Teeth Care in Summer - கோடையில் பற்களின் பாதுகாப்பு

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
கோடையில் உடலை பாதுகாப்பது போல, பற்களையும் பாதுகாக்க வேண்டும். கோடையில் சூட்டை தணிக்க, பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்துகின்றனர். ஆனால் எலுமிச்சை, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்தும்போது, உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் எனாமலை அரிக்கும் தன்மை உள்ளவை. தண்ணீர் குடிப்பதால், இவை பற்களின் மேல் அதிக நேரம் தங்காது.

பலருக்கு கோடையில் வரும் மற்றொரு பிரச்னை வாய் உலர்தல் மற்றும் வாய் எரிச்சல் ஒரு நாளுக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வாய் உலர்ந்து போய், நாக்கு ஒட்டிக் கொள்வது போல இருக்கும். உதடுகள் உலர்ந்து போய், வெள்ளையாக தெரியும். இந்நிலை அடிக்கடி இருந்தால், பற்களில் சொத்தை வருவதற்கு வாய்ப்பு அதிகமாகிவிடும். ஏனெனில் வாயில் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்,

நாம் உண்ணும் உணவு பற்களில் ஒட்டிக் கொண்டு அவையே கிருமிகள் தங்கும் இடமாகி சொத்தை உண்டாக்கும். எனவே அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பர். விடுமுறை நேரத்தில் அதிக சாக்லேட்டுகள், இனிப்பு பண்டங்களை சாப்பிடுவர். இதை சாப்பிட்ட பின், சரியாக சுத்தம் செய்ய பழக்கப்படுத்த வேண்டும்.

பல் தேய்க்கும் முறையை சரியாக சொல்லிக் கொடுத்து நாள் ஒன்றுக்கு 2 முறை பல் தேய்க்க வேண்டும்.

(இணையத்தில் படித்தது)
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#2
Useful tips Subha... Thanks for sharing ma...
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
Thank you nisha


Useful tips Subha... Thanks for sharing ma...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#4
Good info Subhasree
:thumbsup

 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Thank you visu sir


Good info Subhasree
:thumbsup

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.