Teenage Problems - விடலைப் பருவத்து பிரசினைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
விடலைப் பருவத்து பிரசினைகள்

பதினாறு வயதில் பெண்களுக்கு ஏற்படும் கவலைகள் அதிகம். குட்டையான பெண்கள், தான் உயரமாக இல்லை மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவர்களின் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும் விஷயம்.

அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப்பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளாகிறாள். இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. விளைவு, படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்குகிறார்கள். இதுவே பெண்களின் பெரிய பிரச்சினையாகும்.

விடலைப் பருவத்திலிருப்பவர்களின் பிரச்னைகள் என்று வந்தால் ...

வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும்.

குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள்.

முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன.

பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.

விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும்.

குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை. தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை. அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும்.

அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.


உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை அவர்களே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் தள்ளிப்போகும் வளர்ச்சி என்று சிலருக்கு ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனச் சோர்வும் ஏற்படுகிறது.

பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள். இது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம்.

சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும்.

இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.


 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
அருமையான விளக்கம் லெட்சுமி.
பதின்ம வயது பிள்ளைகளுக்கு பெற்றோர் தான் தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும். இந்த சமயத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால், அவர்கள் திசைமாறி போக வாய்ப்புக்களை உருவாக்கி விடும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-

அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்

பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள். இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர்களிடம் பழகுவது சிக்கலான காரியம். சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கிற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.

ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமும் இந்தக் குளறுபடி இந்தாலும், பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படுமானால், அது இருசாரார்க்கும் மிகுந்த மனவேதனையை உண்டாக்கும். தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப்பீர்கள்.

ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#6
டீன் ஏஜ் பிரச்னைகள் :-
===================
எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். பெயர் ச.கார்த்திக்.

9த std. படிக்கும் போது அவனை (now, he is in xi std.)தேடி ரூ பெண் (7த std) வந்து காதலை சொன்னாள். இவன் "இப்போது இதற்கு எல்லாம் நேரம் இல்லை.நான் படிக்கணும். ரெண்டு பெரும் படிச்சு,பெரியவங்க ஆனப்புறம், இதே பீல் இருந்தா அப்போது பார்ப்போம்" என்று solli இருக்கான்.

அன்று இரவே என்னிடம் வந்து அனைதையும் கூறி விட்டான். நான் அவனிடம் சரியான முறையில் கையாண்டு இருக்கிறாய் என்பர் கூறி அவனை என்குறகே செய்தேன் !!!அவன் "அம்மா !! நீ உன் மாணவர்களிடம் பேசும் விடம் பற்றி கூறி இருக்கிறாய் அல்லவா? உன்னிடம் இருந்து தானே கற்று கொள்கிறேன்" என்றது பெருமைக்கு உரியது.... (நான் ஒரு matric higher secondary school principal.மன உளவியல் படித்தவள் !!)
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
[h=2]Re: Teenage Problems - விடலைப் பருவத்து பிரசினைகள்[/h]பேச theriyaamal , பேச முடியாமல், பச பயப்படும் குழந்தைகள் நிறைய. அவர்களை கொஞ்சம் பேச தூண்டினால், தங்கள் குறைகளை நிச்சயம் கூறுவார்கள்.

என்னிடம் வந்து இது போல் நிறைய மாணவ மாணவிகள், பிரச்னைகளை கூறி இருக்கிறார்கள். நான் என்னால் இயன்ற வரை அவர்களுக்கு செவி மடுத்து, அறிவுரைகளை அல்ல, ஒரு தோழியாய் வழி நடத்தி வருகிறேன்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.