Teach your daughter about the Bad Touch

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பேட் டச் என்றால் என்னவென்று மகளுக்கு தெரியுமா?

நாம் நமது குழந்தைகளுக்கு புராணக் கதைகளையும், இதிகாசங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, தற்போது தற்காப்புக் கலைகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
காரணம்.. தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள்தான். சிறுமிகள் முதல் இளைஞகிள், பெண்கள் வரை இதில் யாருமே விதிவிலக்கு அல்ல..
பேருந்து, ரயில், பள்ளியில், விடுதியில், அலுவலகத்தில் என தினம் தினம் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதில் இருந்து தற்காத்துக் கொள்ள வெளியே செல்லாமலே இருக்க முடியாது. எனவே, நமது குழந்தைகளுக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதிலும் சிறுமிகளுக்கு அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை என்றால் என்ன என்பதே தெரியாத நிலையில், அவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களை தயார் படுத்த வேண்டும்.
அதற்காக அவர்களுக்கு தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியது பேட் டச் என்றால் என்ன என்பதே.
பள்ளியிலும், டியூஷன் சென்டரிலும், பயிற்சிக் கூடத்திலும் ஆண் பயிற்சியாளர்களின் சீண்டல்களை கண்டுபிடித்து அவர் நம்மை தவறாக நடத்துகிறார் என்பதை உணர்ந்து கொள்ள தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இதனை சொல்ல வேண்டும்.
பேட் டச் என்பது, ஒருவர் நம்மை முதுகில் தட்டிக் கொடுக்கலாம், கை குலுக்கலாம், கன்னத்தை தட்டிக் கொடுக்கலாம், தலையில் கை வைக்கலாம்.. ஆனால், அதே சமயம், கன்னத்தைக் கிள்ளக் கூடாது, தொடை, நெஞ்சு, அடிவயிறு, போன்றவற்றை யாரும் தொடக் கூடாது. இவையெல்லாம் பேட் டச் என்று சொல்லி வைக்கலாம்.
மிகவும் ஆழமாகச் செல்லாமல், சாதாரணமாக குளிக்க வைக்கம் போது, தலைவாறும் போது என சுருக்கமாகச் சொல்லி வைப்பது தாய்மார்களின் கடமை.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
மிகவும் பயனுள்ள மற்றும் தேவையான குறிப்பு லக்ஷ்மி .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.