Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
பெண்மை தோழமைகளுக்கு அன்பான வணக்கங்கள் :pray:.

மற்றுமொரு தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :).

தமிழர் பண்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவை தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்தவை. தமிழரின் பண்பாடாகக் கீழே உள்ளவற்றை சொல்லலாம்.

தமிழ் மொழி

தமிழர் அகவாழ்வியல் பண்பாட்டு நெறிகள் (காதல், ஒருவனுக்கு ஒருத்தி...)


தமிழர் புற வாழ்வியல் பண்பாட்டு நெறிகள் (போரிடுதல், கொடை பண்பு, நடுகல் நடுதல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து கைம்மை நோன்பு நோற்றல்)


தமிழர் கட்டிடக் & சிற்பக் கலை

தமிழர் ஓவியக் கலை
தமிழர் யோகக் கலை
தமிழர் வழிபாட்டு முறை
தமிழர் உணவுக்கலை
தமிழர் ஆடை மரபு
தமிழர் திருமண முறை
தமிழர் விளையாட்டுகள்
தமிழர் உழவுமுறை
தமிழர் வணிகமுறை
தமிழர் கல்வி முறை
தமிழர் விருந்தோம்பல்
தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்
தமிழர் மருத்துவ முறைகள்
தமிழர் நீதி வழங்கும் முறைகள்
தமிழ் பெண்கள் மலரணிதல்

இவ்வாறாக தமிழர் பண்பாடுகள் பல இருந்தாலும், நம்மால் தற்காலத்தில் கடைபிடிக்க முடிவது என்று சொன்னால் வெகு சிலவே.

அவற்றில் இன்றும் நம்மால் நடைமுறையில் கடைபிடிக்கப்படும் பண்பாடுகள் எவை, எவை என்று சொல்லி, உங்கள் பார்வையில் அவை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்று விளக்கவும்.


உங்கள் பதிவிற்கான கடைசி நாள்: ஏப்ரல் 30.

குறிப்பு: இது நம் தமிழ் பண்பாடு தொடர்புடைய போட்டி ஆதலால், உங்கள் பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் என்பது தவிர வேறு எந்த விதிமுறையும் இல்லை.

Note: Since this topic is fully related to Tamizh peoples English entries are not allowed. Sorry friends.

 
Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
மிகவும் நல்ல அறிவிப்பு. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#3
மிக அருமையான அறிவிப்பு.

இறைவன் அருளில்
இன்பம் பொங்கவும்
இல்லறம் சிறக்கவும்
இனிய கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

:cheer:
:cheer::cheer:
:cheer:
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#4
Hi Sumi,
மிக அருமையான தேவையான திரி.
இந்த திரியின் படைப்புகள் இந்த காலத்து இளைஞர்களுக்கு நமது மறந்து வரும் பண்பாட்டை அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும் என நம்புவோம்.
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#5
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

பெண்மை நட்புகள் அனைவருக்கும் தமிழ், மலையாள சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சுமி ஆரம்பித்திருக்கும் இந்த அருமையான திரியில் எனக்குத் தெரிந்த மிகச் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இந்த பதிவை தந்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி

