Swine Flu

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
[h=3]பன்றிக் காய்ச்சல் [/h]



தொற்றுநோய் என்ற அடிப்படையில் 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலேயே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாகப் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் N1 H1 இன்புளுவன்சா ஸ்வைன் வேகமாகப் பரவி வந்தது.

இதனடிப்படையில் ஐ.நா வின் உலக சுகாதார அமைப்பான WHO இன் ஜுன் 11 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த அவசரக் கூட்டமொன்றில் ஸ்வைன் புளு என்று கூறப்படும் பன்றிக் காய்ச்சல் உலகளாவிய முறையில் பரவி வரும் தொற்று நோய் என உலக சுகாதார தாபனத்தின் இயக்குனரான Dr.மார்க்ரெட் தெரிவித்தார்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
பன்றிக் காய்ச்சலும் வைரசும்: பன்றிக்காய்ச்சல் ஒரு வகை ‘இன்புளுவென்சா’ (influenza) நோய் ஆகும். முலையூட்டிகளிலும், பறவைகளிலும் அவற்றின் சுவாசக் குழாய்களில் தொற்றுகின்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளிக்காய்சலையே மருத்துவ மொழியில் இன்புளுவென்சா அல்லது ஃப்ளு என்கிறார்கள். ஃப்ளு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசுகளில் a,b,c என்று மூன்று வகை உண்டு. இவை மூன்றும் மனிதனில் ஃப்ளு காய்ச்சலை விதைக்க கூடியவை. இவற்றில் a,c வகை வைரஸ்கள் பன்றிகளிலும், a வகை வைரஸ்கள் பறவைகளிலும் கைவரிசை காட்டக் கூடியவை.

swine flu3.jpeg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#3
இன்புளுவென்சா வைரஸ்


மூன்று வகை வைரஸ்களிலும் ஏராளமான உபவகைகள் காணப்படுகின்றன. வைரசுக்கள் நியூக்கிளிக் அமிலங்களாலும், ஹீமாகுளுற்றினின் (H-Haemagglutinin), நியூறாமினிடேஸ் (N-neuraminidase) என்னும் புரதங்களினாலும் ஆனவை.

swine flu H1N1.jpeg



இவ்விரண்டு வகைப் புரதங்களிலுமே முன்னையதில் 19 உபவகைப் புரதங்களும் (H1 – H19), 7 உபவகைப் புரதங்களும் (H1 – H7), இருக்கின்றன. வைரஸ் ஒன்றில் காணக் கூடிய இரண்டு புரதங்களிலும், உபவகைப் புரதங்களினதும் சேர்மானத்தின் அடிப்படையில் ஃப்ளு வைரசுகள் H1 H1, H1 N2, H2 H2, H2 N3, H3 N1, H3 N2, H5 N1 ……… என்றவாறு பெயரிடப்பட்டுள்ளது. இவ்வைரசுகளில் A வகையைச் சேர்ந்த H1 N1, H1 N2, H3 N2 ஆகிய மூன்றும் பன்றிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றிலும் இப்போது உலகைக் கதிகலங்க வைத்திருக்கும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் H1 N1 ஆகும்.
பன்றிகளில் பன்றிக் காய்ச்சல் நோய் யு வகை H1N1 வைரசால் ஏற்படுவது முதன்முதலில் 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. பன்னெடுங் காலமாகப் பன்றிகளைத் தாக்கிவரும் H1N1 வைரசுக்களிலிருந்து இப்பொழுது மனிதர்களைத் தாக்க ஆரம்பித்திருக்கும் பன்றிக் காய்ச்சல் H1N1 வேறுபட்டது. உலகம் பூராகவும் மில்லியன் கணக்கானோரைப் பீடிக்கும் சாதாரண ஃப்ளுவும் ( Common Flu) A வகையைச் சேர்ந்த H1N1 வைரஸ் கிருமிகளால் தான் ஏற்படுகின்றது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
இதுவரையில் மனிதர்களிலோ அல்லது பன்றிகளிலோ கூடக் காணப்படாத இந்தப் புதிய வைரசை அமெரிக்க் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் விரிவாக ஆராய்ந்துள்ளது. இதில் இப்புதுவகை வைரஸ் 2 வகை. பன்றி ஃப்ளு வைரஸ் ஒரு வகை, பறவை ஃப்ளு வைரஸ் ஒரு வகை மனித ஃப்ளு வைரஸ் என 4 விதமான ஃப்ளு வைரசுகள் இணைந்து உருவான ஒரு விரியமான கலப்பு பிறப்பு(Variant Strain) என்பது தெரிய வந்துள்ளது.
மனித உயிரிகளை பறித்த A வகை H1N1 வைரசுக்களினால் பிரசவத்தில், பன்றி ஃப்ளு வைரசுகளின் பங்களிப்பே அதிகம்.

இதனால் அது மனிதர்களில் ஏற்படுத்திய சளிச்சுரத்தில் பலரும் ஸ்வான் ஃபுளு ( Swine Flu) அல்லது பன்றிக் காய்ச்சல் என அழைத்தனர்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
‘H1N1’ இன்ஃபுளுவன்சா

.


