கார்ல வந்தாங்களாம்......என்ன தான் ரூம விட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே....கூப்பிடறப்போ தான் வரணுமாம்....அப்பப்போ ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி என்ன நடக்குதுன்னு என் தம்பிங்க அறுந்த வாலுங்க வந்து சொல்லிட்டு போவாங்க....

என்னப்பா இவ்ளோ கூட்டம்னு நான் என் அப்பாவ கேட்டா மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஒருத்தர ஒருத்தர் புடிச்சி போச்சின்னா அப்படியே கையோட நிச்சயம் பண்ணிக்கலாம்னு முதல்லையே சொல்லியிருந்தாங்களாம்....இந்த விஷயத்த என்கிட்டே சொல்லியிருக்கணுமா வேண்டாமா...

இதுல காமெடி என்னன்னா மாப்பிள்ளைக்குனு தனியா chair போடாம கூட்டத்தோட கூட்டமா உக்கார வெச்சிட்டாங்க....அந்த கூட்டத்துல வயசு பசங்க ஏழெட்டு பேர் இருந்தாங்க.....வெக்கத்த விட்டு போட்டோ ல பாத்த ஆள் எங்கன்னு நான் தலைய நிமித்தி ஒவ்வொரு மூஞ்சியா தேடவா முடியும்....இதுல வேற ஒரு பெருசு மாப்பிள்ள பையன நல்லா பாத்துக்கோ ன்னு சவுண்ட் விடுத்தது..... எங்கிருந்து பாக்க... நானே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன்...

நல்ல வேளை...அவரோட பெரியப்பா இத கவனிச்சிட்டார் போல..... ரமேஷ் எந்திரிச்சி நில்லுடா பொண்ணு உன்ன தேடுது பாரு ன்னாரு...

எனக்கு ஒரே வெக்கமா போச்சுப்பா.....இப்படியா எல்லார் முன்னாடியும் போட்டு உடைப்பாங்க.... அவர் என்ன ஸ்கூல் ஸ்டுடென்ட் ஆ... பெஞ்ச் மேல ஏறி நில்லுடா ங்கறமாதிரி....

என் பின்னாடி உக்காந்திருந்த லேடீஸ் எல்லாம் பாருடி... பாருடி...நல்லா பாத்துக்கோன்னு ஒரே ரகசிய கலாட்டா....இவங்க தொல்ல தாங்க முடியாம [ சாமி சத்தியமா இவங்க தொல்ல தாங்க முடியாம தான் ] கொஞ்சம் தைரியத்த வரவழைச்சிகிட்டு நிமிர்ந்து பார்த்தா நிக்கறாரு நிக்கறாரு பனை மர உயரத்துக்கு நிக்கறாரு.....மனுஷனுக்கு நல்ல muscles மா.....புன்னகைப் பூவே ...பூக்களின் தீவேன்னு அழகா ஒரு சிரிப்பு சிரிச்சாரு பாருங்க...... சும்மா சொல்ல கூடாதுப்பா ...கள்ளம் கபடமில்லாத சிரிப்பு.... அந்த சிரிப்புல விழுந்ததுதான்.....


அப்புறம் நல்லா இருந்த என் மூஞ்சிய கெடுக்கறதுக்குன்னு சுண்ணாம்பு அடிக்கறதுக்காக பார்லர் இருந்து ஆள் வந்து அலங்காரம் பண்ணிவிட .....
இப்போதான் காதுகுத்துல இருந்து கல்யாணம் வரைக்கும் பார்லர் மேக் அப்னு ஆயிடுச்சே....

எல்லா அலங்காரமும் முடிஞ்சி மண்டபத்துக்கு போனா இவங்க கூட்டம் பத்தாதுன்னு ஊர்ல பாதி பேர எங்க அப்பா அம்மா போன்லயே அழைச்சிருந்தாங்க.....

கரெக்டா ஜனவரி 26 அன்னைக்கு மேள தாளம் முழங்க நிச்சயதார்த்த ஒப்பந்தம் போடப் பட்டது....ஜூன் மாசம் தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க.....ஐயோ அஞ்சு மாசம் கேப்பா..... சரி...பெருசுங்கள எதுத்து என்ன பண்ண முடியும்....