தமிழர் பண்பாடு – அதில் முக்கியமாக விருந்தோம்பல், வீட்டு பழக்க வழக்கங்கள், உணவு கலை என்பதைப் பற்றி இங்கே சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
இதில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.... தெரிந்திருந்தும் மறந்திட்ட பல விஷயங்கள் இருக்கின்றன
இதில் எனக்கு தெரிந்தவை சில, கேட்டு அறிந்தவை சில, இணையதளத்தில் படித்து அறிந்தவை சில என கலவையாக பேசப் போகிறேன்.
விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டில் மிக முக்கியமான ஒன்று.
வந்தவங்கள வாங்க என அழைக்கவில்லை என கோவப்பட்டு போக, கல்யாணங்களே நின்று போயிருக்கு, உறவு முறைகள் விட்டு போயிருக்கு, வெட்டு குத்துனு பழி பாவம் ஏற்பட்டு போயிருக்கு..... நம்ம பண்பாட்டில அதனாலேயே விருந்தோம்பலுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கு.
விருந்தோம்பல்ல முக்கியமான பங்கு, வாய் வார்த்தையில வணங்கி பேசுவது. அடுத்தது வயிற்று பசியை ஆற்றுவது என இரண்டாக பிரிக்கலாம்.
“வாங்க அமருங்கனு மின்விசிறிய சுழல விட்டு பானை நீரோ குளிர்சாதன பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரோ குடுத்து மலர்ந்த சிரிப்போட பேசுங்க.... வந்தவங்க மனம் குளிர்ந்து போவாங்க... என்ன கோவமிருந்தாலும் களைப்பு இருந்தாலும் பகை பாராட்டாம வந்தத மறந்து குளிர்ந்து போவாங்க.... வந்த இடம் நல்ல இடம் என மனதிற்கும் இதம் தோன்றும்
வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு மட்டுமே அல்ல நம்ம வீட்டு மனிதர்களையும் இப்படிதான் கவனிக்கணும்னு எங்கம்மா கற்று கொடுத்தது.
வெளியில போறவங்க பிள்ளைங்களோ பெரியவங்களோ என்ன வேதனையிலும் திரும்பலாம், உழைத்து களைத்து வரலாம், எத்தனையோ சோதனைகளையும் ஆபத்துகளையும் போராட்டங்களையும் சந்தித்துவிட்டு வீடு திரும்பலாம்....
சிறு பிள்ளைகள் நாள் முழுவதும் அன்னையை காணாது பள்ளிக்குச் சென்று படிப்பு பாடம், வீட்டு கணக்கு அங்கே வாத்தியார்களின் திட்டல் என பலதும் அனுபவித்து தாய் மடி தேடி ஓடி வந்ததாகவும் இருக்கலாம்.
அந்த நேரம் எவராகினும் அவர்களுக்கு தேவை வா வந்தாயா உள்ளே வா என அன்புடன் அழைத்து அமர வைத்து குளிர்ந்த காற்றுக்கும் நீருக்கும் வழி செய்யுங்க. மனம் ஆறும்.
அடுத்தது வயிற்று பாட்டை கவனிச்சு செய்யுங்க.... கூழோ கஞ்சியோ இன்முகத்தோட பரிமாறுங்க.... சாப்பிட அமரும்போது எந்த விஷயமும் பேசாதீங்க..... அவங்கள பத்தினதோ உங்களை பத்தினதோ, வீட்டு பிரச்சினைகளை பற்றியதோ, எதுவுமே பேசாதீங்க..... முதலில் வந்தவங்க பசி ஆறட்டும்.... வயிறு குளிரட்டும்.... வயிறு குளிர்ந்தால் மனம் சரியாக யோசிக்கும், எந்த விஷயத்தையும் நல்லபடி ஏற்கும், அலசி ஆராய்ந்து பார்க்கும் திடம் மனதுக்கு உணவு குடுக்கும்..... அந்த நிலையில் மலை போன்ற பிரச்சினையையும் மலர் போல வென்றுவிடலாம்.
வேண்டாத விருந்தினராகவே இருந்தாலும் இன்முகத்தோடு வார்வேற்க பழகுங்க.
ஒரு வேளையோ பத்து நாளோ, உங்களால முடிஞ்சத வயிறார பண்ணிப்போடுங்க..... எந்த கெடுதலை நினைச்சு அவங்க வந்திருந்தாலும் வயிறு குளிரும்போது மனம் ஆறும்.... பகை மறக்கும்.... உங்க இன்முகம் அவங்க முகத்தையும் மலரச் செய்யும்.... நட்பு பாராட்டச் சொல்லும்.
