Techniques to Help Improve Your Memory - மெமரி பவரை மேம்படுத்தும் டெக்னிக&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மெமரி பவரை மேம்படுத்தும் டெக்னிக்


ஆலோசனை

ரகசியம் சொல்கிறார்கள் நிபுணர்கள்


20 தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று சொல்வார்கள். எப்போதோ படித்த இங்கிலீஷ் எஸ்ஸேயை வரிமாறாமல் ஒப்பிப்பார்கள். எல்லாம் ஒரு காலம். இன்று சொந்த செல்போன் எண்ணையே சிலர் மறந்துவிடுகிறார்கள். பிறந்தநாள், திருமண நாள் கூட நினைவில் நிற்பதில்லை. காரணம் மூளையின் நினைவுத் திறனுக்கான வேலைகளை செல்போனிடம் கொடுத்துவிட்டோம். அடுத்து ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால் கூகுள் செய்து பெற்றுவிடுகிறோம்.

பெரியவர்களின் நிலையே இதுவென்றால் மாணவர்கள்...? பாவம்... பெரும்பாலான மாணவர்களை வதைப்பது இந்த ஞாபகமறதிதான். ராத்திரி, பகல் விழிதிறந்து படித்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் படித்ததெல்லாம் மறந்துவிடும். சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை என இந்த ஞாபகமறதி ஏற்படுத்தும் துணை விளைவுகள் இன்னும் கொடுமையானவை. நினைவாற்றலை மேம்படுத்த என்னதான் செய்வது? “கொஞ்சம் முயற்சி செய்தால் அது ரொம்ப ஈஸி” என்கிறார்கள் நிபுணர்கள்.

‘‘ஐம்புலன்களாலும் நாம் உள்வாங்கும் விஷயங்கள் வெவ்வேறு கட்டங்களைத் தாண்டி மெமரியில் பதிவு செய்யப்படுகிறது. மெமரியில் பதிவு செய்யப்பட்ட விஷயத்தை ேதவைப்படும் இடத்தில் திரும்ப எடுப்பதைத்தான் நினைவாற்றல் என்கிறோம். விஷயங்களை பதிவு செய்வதில் பலவிதமான யுத்திகள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. படங்களாக, கதைகளாக, சம்பவங்களாக, யோசிக்கவே முடியாத கற்பனையாக... இப்படித்தான் தான் உள்வாங்கும் விஷயத்தை ஒரு குழந்தை தனக்கு சுலபமான வழியில் மெமரிக்கு ெகாண்டு செல்கிறது. எனவே நினைவுத் திறனில் பிரச்னை என்றால் முதலில் அவர்கள் அந்த விஷயத்தை கவனிப்பதில்தான் பிரச்னை இருக்கும். கவனச் சிதறலுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வது முதல்படி.

அதன் பின்னர் உள்வாங்கும் விஷயம் மெமரிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அது எந்த மெமரியில் ஸ்டோர் ஆகிறது என்பது அடுத்த கட்டம். முழுமையாக கவனித்து மெமரிக்கே கொண்டு செல்லாத விஷயங்கள் காணாமல் போய்விடும். கவனிக்கப்பட்டு ‘ஷார்ட் டேர்ம் மெமரி’க்கு கொண்டு செல்லும் விஷயங்கள் ‘லாங் டேர்ம் மெமரி’க்கு சரியாக வகை பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அவ்வாறு ‘லாங் டேர்ம் மெமரி’க்கு கொண்டு செல்லப்படாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். எங்கோ கேட்டது மாதிரி இருக்கும். ஆனால் அந்த விஷயத்தை முழுமையாக நினைவுக்கு கொண்டு வரமுடியாது. அப்போது தான் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும்.

கவனிக்கும்போதும் உள்வாங்கும் போதும் நன்றாக புரிந்துெகாள்ளும் சில மாணவர்கள் அந்த விஷயத்தை உடனே கேட்டால் சொல்வார்கள். அடுத்த நாள் கேட்கும்போது மறந்து விடுவார்கள். இவர்களுக்கு விஷயங்களை ‘லாங் டேர்ம் மெமரி’க்கு கொண்டுசெல்ல திரும்பத் திரும்ப அதை படிக்க வேண்டியுள்ளது.

அதை அர்த்தமுள்ள புரிதலுக்கு உட்படுத்தி கதை, படங்கள், உருவங்கள் என லிங்க் செய்து ‘லாங் டேர்ம் மெமரி’க்கு கொண்டு செல்லும்போது நினைவாற்றலை மேம்படுத்த முடியும். கண்களுக்கு விழிகளை சுழற்றும் பயிற்சி கொடுக்கும்போது மாணவர்களின் கவனம் ஒரு நிலைப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மூச்சுப் பயிற்சியும் கவனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். எந்த ஒரு விஷயத்தையும் கவனச்சிதறல் இன்றி உள்வாங்கினால் எக்காலமும் அது நினைவில் இருந்து அகலாது...’’ என்கிறார் நினைவாற்றல் பயிற்சியாளர் ராஜலட்சுமி.

மூளையை எப்ெபாழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்? உணவியல் ஆலோசகர் சங்கீதா ஆலோசனை சொல்கிறார்.‘‘நினைவாற்றலில் சேமித்த விஷயங்களை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள உணவால் கிடைக்கும் சத்துக்கள் மூளைக்கு உதவுகின்றன. முழு தானியங்களை ுண்டல் வகைகளாக அப்படியே சாப்பிட வேண்டும்.

அவற்றில் இருந்து நமது மூளைக்கு மைக்ரோ நியூட்ரியன்கள் கிடைக்கிறது. வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘ஈ’ மற்றும் ‘ஜின்க்’ சத்துக்கள் மூளையை எப்போதும் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளும். முழு தானியங்கள் மற்றும் கீரை வகைகளில் இந்த சத்துக்கள் அதிகளவில் கிடைக்கிறது. அதிக இனிப்பு மற்றும் அதிக புளிப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ெராட்டி, பரோட்டா போன்ற மைதா உணவுகள் வேண்டாம். முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை கொஞ்சம் சாப்பிடலாம்.

சிவப்பு பரங்கிக்காயில் உள்ள விதையில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான ‘ஜின்க்’ உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். நல்ல கொழுப்பு உள்ள உணவுகளும் வைட்டமின் ‘சி’ உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய் ஆகியவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன் நல்லது.

கூடவே பச்சைக் கீரைகள், தக்காளியை சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாகும். நினைவாற்றல் மேம்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவை தவிர்க்கவே கூடாது...” என்கிறார் சங்கீதா.சிவப்பு பரங்கிக்காய் விதையில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான ‘ஜின்க்’ உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
re: Techniques to Help Improve Your Memory - மெமரி பவரை மேம்படுத்தும் டெக்னி&#29

Nice sharing, Letchmy.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
re: Techniques to Help Improve Your Memory - மெமரி பவரை மேம்படுத்தும் டெக்னி&#29

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்.நன்றி லக்ஷ்மி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.