Stress Management

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
Stress Management

டாக்டர் அபிலாஷா

கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் கீதாவுக்கு, வயது 29. கணவருக்கு காவல்துறையில் வேலை. காதல் திருமணம் என்பதால், இரு வீட்டினரின் ஆதரவு துளியும் இன்றி, தனியாக வசித்து வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்த வருத்தங்களும் தவிப்பும் கீதாவை வேலையில் கவனம் செலுத்த அனுமதிக்கவில்லை. விளைவு, அலுவலகத்தில் சகதோழிகளுடனும் மிஸ்அண்டர்ஸ்டேண்டிங். யாரைப் பார்த்தாலும் டென்ஷன்... எதற்கு எடுத்தாலும் டென்ஷன். இப்படி கீதாவை அழுத்திய பல பிரச்னைகள், கணவரின் மேல் கோபமாக வெடித்து சண்டை போட வைத்தன.

வாழ்க்கையின் மீது ஒருவித கசப்பும், வெறுப்பும் ஏற்பட்டு, நாளுக்கு நாள் அசுரவேகத்தில் வளர்ந்தன. ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல், விரக்தியடைந்த கீதா, அன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். நல்லவேளையாக கணவர் வந்துசேர, காப்பாற்றப்பட்டாள்.

கீதாவை தற்கொலை வரை யோசிக்க வைத்தவை, உண்மையில் மேலே பட்டியலிட்ட பிரச்னைகள் அல்ல. அவையெல்லாம் சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய மாயைக் காரணங்களே. உயிர் துறக்க முடிவெடுக்கக் காரணம், அவளுக்குள் இருக்கும் அளவுக்கதிகமான மனஅழுத்தமே (Excessive stress). இது கண்ணுக்குத் தெரியும் புறநோய் கிடையாது. யாருக்கும் வரக்கூடிய, குறிப்பாக பெண்கள் அதிகம் இலக்காகும் இந்நோயைக் குணப்படுத்த மருத்துவரும் நீங்கள்தான்... மருந்தும் நீங்கள்தான். ஒரு பைசா செலவில்லாமல், மனம் சார்ந்த இந்நோயிலிருந்து விடுபட... நீங்கள் மனது வைக்க வேண்டும். அவ்வளவுதான்!


இன்றைக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி, முத்தி முதிர்ந்த மனிதர்கள் வரை 'டென்ஷன்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் மிகமிகக் குறைவு! அந்த அளவுக்கு பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து மனஅழுத்தத்துடனேயே உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

'வாழ்க்கையில டென்ஷன் எல்லாம் சாதாரணமப்பா...’ என்று துச்சமாக நினைப்பவர்கள், தொடர்ந்து படியுங்கள். உடலில் ஏற்படக்கூடிய நோய்களில் 90 சதவிகித நோய்களுக்கு மனஅழுத்தமே முக்கியக் காரணமாகிறது. முடி உதிர்தல், தோல் தடித்தல் தொடங்கி ரத்த அழுத்தம், நீரழிவு நோய், இதயநோய் வரை அனைத்துவிதமான நோய்களின் பின்னணியிலும், கொடிய ஆட்சி செய்துகொண்டிருக்கிறது ஸ்ட்ரெஸ். பல குற்றச்செயல்களின் பின்னணியிலும் இந்த ஸ்ட்ரெஸ்தான் கோரப் பற்கள் காட்டிச் சிரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய் பேசுவது, சண்டை போடுவது, அடுத்தவரைக் காயப்படுத்துவது என்று சின்னச் சின்ன குற்றங்கள் தொடங்கி... மோசடி, கடத்தல், அமில வீச்சு, பாலியல் வன்முறை, கொள்ளை, கொலை வரை எதையும் செய்யத் தூண்டுவது இந்த ஸ்ட்ரெஸ்தான்.

இப்போது புரிகிறதா... இது ஏன் கவனம் கொடுத்து சரிசெய்ய வேண்டிய முக்கியப் பிரச்னை என்று!