வீட்டு பழக்கங்கள்:
இதன் தொடர்பான சில வீட்டு பழக்க வழக்கங்கள் இங்கே சொல்ல விரும்பறேன்.
வாசலை அடைந்தவுடன் கோலத்தை காண்கிறோம், அட என சந்தோஷப்படுகிறது மனது.... கண்ணை நிறைக்கும் கோலங்களை அந்த காலத்தில் அரிசி மாவில் மட்டுமே போட்டு வந்தனர்.... எறும்பு புழு பூச்சி போன்றவற்றிற்கு அது உணவாகக் கூடும் என்பதால்.
நாம் உள்ளே நுழையும்போது காலை நீர் விட்டு கழுவி விட்டு உள்ளே வரும் வழக்கம் நம் வீடுகளில் உண்டு.... இப்போது அனைவரும் செருப்போடும் பூட்சோடும் நடு ஹால் வரை சமையல் உள் வரை வந்து விடுகின்றனர் என்பது வேறு விஷயம்.
ஏன் அப்படி சொல்லப்பட்டது? நாம் எங்கேயும் போவோம், எதையும் நம் கால்கள் மிதிக்கும் வாய்ப்பு உண்டு.... அந்த கிருமிகளை நமது வீட்டிற்குள் சேர்க்க விடாமல் வெளியே அப்படியே விரட்டி அடிக்க நம் முன்னோர் சொல்லி கொடுத்த அருமையான விஷயம் தான் இந்தப் பழக்கம்.
செருப்பை கழட்டி வாயிலிலே வைத்துவிட்டு கால்களை முன்னும் புறமும் நன்கு கழுவிக்கொண்டு உள்ளே வரும்போது நம் கால்கள் சுத்தமடையும், கிருமிகள் அழிக்கப்பட்டு விடும்.
அது மட்டுமல்ல கால்களை குளிர்ந்த நீரால் நன்கு கழுவும்போது எப்பேர்பட்ட சூட்டிலும், நடந்த அயர்ச்சியிலும் களைத்திருக்கும் கால்களுக்கு நல்லதொரு குளிர்ச்சி, நல்லதொரு இதம் தருகிறது.... அந்தக் காலில் பட்ட குளிர்ச்சி நம் தலைவரை சென்று அடைகிறது.... இப்போது இந்த நன்மையை அடைய ஆயிரமாயிரம் செலவு செய்து foot reflexology என, pedicure என பார்லருக்கும் ஸ்பாவுக்கும் கொட்டி அழுகிறோம்.... இந்த எளிய முறைகொண்டு காலை ஒரு நாளில் பல முறை குளிர்ந்த நீரால் கழுவினாலே பாதி வியாதிகள் நீங்கும் என சொல்லப்படுகிறது.
வாசலை தாண்டி உள்ளே வருவோம்.... அந்த காலம் தொட்டு இப்போதும் கூட சில பல இடங்களில் நமக்க வேலை செய்வோர் வீட்டினுள் வரக்கூடாது என ஒரு விதி உள்ளது.... இது மூட நம்பிக்கை, மேலோர் கீழோர் பாராட்டக் கூடாது என சொல்லி பேசி இந்த வழக்கம் மெல்ல மறைந்து வருகிறது, சந்தோஷமான விஷயம்..... ஆனால் அந்தக் காலத்தில் ஏன் அப்படி சொல்லப்பட்டது தெரியுமா நட்புகளே...
அந்நாளில் பெரும்பாலும் உழவு தொழில் மட்டுமே நடந்து வந்தது.... அங்கே வேலை செய்வோர் களத்து மேட்டில் சேற்றிலும் சகதியிலும் கால் பதிய.... நாற்று நடவேன, கைகள் பதிய வேலை செய்வார்கள்.... அந்த சேற்று சகதி கால்களில் பூசிக்கொண்டு அதனால் கிருமிகள் தொற்றும் அபாயம் உண்டு....
அவர்களுக்கு போதிய படிப்பு வசதி அறிவு ஆலோசனைகள் இல்லாததால், உலக ஞானம் என்பது ஏற்பட்டிருக்கவில்லை என்கிற காரணத்தால் கை கால்களை நன்கு கழுவ வேண்டும் எனவோ தங்களை சுத்தமாக வைத்துக்கொள வேண்டும் என்றோ அறியாமல் இருந்தனர்.... அப்படிப்பட்ட நிலையில் நமது வீட்டின் உள்ளே அப்படியே நுழைய வேண்டாமே... கிருமிகளை பரப்ப வேண்டாமே என்ற நல் எண்ணத்தில்தான் அவர்களை வெளி வாசல் வழியே நுழைந்து பின் கட்டில் வந்து வேலை பார்க்கும்படி செய்தனர்.