நிச்சயம் முடிஞ்சி ஊருக்கு கிளம்பறப்ப பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு சொன்னாராம்.....ரெண்டு பேரையும் ஒரு ரூம்குள்ள உக்கார வெச்சிட்டு எல்லாம் தூரமா போயிட்டாங்க.....[சு....கதவு தெறந்து தான் இருந்தது....கண்டபடி கற்பன பண்ணக் கூடாது....]

கேக்காம கொள்ளாம திடீர்னு என்னோட வலது கைய பிடிச்சாரு பாருங்க.....நம்ப சீரியல் கதாநாயகி ஸ்ரீ ரேஞ்சு கு உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு.....ஒரு அழகான கோல்ட் bracelet எடுத்து என் கைல போட்டுவிட்டாறு..... இன்னும் என்னால அந்த ஸீன மறக்க முடியல.....

சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சி கெளம்பறப்ப ஒரு வார்த்த சொன்னாரு பாருங்க....இன்னும் அஞ்சு மாசம் டைம் இருக்கு... அதுக்குள்ளே எப்ப எல்லாம் முடியுதோ அப்போ எல்லாம் வருவேன்.... தயவு செஞ்சு நான் வர்றப்ப இந்த பார்லர் மேக் அப் போட்டுக்கிட்டு பயமுறுத்தாத....


மண்டபத்துக்கு வர்றதுக்கு முன்னாடி நீ ரொம்ப ரொம்ப அழகாஇருந்த
...மேக் அப்போட மண்டபத்துக்கு வந்ததும் இந்த பொண்ண தான் பாத்தோமான்னு சந்தேகமா போயிடிச்சி...... இயற்கையா இருக்கற அழக நீயா கெடுத்துக்காத.... அப்படின்னாரு பாருங்க.....

LAUGH.jpg thumbnail.aspx.jpg

சுத்தி இருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க.....
:Cry: ஆனா அவர் சொன்னது எவ்ளோ உண்மைன்னு photos , videos எல்லாம் வந்தப்புறம் தான் தெரிஞ்சது.....வாழ்க்கைல இனி என்னைக்கும் சுண்ணாம்பு அடிக்கறதில்லன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.....ஓவர் மேக் அப் உடம்புக்கு ஆகாதுன்னு சும்மாவா நம்ப சித்தர்கள் சொன்னாங்க.....


இப்போதைக்கு இது போதும் பா....இன்னொரு நாள் சந்திக்கலாம்..... நம்ப பெண்மைல ஸ்னேஹா கல்யாண photos பாத்தப்ப என்னோட இந்த கதை தான் ஞாபகம் வந்தது.....
Celebrities at Sneha Prasanna Marriage Reception (19).jpg
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#3
வேற யாரும் எழுதற மாதிரி இல்ல...ஒரே வெட்டி அரட்டையா போகுது...நானே எழுதறேன்....

இந்த five மன்த்ஸ் கேப்ல செல்...செல்..செல்... பில்...பில்...பில்.... தான்.....அவர் போன் பண்ண....நான் பேச....மறுபடியும் அவர் போன் பண்ண நான் பேச.... ஒருநாள் கூட நானா போன் பண்ணவே இல்ல.... அவ்ளோ வெக்கம்பா....... அப்போ... அப்போ...அப்போ...சொன்னா நம்பணும்.....
டெய்லி போன் பண்ணுவாரு....அவர் பண்றப்ப எல்லாம் ....என்னோட ஹீரோயின் பத்மினி மாதிரி நான் பேசிகிட்டே இருப்பேன்...அவர் உம் மட்டும் சொல்லுவாரு....அப்பப்ப எனக்கு டவுட் வந்துடும்.... லைன் ல தான் இருக்காரா இல்ல என்பேச்சு தாங்காம தல தெறிக்க ஓடிட்டாரானு....ஆனா என்ன பேசுனேன்....என்ன உளருநேன்னு இப்போ யோசிச்சு பாத்தா சத்தியமா ஞாபகம் வரல....


இதுக்கு நடுவுல fifteen days once வந்துடுவாரு.... ஒவ்வொரு தடவ வர்றப்பவும் ஒவ்வொரு movie ...ஒவ்வொரு restaurant ..இதெல்லாம் என் செலவு தான்....மறுபடியும் நம்பணும்.....

