Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச&#

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,348
Likes
13,490
Location
Chennai
#1
பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச்னை


வேலை, வீடு என இரட்டைச் சுமையில் தவிக்கும், எல்லாப் பெண்களுக்குமான பொது பிரச்னை, மன அழுத்தம். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த பெண்களுக்கு, தம்மை கவனித்துக் கொள்ள, நேரம் ஒதுக்குவது அரிதாகிவிடுகிறது.


முடியலையே… எனப் புலம்பிக் கொண்டாவது, எல்லா வேலைகளையும் முடித்து விடும் பலருக்கு தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. இதை தொடர விட்டால், பல்வேறு மனபாதிப்புகளுக்கு, சிவப்பு கம்பளம் விரிப்பது போலாகிவிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தம்மால் முடியவில்லையே என்கிற நினைப்புதான், அழுத்தத்தின் ஆரம்பம். குடும்பத்தில், மனைவியாக, தாயாக, பணிபுரியும் இடத்தில் நல்ல வேலையாளாக திறம்பட செயல்பட முடியாத போது, புலம்பல்கள் அடிக்கடி வந்தால், மன அழுத்த குகைக்குள் சிக்கி கொண்டதை அறியலாம். படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள். வேலையையும் வீட்டையும் கவனிக்கிற, ஒவ்வொரு பெண்ணுமே, அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங்களிலும், நூறு சதவீத பர்பெக்சனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான், ஸ்ட்ரெஸ் வருகிறது.


சமாளிக்க உத்திகள்: வீடு, வேலை என, இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்க பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை, திறமைக்கான ஒரு வடிகாலாக பாருங்கள். படித்திருந்தும், வீட்டில் முடங்கி கிடக்காமல் இருப்பதற்கு, வேலை செய்வது ஒரு ஆறுதல்.
இதற்காக வேலை, வேலை என எந்நேரமும், அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க நினைப்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கான கனவு என்கிற, அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளை தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக வேண்டும்.


வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, அதிகபட்ச கால ஒழுக்கம் அவசியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு, எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பேஸ்புக்கோ, ட்விட்டரோ, டிவியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உலகத்தை மறக்கும் அளவுக்கு, அதிலேயே மூழ்கக்கூடாது.


வேலையிடத்தில் கூடியவரை வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள், ஸ்ட்ரெஸ்சை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். வேலையிடத்தில் செலவழிக்கிற நேரத்தை, ஆக்கப்பூர்வமாக செலவழித்தால், வேலை நேரம் முடிந்தும், அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற, டென்ஷன் இருக்காது. இதை புரிந்து கொண்டு, வீட்டையும், வேலை பார்க்கும் தளத்துக்கான முக்கியத்துவத்தையும் எடை போட்டு பிரித்தாள தெரிந்தவர்களுக்கு, எத்தகைய பிரச்னைகளில் இருந்தும் விடுபட, வழி கிடைக்கும்.
 

bhuvijai

Friends's of Penmai
Joined
Nov 24, 2013
Messages
124
Likes
372
Location
Arakkonam
#2
re: Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிர&#297

Amam endha ulagathula first namaku nama than kavanichikanum
 

jayanthi.s

Citizen's of Penmai
Joined
May 4, 2011
Messages
702
Likes
634
Location
TN
#3
re: Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிர&#297

200% true friends
 

bookslover

Citizen's of Penmai
Joined
Jul 29, 2011
Messages
737
Likes
408
Location
chennai
#4
re: Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிர&#297

nice information friend
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.