அடுத்தது குளித்து முடித்து நெற்றிக்கு இட்டுக்கொள்வது.... விபூதி எனும் சாம்பல் பசுமாட்டு சாணத்திலிருந்து செய்யப் படுவதாகும்.... அது மிகச் சிறந்த கிருமி நாசினி.... அதனால்தான் அதனை நெற்றியில் பூசிக்கொள்ளும்படி சொல்லப்பட்டது..... கூடவே தெய்வ வழிபாட்டையும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல இதுவும் உதவியானது.

இப்போது சாப்பாட்டிற்கு வருவோம்.
வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.... வாழை இலையில் அவ்வளவு சத்து இயற்கையாக நிறைந்துள்ளது.... அதில் anti oxidents நிறைய உள்ளது.... சூடான உணவுடன் சேர்த்து வாழை இலையின் சத்தும் உள்ளே செல்ல இது உதவும் என உபயோகத்தில் இருந்தன.... அது மட்டுமல்லாது உணவை உண்டபின் அந்த வாழை இலைகளை பின் தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பசுவிற்கோ எருமைக்கோ உணவாக கொடுத்துவிட முடியும்....
எதையுமே வீண் என தூர எரியும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லை....
தரையில் பத்மாசனத்தில் அமர்ந்து குனிந்து உணவை அள்ளி வாயில் உண்ணும்போது வயிறு மடங்கி சாப்பிடும் உணவை உடனே ஜீரணிக்க உதவுகிறது..... சப்பணமிட்டு அமருகையில் உடலில் சேர்ந்துள்ள அனாவசிய வாயுக்கள் வெளியேற்றப் படுகின்றன.
ஆண்கள் பரிசெஷனம் என்ற ஒன்றை கடை பிடித்து வந்தனர்..... முக்கியமாக ப்ராமிண வகுப்பை சேர்ந்தோர்.... வாழை இலையை சுற்றி நீரால் சுத்தீகறிப்பது இந்த வழக்கம்.
ஏன் செய்யப்பட்டது.... சாப்பிடும் இடத்தில ஏதேனும் எறும்பு பூச்சி இருந்தாலும் அந்த நீர் கோலத்தை தாண்டி உள்ளே வராது..... சாப்பிடும் இலைக்குள் எதையும் இந்த நீர்கோலம் அண்ட விடாது.... அதே போல அந்த நீரின் ஒரு சில துளிகளை கையில் ஏந்தி குடிப்பார்கள்... ஏன் இப்படி...... எப்போதோ எங்கேயோ எந்த நிலையில் சாப்பிட்டதோ, நீர் அருந்தியதோ.... வயிற்றுப் பாதை தொண்டை குழியிலிருந்து காய்ந்து போயிருக்கக் கூடும்..... அதனை அந்த நீரின் சில துளிகள் உள்ளே சென்று உணவு வருகின்றது காத்திரு, எனக் கூறும்.... பாதையை ஈரப் படுத்தி உணவை சுலபமாக சிக்காமல் புரைக்கு ஏறாமல் காத்துக் கொள்ள செய்யப்பட்டது.... அதே போல பரிமாறப்பட்ட அன்னம் எனப்படும் சாதத்தை முதலில் சில பருக்கைகள் மட்டுமே எடுத்து உண்பர்.... இது ஏன்... மெல்ல மெல்ல வயிற்றுப் பாதையை உணவுக்கு பழக்கப் படுத்திய முறை இது.
நெய் இட்ட சாதம் முதலில் பாதையை தயார் செய்யும்.... அதன் பின் பாயசம், இலையின் வலது கை ஓரத்தில் ஒரு துளி.... உணவை இனிப்பாக ஆரம்பிக்க ஆனால் நிறைய உண்ணாமல் சில துளி ருசிக்கு மட்டுமே, ஏன் என்றால் இனிப்பு என்பது மற்ற உணவை உண்ணா விடாமல் தடுத்து, வயிறு நிறைந்தது எனும் தோற்றத்தை கொடுக்கக் கூடியது என்பதால்.