வரப்ப எல்லாம் ஏதாவது ஒரு கிப்ட் குடுத்துட்டு தான் போவாரு .......ஒரு தடவ saree .....இன்னொரு தடவ கொலுசு.....நான் கொலுசே போடமாட்டேன்....அவர் கொடுத்தாரே அப்பிடின்னு சொல்லி கல்யாணம் வரைக்கும் கால்ல மாட்டிகிட்டு திரிஞ்சேன்..... நைட் நடக்கறப்ப வனமோகினி மாதிரி ஒரு பீலிங்.....

ஒரு நாள் தாங்க முடியாம கேட்டாரு....உன் ஞாபகார்த்தமா எனக்கு ஏதாவது குடு.... ஊருக்கு போய் உன் நெனப்பாவே இருக்கு அப்பிடினாறு.... அப்ப கூட எனக்கு எதுவும் குடுக்கணும்னு தோணல.....

ஜூன் மாசம் வந்தா இந்த எழுபது கிலோ தங்கம் நானே உங்களுக்கு சொந்தமாகப் போறேனே... வேற கிப்ட் எல்லாம் எதுக்குன்னு பஞ்ச் டயாலாக் பேசுனேன்.... செல்லமா மொரச்சவரு சரியான கஞ்சப் பிசுனாரியா இருப்ப போல அப்பிடின்னு சொல்லிட்டாருப்பா.... ஒரே feelings of indiya வா போயிடிச்சி.....

அடுத்த episode கல்யாணத்துக்கு நகை வாங்க போனது... நாளைக்கு சொல்றேன்...
 
Last edited:

satyasriram

Commander's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
2,156
Likes
5,179
Location
Chennai
#4
சக்தி இந்த thread open பண்ணினதுக்கு ரொம்ப நன்றி தோழி

எனக்கு வீட்ல first ஜாதகம் எடுக்கும் போதே ஒரே நடுக்கம் ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம்(நீங்க எல்லாம் நீயா சத்யா ன்னு கேட்கறது புரியுது)இப்போ இல்ல அப்போ.
first ஜாதகமே இவரோடது தான் அப்பா வந்து என் கிட்ட பேர் சொன்னா அப்போவே நான் flat . அப்புறம் ஜாதகத்த கொடுத்துட்டு போட்டோ கூட அனுப்பாம ஐயா US போயாச்சு அப்பாக்கு என்னடா ஒன்னும் பதிலே வரலையேன்னு சரி வேற இடத்துல என்னோட ஜாதகத்தை கொடுக்க முடிவு பண்ணினார்.எனக்கு என்னமோ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அப்பா கிட்ட கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு சொல்லவும் முடியல ஆனா எனக்கு வேற இடத்துல ஜாதகத்த கொடுக்கறது பிடிக்கவும் இல்ல.அம்மா அப்பா கிட்ட சொன்ன இன்னும் 2 நாள் கழிச்சு முகுர்த்த நாள் வருது அப்போ கொடுக்கலாம்ன்னு சொல்லிட்டா.எனக்கு பிடிக்கல நான் என் அக்கா வீட்டுக்கு கிளம்பிட்டேன்.அன்னிக்கு போஸ்ட்ல அவரோட போட்டோ வந்ததுன்னு எனக்கு அப்பா கால் பண்ணினார் எனக்கு ஒரே குஷி நீ கிளம்பி வா ன்னு சொன்னார்.இல்லப்பா எனக்கு போட்டோ பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டேன்.2 வீக்ஸ் கழிச்சு பொண்ணு பார்க்க வரோம்னு சொன்னாங்க நான் அப்போ பார்துகிறேனு சொல்லிட்டேன்.எனக்கு 2 டைம்ஸ் பொண்ணு பார்க்கறது நடந்தது.
 
Last edited:

satyasriram

Commander's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
2,156
Likes
5,179
Location
Chennai
#5
முதல் நாள் சாயங்காலம் அவரோட அம்மா அக்கா அக்காவோட கணவர் அப்புறம் அவங்க பொண்ணு நாலு பேர் மட்டும் தான் வந்தாங்க முக்கியமான ஆளு வரல எனக்கு செம்ம கடுப்பு.என்னோட அம்மா மாப்பிளை அப்டியே அம்மா ஜாடை அப்படினு அக்கா கிட்ட சொல்லிகிட்டிட்டு இருந்தா உடனே நான் என் மாமியாரை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.அவங்க எல்லோரும் ரொம்ப நன்னா பழகினா.ரொம்ப யதார்தம்மா இருந்தா.என் கிட்ட ரொம்ப friendly யா இருந்தா.
என் மாமியார் வந்து என் கிட்ட ஸ்ரீராம்(பேர் நல்லா இருக்குல இதுல தான் நான் விழுந்துட்டேன்) நாளைக்கு உன்னை பார்க்க வருவான் முதல்ல உனக்கு பிடிச்சிருக்கா அப்படினு பார்க்க சொன்னானு சொன்னாங்க.நான் சிரிச்சிகிட்டே நின்னேன்(உள்ள செம்ம கடுப்பு)எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க நாளைக்கு வரோம்னு கிளம்பி போய்ட்டாங்க.எனக்கு உள்ள பல விதமான எண்ணங்கள் இது சரி வருமா இல்லையானு ஒரே குழப்பம்.அம்மா
வந்து மனச போட்டு குழப்பிக்காம போய் தூங்குனு சொல்லிட்டு போய்ட்டாங்க.ஏதேதோ யோசிச்சு நானும் தூங்கிட்டேன்.
 

satyasriram

Commander's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
2,156
Likes
5,179
Location
Chennai
#6
மறுநாள் காலையில் எங்களுக்கு போன் வந்தது நாங்க காலையிலேயே வரட்டுமா அப்படினு கேட்டு அப்பா வும் சரின்னு சொல்லிட்டாங்க எனக்கு ஒரே உதறல்
நிஜமா அது என்ன பீலிங்க்ஸ் நே சொல்ல தெரியல இப்பவரைக்கும்.நான் போய் ரெடி ஆயிட்டு வந்தேன் நான் ரூமில் இருந்தேன் வாசலில் calling bell சத்தம் எனக்குள்ள ஒரே பரபரப்பு எல்லோரும் போய் வாசலில் பார்த்த கேபிள் டிவி பணம் வாங்க வந்து இருந்தாங்க.எல்லோருக்கும் சப்புன்னு ஆயிடுச்சு.கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க எல்லோரும் வந்தாங்க என்னை எப்படா கூப்டுவாங்க அப்படினு வெயிட் பண்ணேன்.எங்க அக்கா வந்து இந்த ஸ்வீட்ஸ் எடுத்துட்டு போய் அவங்களுக்கு கொடுன்னு சொன்னாங்க நான் போய் அங்க போய்டேன் அவரு என்னை பார்க்கல எனக்கு பயங்கர கோபம் அவரு அப்பா கிட்ட பேசிட்டு இருந்தார்
நான் அங்கேயே நிற்கறேன் அவர் வந்து அப்பா கிட்ட கேட்டார் நான் அவ கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு.அவர் தனியா பேசும் போது நான் அப்டியே flat ஆனவதான் இன்னும் எந்திரிகல அவர் அப்டி என்ன பேசினார்

waittttt
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#7
நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊர்தான். எங்க STREET ல இருந்து 5 STREET தள்ளி தான் அவங்க வீடு.ஆனா நாங்க பார்த்ததே இல்லை .(உண்மை நம்பனும்).பொண்ணு பார்க்க வந்தாங்க . நானும் ஒரு எதிர்பார்போட மாடிய்ள இருந்து பார்த்துகிட்டு இருந்தேன் .சாதரணம பொண்ணு பார்க்க எப்டி வருவாங்க . ஒரு கார்ல ,வன்ல, அட்லீஸ்ட் பைக்ல வருவாங்க.ஆனா என் ஹீரோ எப்படி வந்தார் தெரியுமா ...................:roll:
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#8
நான் கார் வேன் பார்த்துகிட்ட இருந்தா இவரு, இவங்க அக்கா, சித்தி , 3 பேரும் நடந்து வந்துரிகாங்க எனக்கு தெரியல . நான் அவங்களை கண்டுகவே இல்லை .எங்க வீடுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது இவங்கதான் மாப்பிள்ளை வீடுன்னு.(நடந்து போனா யாருக்கும் தெரியாது .பக்கத்து street thana என் ஹீரோ சொல்லி இருக்கார் )எனக்கு என்ன பண்றதுன தெரியலை .அடடா பார்க்காம விட்டிடோமனு ஓர feelings of
indiava போச்சு. ஆனா இவரு என்னை தூரத்துல இருந்தே பார்த்துகிட்டு வந்திருக்கார். நம்ம எப்பவுமே late pickup தான் .cofee கொடுக்கும் போது தான் அவரை பார்த்தேன்.அவரு என்னை பார்கவே இல்லை .நமக்குதான் உடனே கோபம் வந்திருமே .நானும் உடனே உள்ள வந்திட்டேன்.
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#9
ஒரு வழியா பொண்ணு பார்த்து முடிச்சு கல்யாணத்துக்கு நாள் குறிச்சாங்க .3 மாசம் கேப் இருந்தது .ஆனா இந்த உள்ளுர்குள்ள கல்யானம பண்ணகூடாது .எங்க போனாலும் தெரிஞ்சவங்களா இருக்காங்க .எங்க அப்பா ரொம்ப stict stict அதுனால phonelyum பேசமுடியல .நான் அவரை தனியா பார்க்கறதுக்க 1 மாசம் ஆச்சு .அவரு friend கடைல undergroundla தான்பா first தனியா பார்த்தேன் .(friends no more கற்பனை )என் friendsm கூட இருத்தாங்க .பார்த்த உடனே ஷாக் ஆய்ட்டேன் . தலைவர் நல்ல hight நல்ல weight சுருக்கமா சொன்ன நல்ல hijantic figure .நான் அப்டிய opp short &leen .எனக்கு என்ன பேசறதுன தெரியல.அப்டிய பார்த்துகிட்ட நினேன்.அவருதான் பேச ஆரம்பிச்சார் .அவரு பேச பேச எனக்கு அவரை ரொம்ப புடுசுடுச்சு .அப்புறம் கோயில தான் அதிகம் மீட் பண்ணினோம்.1st நாள் மட்டும் தான் அவர் பேசினார் .அதுக்கப்புறம் சொல்லனுமா நம்மதான் .......ஒரு வழியா கல்யாண நாள் வந்துச்சுபா.