ஸ்ட்ரெஸ்ஸை அழிக்க முடியாது, கட்டுப்படுத்த முடியும். தனக்கே தனக்கென்று நேரம் ஒதுக்குவது, மனதை அமைதியாக வைத்துக்கொள்வது, மனதின் பாரங்களை மற்றவர்களுடன் பகிர்வது, எமோஷனல் பிரச்னைகளைத் தொடராமல் அன்றே முடிப்பது, மிகமுக்கியமாக தன் மீது அக்கறை எடுத்துக்கொள்வது... இவற்றை எல்லாம் செய்தாலே ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கலாம். இது ஏற்படுத்தும் உடல் சார்ந்த நோய்களை யும் தவிர்க்கலாம். ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் (Stress Management) என்பது, ஒருவரின் ஆளுமையைச் சார்ந்து ஒவ்வொருவருக்கும் வேறுபடக்கூடியது.இதில், பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ், நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் என்று இரு வகை உண்டு. தேர்வுக்காகப் படிக்கும் மாணவனுக்கு, நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்கிற உந்துதலும், சக்தியும் இருந்து, அதை எட்ட அவனுக்குள் உருவாவது பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ். அது இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். இல்லையேல், தேர்வு பற்றிய பயத்தையும், மதிப்பெண் குறித்த கலக்கத்தையும் ஏற்படுத்தும் நெகட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு இடம் கிடைத்து, ஒருவித சோம்பலும், எதிர்மறை எண்ணமும் அவனை ஆக்கிரமித்து, செய்ய வேண்டிய காரியத்தைக் கெடுத்துவிடும். அளவுக்கதிகமான கோபம், பதற்றம், வருத்தம், பயம், தடுமாற்றம், சந்தேகம், கோரபுத்தி என அவன் மனதை மிகச் சிக்கலாக்கிவிடும்.

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை வளர்த்து, நெகட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை நீக்குவது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் கண்டறிந்து களையெடுப்பது எப்படி?

- ரிலாக்ஸ்...
[HR][/HR]மனநல மருத்துவர் அபிலாஷா, ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். சென்னை, 'மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில்’ பி.எஸ்ஸி சைக்காலஜி, 'எஸ்.ஐ.இ.டி’ கல்லூரியில் எம்.எஸ்ஸி சைக்காலஜி முடித்து, அதே கையோடு இத்தாலி நாட்டில் பிஹெச்.டி முடித்தவர். ஆல்டர்நேட்டிவ் மெடிசன், ஹிப்னோதெரபி போன்றவற்றில் டிப்ளோமா படிப்பை முடித்திருக்கும் இவர், இந்தியாவைச் சேர்ந்த வெகுசிலர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள 'அமெரிக்கன் சைக்காலஜிகல் அசோஸியேஷன்' எனும் அமைப்பில் இருக்கிறார். கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவிகள் தொடங்கி பலருக்கும் மனநலம் தொடர்பான செமினார் மற்றும் வொர்க்ஷாப் என்று பயிற்சி அளிப்பவர். ஐ.பி.எஸ் பயிற்சியிலிருப்பவர்களுக்கும் மனநலம் தொடர்பான வகுப்புகளை எடுக்கும் இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மனநல ஆலோசகராக இருக்கிறார். அண்ணா நகரில் சொந்தமாக கிளினிக்கும் நடத்தி வருகிறார்.

'மனோதத்துவம்’ என்ற புத்தகத்தை எழுதிய இவர் இந்தியா மட்டுமின்றி மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் மனநலம் பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ் வளர்த்து, அதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால்... எட்ட முடியாத சாதனையையும் எட்டலாம் என்பதற்கு உதாரணம் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 'ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும்' என்பதுதான் செல்வியின் ஒரே ஆசை, கனவு, லட்சியம் எல்லாம். ஆனால், இதை நிறைவேற்றும் பாதையில் தடைக்கல்... அவளுடைய குடும்பம்தான். வறுமை, தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா, கேன்சர் நோயாளியான அம்மா, இரண்டு தம்பிகள்... இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ் லட்சியம் சாத்தியமா?
''நிச்சயமாக!'' என்று சிரிக்கிறாள் செல்வி ஐ.ஏ.எஸ் என்கிற நேம்போர்டு மின்னும் வாசலில் நின்றபடி, இன்று!

