Symptoms for Pre Menstrual Syndrome-ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம் அறிகுறி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம் அறிகுறிகளை அறிவோம்!

டாக்டர் ஃபெளசியா திவாகர், கோவை

காலை அலுவலகம் போகும்போது நன்றாக இருந்த தன் மனைவி, மாலையில் எரிந்து விழுவதன் மர்மம் கணவர்களுக்குப் பிடிபடுவது இல்லை. தான் ஏன் இப்படி எரிச்சலாக, கோபமாக நடந்துகொள்கிறோம் என்பது பல நேரங்களில் அந்தப் பெண்ணுக்கும் புரியாது.

பொதுவாகவே சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்றங்கள், மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும். இதுவே 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்’ என்று சொல்லப்படுகிறது. மாதவிலக்கு நாளுக்கு ஒரு வாரம் முன்பு நான்கில் மூன்று பெண்கள் இப்படி பாதிப்புக்குள்ளாகிறார்கள். 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது.
அறிகுறிகள்

மனநிலை அல்லது நடவடிக்கையில் வெளிப்படும் அறிகுறிகள்

டென்ஷன் அல்லது மனப்பதற்றம்
மன அழுத்தம்
அழுகை உணர்வு
எரிச்சல் அல்லது கோபம் போன்று மனநிலையில் மாற்றம்
பசி இன்மை அல்லது அதிகம் சாப்பிடும் உணர்வு
தூக்கத்தில் பிரச்னை
மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தல்
கவனக்குறைவு அல்லது கவனச்சிதறல்


மாதவிலக்கின் போது உடலில் வெளிப்படக்கூடிய அறிகுறிகள்

மூட்டு வலி
மார்பகத்தில் வலி
தலைவலி
சோர்வு
வயிறு வீக்கம்
மார்பகம் கடினமாக இருத்தல்
முகப்பரு
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு தோன்ற வேண்டும் என்று இல்லை. இவற்றில் ஒருசில அறிகுறிகள் மட்டும்கூட இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு வெளிப்படலாம். சில பெண்களுக்கு அதிகப்படியான உடல் வலி மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அன்றாட வேலைகள் பாதிக்கப்படலாம்.

குடும்ப மருத்துவரையோ மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

காரணங்கள்

ஹார்மோன் சுழற்சியில் மாற்றம்
மூளையில் ரசாயன மாற்றம்
மன அழுத்தம்
தவறான உணவுப் பழக்கம்
வைட்டமின் பி6 பற்றாக்குறை

ஸ்ட்ரெஸ் தவிர்த்தல்
நிம்மதியான தூக்கம் அவசியம்
உடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் யோகா, தியானப் பயிற்சிகளைச் செய்யலாம்.


உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

1. ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடாமல், உணவைப் பிரித்துச் சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. உப்பைக் குறைக்க வேண்டும். உப்பு அளவு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

3. பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரையின்பேரில் கால்சியம் மாத்திரை மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

5. காபி, டீ தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி
தினசரி 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி அல்லது இதர ஏரோபிக் பயிற்சியாக இருக்கலாம். தினசரி உடற்பயிற்சி செய்வது சோர்வு, மன அழுத்தத்தைப் போக்க உதவும்.

நன்றி டாக்டர் விகடன்

 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Re: Symptoms for Pre Menstrual Syndrome-ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம் அறிகுற&#3

Thanks for these details
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
மாதவிலக்கு முன் அறிகுறிகள் (pms)

மாதவிலக்கு முன் அறிகுறிகள் (PMS)

மாதத்தின் சில நாட்கள் காரணமில்லாத எரிச்சலும் கோபமும் சோகமும் தலைதூக்கும் சில பெண்களுக்கு. இன்னும் சிலருக்கு உடல்ரீதியான அசவுகரியங்கள் இருக்கும். ‘ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பெரிசுபடுத்தாதே...’ என குடும்பத்தாரால் அலட்சியப் படுத்தப்படுகிற, அடக்கப்படுகிற பெண்களே அதிகம்.‘‘மற்றவர்களுக்கு ஒன்றுமில்லாத அந்த விஷயம், பெண்களைத் தற்கொலை வரை தூண்டுகிற அளவுக்குப் பெரிய விஷயம்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (PMS) என்கிற அந்தப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.

‘‘85 சதவிகிதப் பெண்கள் மாதவிலக்குக்கு முன்பான உடல், மன உபாதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களில் 2 முதல் 10 சதவிகிதத்தினருக்கு தீவிரமான பாதிப்புகள் இருக்கின்றன. பி.எம்.எஸ். பாதிப்புக்கான காரணம் இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனாலும், இதன் பின்னணியில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் உள்ளிட்ட பெண் உடல் ஹார்மோன் சுரப்புகளில் உண்டாகிற ஏற்ற, இறக்கங்களின் விளைவு முக்கியமாக இருக்கிறது.

அறிகுறிகள்...

உடல் வீக்கம், மார்பகங்கள் மென்மையான உணர்வு, தலைவலி, முதுகு வலி, களைப்பு, அழுகை, விரக்தி, மன அழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல் போன்றவற்றுடன் தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமின்மையும் எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்தப் பிரச்னையை உறுதிசெய்ய தனிப்பட்ட பரிசோதனை ஏதும் இல்லை. குழந்தை பெறுகிற வயதில் இருக்கும் பெண்கள் சிலருக்கு தைராய்டு பிரச்னை காரணமாகவும் இவற்றில் சில அறிகுறிகள் தென்படும் என்பதால், தைராய்டு சோதனையை செய்ய வேண்டியிருக்கும். அடுத்தடுத்து 3 மாதங்களுக்கு இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் அவை மாதத்தின் எந்த நாட்களில் வருகின்றன, எத்தனை நாட்கள் நீடிக்கின்றன எனக் கவனித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

மாதவிலக்குக்கு 2 வாரங்கள் முன்பாக இந்த அறிகுறிகள் இருந்தாலோ...அந்த அறிகுறிகள் உங்கள் இயல்பு வாழ்க்கையை பாதித்தாலோ...இந்த அறிகுறிகள் எவையும் தைராய்டு, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் போன்றவற்றின் அறிகுறிகள் அல்ல என உங்கள் மருத்துவர் உறுதிப்படுத்தியிருந்தாலோ... உங்களுக்கு ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் இருப்பது ஓரளவு உறுதி.

என்ன தீர்வு?

ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்ற தன்மைதான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை சரி செய்கிற சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாட்களில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை
சாப்பிட வேண்டியதிருக்கும்.

85 சதவிகிதப் பெண்கள் மாதவிலக்குக்கு முன்பான உடல், மன உபாதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களில் 2 முதல் 10 சதவிகிதத்தினருக்கு தீவிரமானபாதிப்புகள் இருக்கின்றன...
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: Symptoms for Pre Menstrual Syndrome-ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம் அறிகுற&am

Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
thank you friend
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.