Students who go by Car tend to loose smartness - கார்களில் பள்ளிக்குச் செல்லும் &a

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
பள்ளிக்கு பிள்ளைகள் சைக்கிளிலோ, அல்லது நடந்தோ சென்றால் உடல் பருமன் போடாது என்பது தெரிந்த விஷயம், ஆனால் பள்ளிக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லும் பிள்ளைகளுக்குத்தான் கற்றல் திறன், கிரகிக்கும் திறன் அதிகம் இருக்கிறது என்று டென்மார்க் பல்கலைக் கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை டெய்லி மெய்லில் வெளியாகியுள்ளது.

காரிலோ அல்லது பள்ளி வாகனங்களிலோ அல்லது பொது வாகனங்களிலோ பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு கவனம் செலுத்தும் அளவில் மந்த நிலை ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அதாவது பள்ளிக்குச் செல்லும்போது சைக்கிள் அல்லது நடந்து செல்வதால் உடற்பயிற்சி போல் ஆகிறது. இதனால் ஒரு அரை ஆண்டு படிப்பில் அவர்கள் முன்னிலை வகிப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கார்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ வரும் குழந்தைகளை சோதனை செய்து பார்த்ததில் கவனம் செலுத்தும் அளவில் இவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவது தெரிய வந்தது.

முதலில் இந்த ஆய்வாளர்கள் காலை உணவு மற்றும் மதிய உணவு எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் கவனக்குவிப்பு அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற இந்த ஆய்வாளர்களுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவு, காலை உணவு முறைகள் படிப்பில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பள்ளிக்கு வரும் முறையில் பெரிய அளவில் படிப்பு விஷயம் அடங்கியுள்ளதாக அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

பயிற்சி செய்தவுடன் சிலருக்கு புத்துணர்வு ஏற்படுவது சகஜம், ஆனால் பள்ளிகளுக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ வரும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியின் விளைவு நீண்ட காலம் நீடிப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Students who go by Car tend to loose smartness - கார்களில் பள்ளிக்குச் செல்லும&#3021

Hi Jayanthy, Wonderful findings by the Denmark University researcher people regarding the benefits to the students who go by cycling to schools. thank you for sharing such a valuable research findings.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Re: Students who go by Car tend to loose smartness - கார்களில் பள்ளிக்குச் செல்லும&#3021

Welcome Sister
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.