Spirulina benefits

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,737
Location
The World
#1
அனைத்து சத்துக்களையும் இயற்கையாகவே தன்னுள் வைத்திருக்கும் தண்ணீர்ப்பாசி ஸ்பைருலினா

தண்ணீரில் வளரும் சுருள் வடிவ பச்சை பாசி ஸ்பைருலினா ஆகும்.ஆப்ரிக்கக் கண்டத்தில் மடகாஸ்கர் தீவில் இதன் மருத்துவ குணத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டறிந்தனர்.இருப்பினும்,வர்த்தக நோக்கில் இந்த நூற்றாண்டில் உலகம் முழுக்கவும் பரவத் துவங்கியது.இன்றைய பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் சக்தி ஸ்பைருலினாவுக்கு உண்டு.

  • இது உடலுக்கு உடனடியாக சக்தி அளிக்கக்கூடியது.
  • பள்ளிக்குழந்தைகளின் நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.
  • வயதானவர்களுக்கு மூட்டுவலியை தடுக்கிறது.வந்த மூட்டுவலியை குணப்படுத்துகிறது.
  • உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்துகிறது.
  • பெண்களுக்கான மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்கிறது.
  • வைட்டமின் ஏ குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பு மற்றும் நரம்பு பாதிப்பு போன்ற கோளாறுகளை தடுக்கிறது.
  • முடி உதிர்வதைத் தடுக்கிறது.
  • இரும்புச்சத்துக்குறைபாடுகளால் ஏற்படும் அனீமியா குறைபாடுகளை பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும்,கர்ப்பிணிகளுக்கும் சரிசெய்கிறது.
  • எய்ட்ஸ் நோய் பாதித்த தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு நோய் பரவுவதைத் தடுக்கிறது ஸ்பருலினா.
  • அதிகப்படியான உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு,ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.
  • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஸ்பைருலினாவை தினமும் உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பெருமளவில் கட்டுப்படுத்துகிறது.

ஸ்பைருலினாவுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள்:
ஐ.நா.சபையின் ஒரு பகுதியான உலக சுகாதார அமைப்பு(WHO)ஸ்பைருலினா குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சத்துக்கள் நிறைந்த உணவு என்று பரிந்துரைத்திருக்கிறது.
அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா விண்வெளி வீரர்களுக்கு உணவாக ஸ்பைருலினாவையே தந்துகொண்டிருக்கிறது.

1974இல் ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) ஸ்பைருலினாவை நாளைய உலகின் சிறந்த உணவு என்று அறிவித்திருக்கிறது.

1983 ல் மேற்கு ஜர்மனியில் நடைபெற்ற உலகளவிலான உணவு கண்காட்சியில் சிறந்த துணை நிலை உணவு என அறிவித்துள்ளது.

IIMSAM ஸ்பைருலினா பன்றிக்காய்ச்சலுக்கு எதிராக நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்பதைக்கண்டறிந்துள்ளது.


யாரெல்லாம் அதிகமாக ஸ்பைருலினா உட்கொள்வதைத் தவிர்க்கலாம்?
Hyperthyroidism மற்றும் கடல் சார் உணவுகளில் தீவிர ஒவ்வாமை குறைபாடு உள்ளவர்கள் ஸ்பைருலினாவைத் தவிர்க்க வேண்டும்.அதிகப்படியான ஜீரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தவிர்க்கலாம்.

Phenylketonuria(PKU) என்ற குறைபாடு உடையவர்கள் ஸ்பைருலினா உட்கொள்வதை தவிர்க்கலாம்.
ஸ்பைருலினா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதால்,Multiple sclerosis or lupsus போன்ற குறைபாடு உடையவர்கள் ஸ்பைருலினா உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

ஸ்பைருலினாவை யார் எப்படி உட்கொள்ளலாம்?

12 வயதுக்குட்பட்ட சிறுவர்,சிறுமியர் தினமும் 2 முதல் 4 ஸ்பைருலினாவும்,
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 4 முதல் 6 ஸ்பைருலினாவும் உட்கொள்ளலாம்.
சத்துக்குறைபாடுகள் உள்ளவர்கள் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

நோய்கள் குணமடைய குறைந்தது இரண்டு மாதங்கள் வரையும்,அதிகபட்சமாக ஐந்துமாதங்கள் வரையிலும் தினமும் ஸ்பைருலினா உட்கொள்ள வேண்டும்;அதன்பிறகும் தினமும் உட்கொண்டு வந்தால்,நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து,ஆரோக்கியம் மேம்படும்.வாழ் நாள் முழுவதும் ஸ்பைருலினா தினமும் இரண்டு உட்கொள்ளலாம்.

ஆனால்,நடைமுறையில் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்பதற்காக அடிக்கடி மருந்துகளையோ அல்லது மருத்துவ முறைகளையோ மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.இதனால்,பண விரையம் ஆவதோடு நோயும் குணமாவதில்லை;

ஸபைருலினா மாத்திரையை ஆரம்ப கட்டத்தில் தரமாகவே தயாரித்து விற்பனை செய்வார்கள்;நாளடைவில் சந்தை மிகவும் விரிவடைந்து போவதால்,ஆரம்ப காலத்தில் இருந்த தரத்தை தொடர்ந்து கொண்டு செலுத்துவது கடினமாகிவிடும்.நமது நண்பர் திரு.ஏ.என்.குமார் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் அஷ்யூர் என்ற மூலிகை மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்;இவர் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் தனது ஒவ்வொரு பேக்கிங் ஸ்பைருலினா மற்றும் நோனி தயாரிப்பிலும் தரத்தை விடாப்பிடியாக பின்பற்றிவருகிறார்.இதனால்,இவரது மருந்துகளை எடுத்துக்கொள்வோருக்கு எந்த வித நோயாக இருந்தாலும் அது குறைந்த பட்சம் 60 நாட்களிலும்,அதிகபட்சம் 150 நாட்களிலும் குணமாகிவிடுகிறது.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.