இதற்குக் காரணம்? ஒவ்வொரு தருணத்திலும் நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படுவதற்கான சாத்தியத்தை விரட்டி, தனக்குள் அவள் வளர்த்தெடுத்த பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்! வறுமைக்கு வாக்கப்பட்ட செல்வி, 'நாமெல்லாம் டிகிரி படிக்கிறதே பெரிய விஷயம், 'ஐ.ஏ.எஸ்’-க்கு ஆசைப்படலாமா?’ என்று பலரையும் போல நினைத்திருக்கலாம். ஆனால், 'அறிவு மட்டுமே ஐ.ஏ.எஸ் ஆவதற்கான தகுதி, குடும்ப நிலை அல்ல' என்று தனக்குள் உறுதியேற்றிக்கொண்டாள்.

'எல்லோரும் ஆயிரக்கணக்கில் செலவழிச்சு கோச்சிங் போறாங்க. இந்தக் குடும்பத்தில் பிறந்த நாம அதுக்கெல்லாம் ஆசைப்படலாமா?’ என்று எல்லோரையும் போல புழுங்கியிருக்கலாம். ஆனால், 'அரசு வழங்கும் இலவச கோச்சிங்கைப் பயன்படுத்தி, வென்றவர்கள் பட்டியலில் நானும் இடம்பெறுவேன்' என்று இலக்கு வைத்தாள்.

'வீட்டு வேலை, அம்மாவுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொடுப்பது, தம்பிகளைக் கவனித்துக்கொள்வது என படிப்பதற்கான நேரம்கூட நமக்கு இல்லையே..?’ என்று 'ஓ’வென சிலர் போல அழுதிருக்கலாம். ஆனால், அனைவரும் உறங்கும் தொந்தரவில்லாத இரவுப் பொழுதுகளில், புத்தகங்களோடு வாழ்ந்தாள்.
'கஞ்சிக்கே வழியில்லையாம்... கலெக்டர் கனவு எதுக்கு?’ என்கிற சுற்றத்தின் 'அறிவுரை’, அவள் தன்மானத்தை கதற வைத்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் காதிலேயே வாங்காமல், 'நாளை நான் ஐ.ஏ.எஸ் ஆனபின் இவர்கள் எல்லாம் எந்த முகத்தோடு என்னிடம் வந்து நிற்பார்கள்?!’ என்று நம்பிக்கை பொங்க வியந்துகொண்டாள்.

இடிக்கு மேல் இடியாக, அம்மாவைப் போலவே செல்விக்கும் கேன்சர். ஒரு பெண்ணை உடைந்துபோகச் செய்ய, இதைவிடக் கொடுமையான வியூகங்களை வகுக்க முடியுமா தெரியவில்லை... விதியால். ஆனால், 'ஆரம்ப கட்டம்தானே... ட்ரீட்மென்ட் இருக்கு. சீக்கிரம் முடிச்சுட்டு, பிரிலிமினரி எக்ஸாம் எழுதணும்’ என்று தைரியமாக சிகிச்சையை எதிர்கொண்ட செல்வி, முழுமையாக கேன்சரில் இருந்து மீண்டாள். இதற்கிடையில் அம்மா இறந்துவிட, குடும்பத்தைத் தாயாகித் தாங்கிக்கொண்டே, லட்சியத்தை நோக்கி வேகமாக நடைபோட்டாள்.

சமீபத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வை வெற்றிகரமாக கிளியர் செய் திருக்கும் செல்விக்கு, கண்களில் துளி நீரோடு வாழ்த்துக் கூறி னேன்.

தன் பாதை முழுக்க, நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் எதிர்மறை மனஅழுத்தத்துக்குப் பலியாகும் வாய்ப்புகள் இருந்தும், அவள் பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை மட்டுமே ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுத்தாள்... இலக்கை அடைந்தாள்!

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸும் உங்களைத் தூங்கவிடாமல் செய்யலாம், எப்போதும் உங்கள் மூளையையும் மனதையும் அரித்துக்கொண்டிருக்கலாம், 'இது முடியணுமே’, 'இந்த இலக்கை எட்டணுமே’ என்கிற தவிப்பை உங்களுக்கு இடைவிடாது தந்துகொண்டே இருக்கலாம், கேளிக்கைகளில் முழுமனதாக ஈடுபடவிடாமல் தடுக்கலாம். ஆனால், இதன் விளைவு நன்மையில்தான் முடியும். நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஒருபோதும் நெருங்கவிடாமல் தடுக்கும் என்பது, இதன் இன்னொரு பலம்.

