Summer Tips for Skin Care

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#1
உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#4
Some tips for protect your skin from sun

கடுகு எண்ணெய்
கருமை நிற சருமத்தை இயற்கையாக போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறந்ததாக இருக்கும். அதிலும் காலையில் கடுகு எண்ணெயை வைத்து உடலில் மசாஜ் செய்து, சூரிய வெளிச்சத்தில் படுத்தால், சூரியனிடமிருந்து வரும் வைட்டமின் டி சத்தானது உடலில் எளிதில் ஊடுருவுவதோடு, எலும்புகள் வலுவடையும். அதனால் தான் குழந்தைகளுக்கு எலும்புகள் வலுவடைய, கடுகு எண்ணெயை வைத்து மசாஜ் செய்கின்றனர்.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்திப் பூ சூரியனுடன் ஒரு இணக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே தான் இதற்கு சூரியகாந்தி என்ற பெயர் வந்தது. இத்தகைய பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, சருமத்தின் நிறம் மாறாமலும், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்டாமலும் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கிறது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் சரும செல்களை புதுபிப்பதற்கு உதவும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. அதே சமயம், சூரியக்கதிரால் சருமத்தின் நிறம் பழுப்பாக மாறாமலும் தடுக்கும். அதற்கு ஆலிவ் ஆயிலில் சிறிது அயோடின் (உப்பு) சேர்த்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் லோசனும் கூட. அதிலும் இது அதிக சென்சிடிவ்வான சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும நிற மாற்றத்தை தடுக்காது, ஆனால் இதனை வெயிலில் செல்லும் முன் தடவிக் கொண்டு சென்றால், சரும நிற மாற்றத்தைத் தடுக்கலாம். மேலும் இது அலர்ஜி மற்றும் அரிப்பு போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.