அன்னம் carbohydrates, பருப்பு protein, அதன் பின் காய்கறி வகைகள் பலவித minerals மற்றும் விட்டமின்ஸ் தருவதாகும்.... கீரை வகைகள் iron சக்தி கொண்டவை.... கடைசியாக தயிர் fat கொடுப்பது.
இலையில் பரிமாறும் விதம் என ஒரு வழக்கம் உண்டு. இலையின் நுனி இடது பக்கம்தான் இருக்க வேண்டும்..... குளிர்ந்த நீர் கொண்ட செம்பு இடது நுனியின் அருகில்தான் வைக்க வேண்டும், சாப்பிடும் பொழுது இடது கையால் எடுத்து குடிக்க இது வசதியாக இருக்கும், அதானால் இப்படி.
இலையின் மேல் கீழ் என இரண்டு பாகம்: கீழ் பாகம் முக்கியமான உணவு வகைகளை குறிக்கும் இடம்.... மேலே உள்ளது அதற்கு தோதாக கூட்டு சேர்க்கும் உணவு வகைகளுக்கான இடம்
இலையின் கீழ் பாகத்தில் வலது நுனியில் இனித்த பாயச வகைகள், அதனை அடுத்து மேலே, வலது பக்க ஓரத்தில் இனிப்பு மற்றும் தயிர் சேர்த்த பச்சடி வகைகள்..... அதன் இடது பக்கத்தில், வதக்கிய கார கறி வகைகள், அதனை அடுத்து பச்சை காய்கறி வகைகள். அதனை ஒட்டி கூட்டு, இடது கை ஓரத்தில் வடை, அப்பளம், ஊறுகாய் வகைகள் உப்பு என பரிமாற வேண்டும்.
கீழ் பாகத்தில் இடது கை ஓரத்தில் சித்திரான்னங்கள் எனப்படும் கலந்த சாதம், அதனை அடுத்து வலதில் மோர் குழம்பு வற்றல் குழம்பு போன்றவை, அதனை அடுத்து சாதம் பருப்பு அதன் மேல் நெய்..... அதன் மேல் சாம்பார் குழம்பு ரச வகைகள்..... இதனை அடுத்து அதே இடத்தில பாயசம், கடைசியாக தயிர்.
இது தமிழகத்திலேயே கூட ஓரிடத்துக்கு மற்ற இடத்துக்கும் மாறுபட்டு இருக்கும்.
தமிழர்களின் உணவு தயாரிப்புகள் நம்மை ரொம்பவே யோசிக்க, ஆச்சர்யப்பட வைக்கின்றன.
பலதரப்பட்ட spices எனப்படும் தாளிக்கபடும் சுவை கூட்டும் வஸ்துக்கள் நம் உணவில் அனுதினமும் சேர்க்கப்பட்டு வந்தன.... இவை உடலுக்கு ஊட்டம் அளிக்கக் கூடியவை..... நாவிற்கும் சுவை கூட்டும்..... உடலுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் வகைகள்.
இதில் முக்கியமானவை புளி, கொத்தமல்லி விதைகள், ஜீரகம், இஞ்சி, பூண்டு, மிளகு, லவங்கம், பட்டை, ஏலக்காய், வெந்தயம், மிளகாய், இந்த சில பொருட்களை வைத்துக்கொண்டு வித விதமாக சமைத்து அசத்தும் நம் தமிழ் பெண்களின் கைத்திறனுக்கு ஈடேது.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine June 2014. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#6
சங்க கால உணவு வகைகள் சில:
