Take care of your Eyes-தினமும் கண்ணை கவனி..

mahimana

Friends's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
323
Likes
799
Location
kalmunai
#1
கண் தானாகவே நன்றாக இருந்து கொள்ளும் என்ற எண்ணத்தில் கண் பிரச்சினை வரும் வரை யாரும் கண்ணுக்கு கவனம் கொடுப்பதில்லை. கண் பாதுகாப்பு என்பது நீங்கள் உண்ணும் உணவுத் தட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. ஒமேகா3, லூயூடின், ஸிங்க், வைட்டமின் ஏ, சி இவைகள் நிறைந்த உணவுதான் வயது வரும் போது கண் பார்வைத் திறன் குறைபாட்டினை நீக்கும். இளம் வயதில் புரை விழுவதை தடுக்கும். பாதிப்பு ஏற்பட்ட பின் கவனிக்கும் பொழுது முழு பலன் கிட்டாது. ஆரம்ப காலத்தில் இருந்தே கவனிக்கும் போதுதான் கண்ணுக்கு முழு பாதுகாப்பு கிட்டும்.

* கீரை வகைகள், பச்சை காய்கறிகள்.

* மீன்

* முட்டை, கொட்டை வகைகள் மற்றும் சைவ புரத வகைகள்.

* ஆரஞ்ச மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள்.

புகை பிடித்தல் மிக இளம் வயதிலேயே கண்ணில் புறை, கண் நரம்பு பாதிப்பு, தேய்மானம் ஆகியவற்றினை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே புகை பிடித்தல் என்ற பேச்சே இல்லாது தவிர்த்து விடுங்கள். வெய்யிலில் செல்லும்போது கண்களை பாதுகாக்க தரமான கறுப்பு கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். தொழிற்சாலைகளில் நெருப்பு, மின்சாரம் இதன் அருகே வேலை செய்தால் அதற்கேற்ற தகுதியான கண்ணாடிகளை கண்டிப்பாய் அணியுங்கள்.

ஹெல்மெட் எப்படி கட்டமாக்கப்பட்டதோ அதுபோல் இதுவும் சட்டமாகி விட்டால் பலரின் கண்கள் பாதுகாப்பு பெறும். கம்ப்யூட்டரின் முன் வைத்த கண் எடுக்காது பல மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள். உங்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகளை கவனியுங்கள்.

* கண் சோர்வு
* மங்கிய பார்வை
* தூரத்தில் இருப்பதை பார்ப்பதில் கடினம்
* வறண்ட கண்கள்
* தலைவலி
* கழுத்து, முதுகு, தோள்வலி

உங்கள் கண்ணாடி சரியான பவர் உள்ளதாக இருக்கின்றதா? அல்லது 5 வருடமாக அதே கண்ணாடியினை உபயோகிக்கின்றீர்களா என்று செக் செய்து கொள்ளுங்கள். கம்ப்யூட்டரின் ஒளி, கண் சோர்வு இவற்றிகாக சிலருக்கு கண்ணாடி தேவையாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டர் கண் பார்வை இவை இரண்டும் சம அளவில் இருந்தால்தான் கண் சோர்வின்றி இருக்கும்.

கம்ப்யூட்டர் பளபளப்பு கதிரினை அடக்கும் ஸ்கிரீன் கவரினை பயன்படுத்துங்கள். முறையான நாற்காலி கால் தரைப்படும்படியாக இருக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கொரு ஒரு முறை ஒரு நிமிடம் சுமார் 20 அடி தள்ளி இருக்கும் எதனையாவது சாதாரணமாகப் பாருங்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் கண்களை கைகளால் பொத்தி ஓய்வு கொடுங்கள்.

கண் நன்றாகவே இருந்தாலும் 2 வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு நீண்ட காலம் ஆகும் பொழுதும் கட்டுக்கடங்காத உயர் சர்க்கரை தொடர்ந்து இருக்கும் பொழுதும் ரெடினா எனும் கண் திரை பாதிக்கப்படுகின்றது. கண்ணில் உள்ள நுண்ணிய ரத்தக் குழாய்கள் வலிவிழக்கின்றன. கண்ணின் அழுத்தம் கூடுகின்றது. சீக்கிரம் புறை விழுகின்றது. சர்க்கரையின் கட்டுப்பாட்டில் வைப்பதே சிறந்தது.


கண் துடிப்பு :


திடீரென ஒருவருக்கு இடது கண்ணோ, வலது கண்ணோ துடிக்கும். சில நிமிடங்கள், சில மணி நேரம், ஓரிருநாட்கள் கூட தொடர்ந்து இருக்கும். இதன் காரணங்கள். சோர்வு - தூக்கமின்மை, கண்ணாடி மாற்ற வேண்டிய காரணம், அதிக கண் உழைப்பு அதாவது அதிக நேரம் படித்தல், கம்ப்யூட்டர் முன் இருத்தல், இரவு கண் விழித்தல் போன்றவை, அதிக சுரபி, ஆல்கஹால், வறண்ட கண்கள், உணவில் சத்தின்மை, அலர்ஜி இவைகள் காரணமாகின்றன. தன்னால் அநேகமாய் சரியாகி விடும். இதற்கு காரணமறிந்து தீர்வு காணலாம். மிக அரிய நேரங்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றது
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.