'கமிட்மென்ட்கள் கழுத்தை நெரிக்குதுடா சாமி’ என்ற விழி பிதுங்கலும் இல்லாமல், 'கமிட் மென்ட்களே இல்லப்பா!’ என்ற கட்டவிழ்த்த நிலையும் இல்லா மல், 'ஒரு கமிட்மென்ட் இருக்கு. அதை எப்படியாவது முடிச்சுட ணும், முடிப்பேன்!’ என்ற நம்பிக் கையுடன் அதற்கான முரட்டுப் பாதையில் விருப்பத்துடன் கடப் பதே... பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்! சுருக்கமாகச் சொன்னால்... இஷ்டப்பட்டுக் கஷ்டப்படுவது!

சரி, சொல்லுங்கள்... உங்களின் தற்போதைய கமிட்மென்ட் என்ன?

- ரிலாக்ஸ்...
[HR][/HR]ஓவர் ஸ்ட்ரெஸ்... உடம்புக்கு ஆகாது!

'நீல்சன்' (Nielsen) அமைப்பு 2011-ம் ஆண்டு இந்தியா, மெக்ஸிகோ, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 21 உலக நாடுகளில் 6,500 பெண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவுக்குத்தான் (87%) முதலிடம்.

மெல்பர்ன் பல்கலைக்கழகம் உலகளவில் மேற்கொண்ட ஆய்வில், வேலை சார்ந்த ஸ்ட்ரெஸ் காரணமாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் சொல்லும் விவரங்கள்...

1. பெண்களின் ஸ்ட்ரெஸ் அதிகமாக ஆக... பியூட்டி மற்றும் ஹெல்த் காரணங்களுக்காக 75% அளவுக்கு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்கிறார்கள்.

2. 99% சதவிகிதம் பெண்கள் ஆடை விஷயத்தில் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து தங்களது ஸ்ட்ரெஸ் போக்க நினைக்கிறார்கள்.

3. தொடர் ஸ்ட்ரெஸ் காரணமாக பெண்களின் மூளை சென்ஸிட்டிவாக மாறி, சில ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால், அவர்களுக்கு ஸ்ட்ரெஸ் சார்ந்த டிஸ்ஆர்டர் பிரச்னைகள் வரக்கூடும்!

[HR][/HR]பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ் வளர்க்க ஒரு பயிற்சி...

'
ஒரு சொந்த வீடு வாங்கக்கூட வக்கில்ல...’ என்கிற குமுறாதீர்கள்.

'1200 சதுர அடியில இல்லைனாலும், 800 சதுர அடியில் வீடு பார்க்கலாமே... லோன் போடலாமே!’ போன்ற கணக்கீடுகளால் மூளையைக் கசக்குங்கள்.

'இப்படி மக்கு பிள்ளைங்கள இவ்வளவு ஃபீஸ் கட்டி படிக்க வெச்சு...’ என்று குழந்தைகளிடம் வெடிக்காதீர்கள்.

'ஃபெயில் மார்க்கில் இருந்து முதலில் ஆவரேஜ் மார்க்குக்கு கொண்டு வரணும். படங்கள், கதைகள்னு படிக்கிற முறையைக் கொஞ்சம் மாத்தி சொல்லிக் கொடுப்போம்’ என்று தேடல்கள், முயற்சிகளில் நேரத்தைச் செலவழியுங்கள்.

'இந்த நோய்க்கு வைத்தியம் பார்த்தே சொத்து காலியாகிடும்’ என்று சோர்ந்து போகாதீர்கள்.

'உடற்பயிற்சி, யோகா, பிரணாயாமம், உணவுமுறை மூலமா இயற்கையாகவே நோயை கட்டுக்குள்ள கொண்டு வருவேன்’ என்று சபதம் எடுங்கள்.

'ஆபீஸ், வீடுனு மாடா உழைக்கிறேன்...’ என்ற இரட்டை பணிச்சுமை குமுறல் கஷ்டம்தான். ஆனால், அதையே எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்.

'கொஞ்சம் பிளான் பண்ணினா, இதை சுலபமா எதிர்கொள்ள முடியும்..!’ என்று நம்புங்கள்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.