Swimming - ஆசை இருந்தால்... நீந்தி வா!

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
ஆசை இருந்தால்... நீந்தி வா!

“நீச்சல் என்பது மிகச் சிறந்த உடற்பயிற்சி. உச்சி முதல் உள்ளங்கால்வரையில் எல்லா அங்கங்களையும் பயன்படுத்தாமல் நீச்சல் அடிக்க முடியாது. நீச்சல் என்பது மூளை மற்றும் உடல் இரண்டையும் ஒரே சமயத்தில் ட்ரிக்கரும் செய்துவிடும்.... அதேசமயம் ரிலாக்ஸும் செய்துவிடும் என்பதால் மன அழுத்தம் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்க டாக்டர்களே நீச்சல் பயிற்சியை சிபாரிசு செய்து என்னிடம் அனுப்புகிறார்கள்.
மது, புகை, போதை என தீயப்பழக்கங்களுக்கு அடிமையானவர்களையும்கூட நீச்சல் பயிற்சி மாற்றிவிடும். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகளின் மூளையன் செயல்திறன் அதிகரிக்கும் என்பதால் வெளிநாடுகளில் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முயற்சியும், பயிற்சியும் கை கூடினால், உடல் வலிமை, மனவலிமை இரண்டுமே தரக் கூடிய நீச்சலைக் கற்று, தன்னம்பிக்கை மனிதனாக வீறு நடை போடலாம்!’ என்கிறார் நீச்சல் வீரர் முனியாண்டி!.
எளிய குடும்பத்தில், சாதாரணப் பின்னணியில் பிறந்து வளர்ந்த முனியாண்டி, நம்பர் ஒன் நீச்சல் பயிற்சியாளர் ஆனதும் ஒரு தன்னம்பிக்கை கதைதான்!
“பெரிய குடும்பம் எங்களுடையது. என்னுடைய தந்தை முத்தையா, சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் என்னுடைய ஆறு வயதிலேயே காலமாகிவிட்டார். அவருக்குப் பின் ஒற்றை ஆளாக எங்களை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தது எங்கள் அம்மா வள்ளியம்மைதான்.’
“சிறு வயதில் ஏரி, குளம், கிணறு, கடல் என எதைப் பார்த்தாலும் தொபுகடீர்ன்னு குதித்து, கண் இமைக்கும் நேரத்தில் நெடுதூரம் நீந்தி விடுவேனாம்... அந்த வேகமும், ஸ்டைலும் எனக்கு தமிழ்நாடு காவல் துறையில் நீச்சல் வீரர் பணி கிடைக்கச் செய்தது. மாநில அளவில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றேன்’ என்று ஆரம்பித்தார் தற்போது சென்னை மாநகராட்சியில் நீச்சல் பயிற்சியாளராகப் பணிபுரியும் எம். முனியாண்டி.
பின்னர் ஹரியானா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஒரு கால கட்டத்தில் எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்க எனக்கு சிறிய ஓய்வும், இடைவெளியும் தேவைப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனக்கு பணியிழப்பு ஏற்பட்டுவிட்டது. அது எனக்குள் ஒரு பெரிய சவாலாக அமைந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவில் உள்ள தேசிய நீச்சல் பயிற்சியாளர்களுக்கான அமைப்பில் பயின்று நான் ஒரு முழு நேர நீச்சல் பயிற்சியாளரானேன். திரும்ப வந்து 1992 முதலமைச்சரின் பாதுகாப்புக்காக இருக்கும் கருப்புப் பூனைப் படையில் சேர்ந்து அவர்களுக்கு நீச்சல் பயிற்சியளித்தேன். அப்போது அந்தக் குழுவினர் நீச்சல் விளையாட்டைப் பொருத்த அளவில் அனைத்துப் பரிசுகளையும் பெற்றனர். பின்னர் காவல் பயிற்சிக் கல்லூரியில் நீச்சல் பயிற்சிக் கல்லூரியில் நீச்சல் பயிற்சியாளராக இருந்து தற்போது சென்னை மாநகராட்சியில் நீச்சல் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறேன். இங்கு சேர்ந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. முக்கியமாக ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2004ல் அகில இந்திய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் வெங்கடேசன் என்ற ஒரு சிறுவன் தங்கப்பதக்கம் பெற்றான். தவிர ஸ்ரீநிராம் என்ற சிறுவனும் தேசிய அளவில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறான் என்றார் பெருமையுடன்.

முன்பெல்லாம் பொருளாதார ரீதியில் வசதி படைத்தவர்கள் மட்டுமே நீச்சல் விளையாட்டுக்களில் பங்கு பெறும் நிலை இருந்தது. இப்போதைய நிலை எப்படி?
அந்த நிலை மாறிவிட்டது. அதிலும் சென்னை மாநகராட்சியைப் பொருத்த அளவில் பொருளாதாரம் என்பது நீச்சல் விளையாட்டில் சாதனைகள் புரிய தடையாக இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக ஏழை மணவர்களுக்கு சத்தான உணவைத் தொடர்ந்து அளிப்பதற்கான முயற்சிகளை மேயர் சைதை துரைசாமி எடுக்கிறார்.

இந்தத் தொழிலில் தாங்கள் கண்டது என்ன?
என்னிடம் பெரும்பாலும் ஏழைக்குழந்தைகளே பயிற்சி பெற்று, போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெறுவதனால் எனக்கு இதில் ஓர் ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. இந்திய அளவில் பல பேர் தங்கம், வெள்ளி என பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். என்னுடைய மாணவர்கள் ஆசிய அளவில் வெற்றி பெற வேண்டும். இங் பயிற்சி பெறும் எனது மாணவர்களில் ஒருவரையாவது 2016ல் ஒலிம்பிக்கில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்! என்கிறார் தன்னம்பிக்கை மிளிர!
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#2
ithu unmaithan yuvan.aanaal ithu entha alavirku udalukku nallatho anthalavukku athil sirithu carelessaga irunthalum perum prachanakividukirathu.athuthaan konjam payamaga irikirathu:pray1:
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#3
Careful trainer means ok to learn...But swimming is best exercise than other...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.