Summer Holiday - கோடை விடுமுறை... குழந்தைகளின் இயல்பைப் &#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கோடை விடுமுறை... குழந்தைகளின் இயல்பைப் பறிக்காதீர்கள்..!

ஆலோசனை

நளினி சம்பத்குமார்


தேர்வுகள் முடிந்து நீ....ள கோடை விடுமுறை வந்தாகி விட்டது. முன்பெல்லாம் விடுமுறை என்றாலே கிராமங்கள், சொந்த ஊர்களுக்குப் போய் தாத்தா, பாட்டி, உறவுகளோடு உறவாடும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு வாய்த்தது. அதன்மூலம் நிறைய கற்றுக்கொண்டார்கள். மகிழ்ச்சியாக பொழுதுகளைக் கழித்தார்கள்.

இன்றைக்கு உள்ள பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதெல்லாம் வாய்ப்பில்லை. அவசர உலகில் அடுக்கு மாடி வளாகத்திலேயே சுற்றிச்சுற்றி வர வேண்டிய கட்டாய நிலை! வரிசை கட்டி நிற்கின்றன கோடைகாலப் பயிற்சிகள். பள்ளி வகுப்பறை போய் இன்னொரு வகுப்பறை. கட்டுப்பாடு.

பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும்பட்சத்தில் குழந்தைகள் பாடு பரிதாபம். விடுமுறையும் மற்றொரு நாளாகவே கழிந்து விடுகிறது. இதனால், ஜாலியாக ஆரம்பிக்கும் விடுமுறை சில நாட்களிலேயே பிள்ளைகளுக்கு சலிப்பூட்டத் தொடங்கிவிடுகிறது. என்ன செய்யலாம்? உற்சாகம் குறையாமல் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பது எப்படி?

ஆலோசனை சொல்கிறார் கல்வி ஆய்வார் நளினி சம்பத்குமார். ‘‘கிட்டத்தட்ட பத்து மாதங்கள் பள்ளி பாடங்களிலும் தேர்வுகளிலும் கவனம் செலுத்திய குழந்தைகள் சட்டென நிறுத்தும் போது எரிச்சல் எட்டிப் பார்க்கதான் செய்யும். அதனால், அவர்களை வேறு ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி திருப்ப வேண்டும். சிறு சிறு புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து நண்பர்களோடு சேர்ந்து படிக்கச் செய்யலாம். வாரம் ஒருமுறை எங்காவது பயனுள்ள இடங்களுக்கு அைழத்துச் செல்லலாம்.

தாத்தா, பாட்டி வீடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் இருப்பவர்கள் ஊரிலிருந்து அவர்களை இங்கே வரவழைக்கலாம். இதனால், அவர்களின் அன்பும், பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்கும். அவர்கள் சொல்லுகின்ற கதைகள் குழந்தைகளுக்கும் போய்ச் சேரும். இதனால், உறவுகள் மேம்படும். அருகில் வசிக்கும் குழந்தை களைச் சேர்த்து ஒரு டீம் உருவாக்கலாம்.

வாரத்தில் ஒருநாள் ஒரு குழந்தையின் பெற்றோர் இந்த டீமை வழி நடத்தி வெளியில் அழைத்துச் செல்லலாம். குறிப்பாக, முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று நாடகம், நடனம் போன்ற சிறு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்து மகிழ்விக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு வயதானவர்கள் பற்றிய புரிதல் பிறக்கும். கலைகள் மீதான ஆர்வமும் அதிகரிக்கும். குழுவிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் ஒரு கதையைச் சொல்லி தினமும் விளையாட வைக்கலாம்.

அருங்காட்சியம், அறிவியல் மையம், நூலகம் என அவ்வப்போது அழைத்துப் போகலாம். குழுவாக இணைந்து வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது எப்படி? பணம் போடுதல், எடுத்தல் போன்ற தெரியாத விஷயங்களைக் கற்றுக் கொள்ள செய்யலாம். குழுவில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் மொழி தெரியும் பட்சத்தில் அதனை மற்றக் குழந்தைகள் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம்.

பெரியவர்களுக்கே தெரியாத, ஒரு மொபைல் அப்ளிகேஷனை கூட சாதாரணமாக டவுன்லோடு செய்து எளிதாக பயன்படுத்தும் ஆற்றல் இன்றைய குழந்தைகளுக்கு இருக்கிறது. ஆனால், தினந்தோறும் பள்ளிக்குச் செல்ல அவர்கள் பயன்படுத்தும் சைக்கிளுக்கு காற்றடிக்கத் தெரிவதில்லை. சைக்கிள் செயின் கழன்றால்கூட அதனை மாட்டத் தெரியாமல் முழிக்கின்றனர்.

அதையெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். அதேபோல், வீட்டில் பல்ப் ஃபியூஸ் போனால் கழற்றி மாட்டப் பழக்கலாம். சமையலில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். டீ போடுவது, காய்கறி நறுக்குவது, தோசை சுடுவது எனச் சின்ன சின்ன வேலைகளை கற்றுக் கொடுக்கலாம். வெஜிடேபிள் சாலட் தயார் செய்யச் சொல்லி அதை அவர்களையே சாப்பிடச் சொல்லலாம். அதனை போட்டோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். இதில், கண்டிப்பு காட்டக் கூடாது. அவர்கள் போக்கிலேயே சென்று கற்றுத் தர வேண்டியது அவசியம்.

ஒரு பொருளை வாங்கும் முன்பே அது அவசியமா என முடிவெடுக்க கற்றுக்கொடுங்கள். அவர்களை யோசிக்க வையுங்கள். ஒருவேளை அந்த முடிவு தவறானதாக இருந்தாலும் கவலைபட வேண்டாம். ஏனெனில், தவறிலிருந்தே சரியான பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு சின்னதாக வேலைகளைக் கொடுத்துப் பழக்கலாம். வீட்டை சுத்தம் செய்யச் சொல்லலாம். அதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். துணி வைக்கும் அலமாரியை சுத்தம் செய்து அழகாக்கலாம். புத்தக மேசையை ஒழுங்கு படுத்தலாம்.

வீட்டிற்கு பெயின்ட் அடிக்கச் சொல்லலாம். மொட்டை மாடியில் தோட்டம் வளர்க்க வைக்கலாம். அதற்கு தினமும் தண்ணீர் தெளிப்பதை வேலையாக்கலாம். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால், தங்களின் குழந்தை நலனுக்காக ஒரு பத்து நாட்கள் விடுமுறை எடுப்பது அவசியம். அப்போதுதான், அவர்களின் வாழ்க்கை மேன்மை அடையும்..!’’தாத்தா, பாட்டி வீடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் இருப்பவர்கள் ஊரிலிருந்து அவர்களை இங்கே வரவழைக்கலாம். இதனால், அவர்களின் அன்பும், பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: கோடை விடுமுறை... குழந்தைகளின் இயல்பைப் பற&

Very good idea ji. Worthy share :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.