Suitable Bindi shape for your face - பொட்டு வைத்த முகம்

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1


எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், அழகு முழுமை பெறவில்லை என்பது பலரின் கருத்து. அதுவும் பட்டுப்புடவை கட்டிவிட்டால், பொட்டு அவசியம் தேவை என்று வலியுறுத்துகிறவர்களும் உண்டு.

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில் பொட்டு அழகின் சின்னமாக கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும்தான் பொட்டு வைப்பார்கள் என்று கருதப்பட்டது. இப்போது அழகு என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பிடித்ததாக பொட்டு மாறிக்கொண்டிருக்கிறது. கடல் கடந்து வெளிநாடுகளிலும் பொட்டின் புகழ் பரவிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் எல்லோரையும் கவரும் விதத்தில் பொட்டுக்கள் வண்ணம், வடிவம் போன்றவைகளில் புதுமை படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொட்டுக்கென்றே தனிக்கடைகள் தோன்றும் நிலை ஏற்பட்டுவிட்டது. தங்க நகை கடைகளில் பெண்கள் வடிவங்கள் பார்த்து ஆபரணங்கள் தேர்வு செய்வது போல், இப்போது பொட்டு கடைகளுக்குச் சென்று, போட்டி போட்டு பொட்டுகளை தேர்வு செய்து வாங்குகிறார்கள். அதனால் பொட்டும் இப்போது ஆபரணம் என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் பொட்டும்- ஆபரணமும் சேர்ந்திருப்பது புதுவிஷயம். புடவையில் முத்துக்கள், மணிகள், ஜிகினாக்கள் இணைப்பது போல், இப்போது பொட்டுகளிலும் இணைப்புகள் செய்கிறார்கள். எந்த மாதிரியான இணைப்புகள் தேவை என்பதை உணர்ந்து, அதை மறுநாளே உருவாக்கி கொடுத்துவிடும் பணியிலும் பொட்டு தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த வடிவ முகத்திற்கு, எந்த மாதிரியான பொட்டுகள் பிடிக்கும்?

சதுர முகம்:

* இவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். இவர்கள் வைத்துக்கொள்ளும் பொட்டுக்கள் நீளமானதாகவும், அகலம் குறைந்ததாகவும் இருக்கக்கூடாது. உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

உருண்டை முகம்:

* இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகுதரும்.

* இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

முக்கோண வடிவ முகம்:

இவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

இதய வடிவ முகம்:

* இவர்களுக்கு நீண்ட பொட்டுகள் நன்றாக இருக்கும்.

முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine June 2017. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.