இந்நோய் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றது. எனினும் பன்றிகளிடையே வைரசுகள் பாரிய தாக்கம் எதனையே ஏற்படுத்தவில்லை. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகின்றது. இவ் வைரஸ் ஒரு மனிதரைத் தாக்கிய பின் மனிதரின் உடலுக்குள் மரபணு சடுதி மாற்றம் பெற்று மனிதர்களிடமிருந்து வேறொரு மனிதனைத் தாக்குகின்றது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
H1N1 வைரசுகளின் பண்பு:
  • தும்மல் இருமலில் இருந்து வெளிப்பட்டு 2 தொடக்கம் 8 மணி நேரம் வரைத் தொற்றும் தன்மையுடன் இருக்கும்

  • நோய் வருவதற்கு ஒரு நாள் முன்பிலிருந்து பாதித்த 7 நாட்கள் வரை பரவும் தன்மையுடையது.

  • இவ் வைரஸ் உடலினூள் நுழைந்து 48 மணி நேரத்திற்குள் நன்கு செயற்படும். அதன் பின்பு பல்கிப் பெருகி உடலின் பல செல்களைத் தாக்கிவிடும்.

  • 75-100 பாகை செல்சியஸ் வெப்பத்தில் செயலிழக்கும் தன்மையுடையது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
தொற்றும் முறைகள்:








  • நோய் தாக்கியவர்களிடமிருந்து வைரஸ் மற்றவர்களிடமிருந்து வேகமாகப் பரவும்

  • காற்றின் மூலம் வேகமாகப் பரவும் ஆற்றலுடையது.

  • நோய் தொற்றியவரின் உமிழ் நீர், சளியைத் தொட்டுவிட்டு கை கழுவாமல் மற்றவரைத் தொட்டால் அதனால் பரவும்.

  • எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றினுடாகவும் தொற்றும்.

  • இன்ஃபுளுவன்சா வைரஸ் தொற்றியுள்ள மனிதனுடைய மேல் சுவாசப் பாதையிலுள்ள திரவப் பொருளினுடாக சுகதேகியான நபருக்கு இந்நோய் தொற்றிக் கொள்ளும்.

  • நோயாளிக்கு நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பும், நோய் அறிகுறி ஏற்பட்டு 7 நாட்களுக்குள்ளும் நோய் அற்ற சுகதேகிக்கு வைரஸ் தொற்றும் சந்தர்ப்பங்கள் உண்டு.

  • நோயாளி ஒருவருக்கு தும்மல், இருமல் ஏற்படும் பொழுது அல்லது பேசும் பொழுதும் வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது.

  • நோயாளர் பிடித்த கதவு, தாழ்பாள், மேசை, சாவிக் கோர்வை, தொலைபேசி, பணம் முதலியவற்றில் இவ்வைரஸ் பரவும்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
அதிகம் நோய் தொற்றுபவர்கள்:
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்,


  • ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள்,
  • கர்ப்பிணிகள்,
  • ஆஸ்மா,
  • நீரிழிவு,
  • இதய நுரையிரல் நோய் உள்ளவர்கள்,
  • எயிட்ஸ் நோயாளிகள்,
  • உடல் பருமனானோர்,
  • வயோதிபர்,
  • போசாக்கு குறைபாடு உள்ளோர்,
  • நீண்ட காலமாக அஸ்பிரின் மருந்த பாவிக்கும் 18 வயதிற்கு கீழ்ப்பட்டோர்,
  • நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் போன்றோரை இந்நோய் இலகுவில் தொற்றிக் கொள்கின்றது.
  • இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானோர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9
நோயின் அறிகுறி:
  • வைரஸ் பரவியதும் சளி பிடிக்கும், உடன் காய்ச்சல் ஏற்படும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை, போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்று காணப்படும்.
  • பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுத்தும்.
  • தொடந்து தலைவலி, குளிர்தல், நடுங்குதல், விறைப்பு தசைநார் வலி, இருமல், சளி, மூக்கில் நீர் வழிதல், தொண்டை அழற்சி, பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, மயக்கம், வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் இடைவிடாத காய்ச்சல் ( 100 பாகை பரனைக்கு மேல்) தொடர்ச்சியாக இருக்கும்.
.

  • குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றினால் தொடர்ந்து காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படுதல், உடல் தோல் ஒருவித நீலநிறமாக மாறுதல் இதை நகக் கணுவை அவதானிப்பதன் மூலம் கண்டு பிடிக்கலாம்). தண்ணீர் அதிகமாக குடிக்காது இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல் அல்லது வழமை போல் இல்லாது சோர்ந்திருத்தல். அமைதியின்றி இருத்தல். தோலில் சொறி (Rash) போன்றவற்றை அவதானிக்கலாம்.
.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10
.


நோய் தீவிரமடையும் போது சுவாச உறுப்புக்களுக்குள் சளி கோர்த்துக் கொள்வதால் மூச்சுத் திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.