Stress relief tips from Experiences-அறிவுரை வேணாம்... அனுபவ ஆலோசனை போதும&#30

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
மனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், 'கார்டிகோட்ரோபின்'
எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது. இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா
துயரத்தையும் தருகிறது.

ஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில் தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, அதிலிருந்து மீண்டு வருவது ஒரு கலை. அனைவருக்கும், அதிலும் மென்மையான மனம், குணம் கொண்டுள்ள நாயகியருக்கு, இது சாத்தியப்படுமா என்பது
தெரியவில்லை.
ஆனால், நம் அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக ஒரு வழிகாட்டியாக, நம்மால் இருக்க முடியும். மற்றவர்களின் கஷ்டம் அறிந்து, அவர்களை காயப்படுத்தாமல் ஆறுதல் படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; அதுவும் ஒரு கலை.
நம் நாயகியருக்காக சில அனுபவ
வழிகாட்டிகள் இதோ...
# யாரும் கவலையை, மனச்சோர்வை கட்டிப் பிடித்திருக்க விரும்ப மாட்டர். அது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓர் உணர்வு; காய்ச்சல், தலைவலி போன்ற ஓர் உடல் நலக்குறைவு.
# காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் பிரச்னை அற்பமாக இருந்தாலும், அதன் பாதிப்பு அவர்களுக்கு ஆழமாக இருக்கலாம்; அலட்சியம் காட்டாமல்,
உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.
# 'அட என்ன... எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா, சோகமாகவே இருக்க... வீடு, ஆபீஸ் இந்த மாதிரி பிரச்னை என, தனித்தனியாக பிரிச்சி வச்சுக்கோ; இதெல்லாம் சகஜம்' என்பது போல், அதிமேதாவி போல் உபதேசம் செய்யாதீர்கள்.
# தன் கஷ்டத்தை சொல்லி அழத் தோன்றும். எதிர்மறையாக பேசாமல், விளையாட்டுத்தனம் காட்டி, 'அழுவதை போட்டோ எடுத்து, 'வாட்ஸ் அப்'பில் போடட்டுமா...' என்பது போன்ற கேலி பேசாமல், உங்கள் காதுகளை மட்டும் கொடுங்கள்.
# மனம் உடைந்து போயிருப்பவர்கள், தனிமையை அதிகம் விரும்புவர். அது இன்னும் மோசமாகி விடக் கூடும்; அவர்களை, வேறு ஏதாவது காரியத்தில்
ஈடுபட வையுங்கள்.
l ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க விடாமல், வெளியே சென்று வர
உதவலாம்.
# நல்ல உடை உடுத்தி, அலங்காரம் செய்து கொள்வது, இசை கேட்பது, பழைய நண்பர்களிடம் பேசுவது என, வேறு செயல்களில் அவர்கள் மனம் திரும்ப உதவுங்கள்.
# அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் படியான, ஏதாவது புது விஷயத்தை கற்றுக் கொள்ள ஆலோசனை கூறுங்கள். புதிய நட்பு, தையல், கணினி, இந்தி, பிரெஞ்சு மொழி வகுப்புகளுக்கு போவது என, புதிய விஷயங்களில் ஈடுபடும்போது, மனம், கவலைகளை
மூலைக்கு தள்ளிவிடும்.
#l அவர்களின் தனித் திறமைகளை ஞாபகப்படுத்தி, உற்சாகப்படுத்துங்கள். எதையும் திணிக்காதீர்கள்; வற்புறுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டு விடும்.
l மன அழுத்தம் தரக் கூடிய, ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள், சூழ்நிலைகள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
# நன்றாக சாப்பிடும்படி, நன்றாக துாங்கும்படியான வசதிகளை பார்த்துக் கொள்ளுங்கள். மனச்சோர்வுக்கு மாத்திரைகள் உண்டு என்றாலும், நல்ல துாக்கம், ஆரோக்கியமான
மனநிலையை கொடுக்கும்.
# உணவில் சோளம், உருளை, மொச்சை, கொண்டைக் கடலை, முட்டைகோஸ், பீட்ருட், கோதுமை சப்பாத்தி, பேரீச்சை போன்றவற்றை சேர்த்துக் கொடுங்கள்.
# கவலையை மறக்க, வருந்தி முயற்சிக்க கூடாது. நினைவுகளில் இருந்து கவலை, தானாக அழிய வேண்டும் என்பதை, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வையுங்கள்.
# மனச்சோர்வு, மனக்கவலை, வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச்
செய்து விடும் என்பதை அறிவுரை, ஆலோசனையாக கூறாமல்,
அனுபவத்திலிருந்து கூறுங்கள்.
உலகத்தை பற்றிய கண்ணோட்டத்தை, மனச்சோர்வு சிதைத்து விடும். காலமும்,
சரியான சிகிச்சையும் தான், இதை சரி செய்து மீட்டுத் தர முடியும் என்றாலும், இது மாதிரியான அன்பான அனுசரணையாலும் சரி செய்ய முடியும்.
உறவுகளை இழக்கும் போதும், அந்த உறவுகளால் காயப்படும் போதும் ஏற்படும் வலியை குறைக்க, அந்த கடும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர, நமக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு உறவை இழந்து, அதன் சந்தோஷத்தையும் இழந்து, அந்த இழப்பை சந்தித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள கூடியது இது. 'எனக்கு எல்லாமே தெரியும். என் ஆலோசனைகளை கேட்டுக்கோங்க' என்று யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்; அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால்,
அலட்சியப்படுத்தாதீர்கள்!அனுபவம் என்கிற பெரிய பட்டப் படிப்பினால் ஏற்பட்ட பக்குவமே, இவற்றையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளத் துாண்டியது என்னை!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: Stress relief tips from Experiences-அறிவுரை வேணாம்... அனுபவ ஆலோசனை போதும

Thanks for sharing these suggestions.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.