Successful egg freezing - தாய்மை அடைய விரும்பும் பெண்களுக்கு &#

danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#1


மனிதகுலத்தில் இனப்பெருக்கம் என்பது தற்போது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் பெருமளவிலான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.
சுகாதார சீர்கேடுகளினாலோ பிற காரணங்களினாலோ தடைப்படும் குழந்தைப்பேறு என்பது தற்போது பெற்றோர் விரும்பும் நேரத்தில் அமைத்துக் கொள்ளக்கூடிய உத்திகளைக் கொண்டதாக மாறியுள்ளது.

இத்தகைய முறைகளில், பெண்களின் கரு முட்டைகளை உறைய வைக்கும் தொழில்நுட்பம் நகர்ப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. பெண்களின் கருமுட்டைகளைப் பிரித்தெடுத்து உறைய வைத்து பதப்படுத்தும் மையங்கள் தற்போது இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளன.

இவ்வாறாக உறையவைக்கப்படும் கருமுட்டையை பிற்காலத்தில் அந்தப் பெண் விரும்பும் நேரத்தில் கருவுறச் செய்து கருப்பையில் மீண்டும் பொருத்திக் கொள்வதன்மூலம் ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கமுடியும் என்று புதுடெல்லியைச் சேர்ந்த போர்டிஸ் லா பெம் என்ற இன்பெர்டிலிட்டி மையத்தின் இயக்குனர் டாக்டர் ரிஷிகேஷ் டி.பாய் தெரிவிக்கின்றார்.

கதிரியக்கச் சிகிச்சைகள் தேவைப்படும், புற்றுநோய் சிகிச்சைகளை மேற்கொள்ள நேரிடும் ஒருவருக்கு அவரது கருப்பைகள் பாதிக்கக்கூடிய அபாயம் உண்டு. அத்தகைய பெண்களுக்கு இந்த கருமுட்டை உறைவு முறைகள் பயனளிக்ககூடியவையாக இருக்கும். அதேபோல் குடும்பப் பின்னணி காரணமாக இளம் வயதிலேயே மாதவிடாய் நிற்கும் பிரச்சினைகளுக்கு ஆளாகும் பெண்களும் இத்தகைய முறைகளினால் பயன் பெறலாம் என்று டாக்டர் பாய் குறிப்பிடுகின்றார். ஒரு பெண் 35 வயது நிரம்பும்முன்னரே இவ்வாறு கரு முட்டையை சேமித்தால் 75 சதவிகிதம் அவர் நேரடியான குழந்தைப் பிறப்பை அனுபவிக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், பித்தப்பை, மார்பகம் மற்றும் கணையப் புற்றுநோய் போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த முறையைப் பின்பற்றி குழந்தைப்பேறினை அடையலாம் என்றும் அவர்கள் உறுதியளிக்கின்றனர்.






(இணையத்தில் சுட்டது...)
 

danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#3
Re: தாய்மை அடைய விரும்பும் பெண்களுக்கு இன்&am

உபயோகமான தகவலுக்கு நன்றி நிதாக்கா
நன்றி சரண்....
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#4
Re: தாய்மை அடைய விரும்பும் பெண்களுக்கு இன்&#2

Thanks for the useful sharing nitha......
 
Joined
Jun 23, 2014
Messages
3
Likes
2
Location
tanjai
#5
Re: Successful egg freezing - தாய்மை அடைய விரும்பும் பெண்களுக்க&#3009

science has improved more. is this facility is available in tamilnadu
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.