கல்யாண கலாட்டா சொல்வாங்கல்ல அது என் கல்யனதுல்யும் நடந்தது .அதாவது ஸ்வீட்ஸ் ஜிலபி போடா சொல்லிருந்தாங்க .எங்க அப்பா lottu போட்டுட்டார் .அதனால கல்யாண வீட்ல ஓர சண்டை (.கொடுமைய பாருங்க ). அப்புறம் ஒருவழியா பேசி சமாதனம் ஆனாங்க .

இப்டி comedyaavum ,அதிர்ச்சியாவும் ,கலட்டாவுமா என் கல்யாணம் முடிஞ்சுதுப்பா.
 
Joined
Sep 11, 2012
Messages
17
Likes
87
Location
USA
#10
Hi all, these stories in the love marriage and arranged marriage threads, have inspired me to write mine too...but I was not sure which thread my story will go into. But I eventually decided on the arranged marriage thread. You will understand when you read my story. I am warning you it will be very long and may be a bit boring. Not much romance until after our marriage. Ha ha.
Part1:
Some background about me:
I am a very independent girl. Older of two daughters to my parents. Middle class family. Konjam strict, konjam lenient depending on situation. In my school days someone proposed to me...he was a good person, but as I grew older and more mature, I realized that we were not suited for each other. Example, he was an only son and he pretty much expected a wife that took care of him like his mother did. I on the other hand am very ambitious and wanted to have a successful career for myself, wanted my husband and I to be equal partners in the marriage. Nothing wrong with his expectation, but at 16 years age even I did not know what I wanted and eventually, after 4 years I slowly started understanding myself. SO it ended. I felt terrible to break his heart, but had to break up for the sake of both of our lives. He is now happily married to a girl who is much prettier than me and is also a homemaker - perfect match for him :)

Coming to me After that event in my life, I was very skeptic about finding the right person. But I was very sure that I will not compromise. I made a list of criteria for my future husband. I felt that there is nothing superficial or wrong in being practical. Here is a partial list in no particular order of importance:
1. He should be at least 5' 10" tall
2. Should be as educated or more educated than me.
3. Should be same religion as me (Definitely practical and can avoid many many problems)
4. Decent family back ground.
5. Does not have to have family money or wealth but should be in a good personal financial position (good paying job or business)
6. Should be fluent in English
7. Should be very broad minded and should be a person who would treat wife as an equal partner and a best friend.
8. Should be at least 4 - 5 yrs older than me. (Because only then he will be as mature or more mature than me and that will make me respect him)
9. Should like music - at least just to listen. (Easy condition right? )
10. Should have a sense of humor.
11. Should have a sense of some romance at least...
12. We both should have good Chemistry.

Will continue...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.