சங்க காலத்தில் பரிமாறப்பட்ட பல உணவு தயாரிப்புகளும் இப்போது வழக்கிலேயே இல்லை, பழக்கத்திலும் இல்லை என்றாகிவிட்டது... சாட்சிக்கு சில:
கருப்பட்டி பாயசம், அதிமதுரம், பருத்தி பால் ஹல்வா, கருப்பட்டி அப்பம், கம்பு ஹல்வா, தினை மாவு அதிரசம், ராகி புட்டு, பானகம், கேழ்வரகு தண்டு வடை, சுக்குமல்லி சாதம், சுக்கு மல்லி காபி, கம்பு தோசை. இவற்றில் எதையேனும் இந்த காலத்து மக்கள் கேள்வியானும் பட்டிருப்பார்களா சந்தேகம்தான்.
நம் அத்தை, பாட்டிமார்கள் உணவை அந்தந்த சீதோஷண நிலைக்கு ஏற்ப மாற்றி கூட்டி வெவ்வேறு combo எனப்படும் கலவையாக தருவதில் மிகவும் தேர்ந்தவர்கள்..... கோடையில் நீர் காய்கள், மோர், இளநீர் என உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை படைத்தனர்.... பருப்பை குறைத்தனர்.
மழைகாலத்தில் உடலுக்கு சூடு ஏற்றும் பொருட்களை, கொஞ்சம் புளிப்பும் கூடிய உணவுகளை படைத்தனர்.
குளிர் காலத்தில் உப்பு புளி காரம் என காரசாரமான உணவை படைத்தனர்.
இதனால் உடலின் தொய்வு காணாமல் போகும்..... சுறுசுறுப்பு பெருகும் என அறியப்பட்டது.
அதே போல எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஜீரணமாக உதவும் என அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்..... பருப்பு உருண்டை குழம்பு, பருப்பு தொகையல் என செய்யும்போது, அதிகமான பருப்பின் protein ஐ ஜீரணிக்க பூண்டு ரசம், மிளகு ரசம் என வைத்தனர்
காரசார உணவு படைக்கும்போது கண்டிப்பாக அதன் கூட தயிர் பச்சடி இருக்கும்.... காரத்தினால் ஏற்படும் உடல் சூட்டினை அது தடுத்துக்கொள்ளும் என இந்த ஏற்பாடு.
உணவு கலையில் அந்த காலத்து பெரியோர் கல்லூரிக்கு போகாமலே டிகிரி வாங்கியோர் ஆவர்.... அவர்களே ஒரு நடமாடும் கலாசாலை.

இங்கே நான் சொல்லி இருப்பது அனைத்துமே மிகவும் எளிமையான பழக்க வழக்கங்கள், அதன் நன்மைகள்.
இதில் பெரும்பாலானவை நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம், மிச்சவற்றையும் கடைபிடிக்க முயன்றால் நன்று என்பதை சொல்ல விரும்பினேன்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine June 2014. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#7
Hi Sudha
very nice Thagavalgal.
Prema barani
 

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#8
Hi sumi

ippadi oru thread migavum avasiyamana ondruthan. nandri.:thumbsup
 

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#9
Hi sudha,

arumayana thagavalukku migavum nandri.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.