Teeth Care Tips - பல் பராமரிப்புக் குறிப்புகள்

Gathya

Friends's of Penmai
Joined
Mar 15, 2014
Messages
213
Likes
603
Location
Krishnagiri
#1
Teeth_120103.jpg
ஆல மர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காயவைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.

ஆலமரப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி 20 நிமிடம் கழித்து வாய் கொப்பளித்துத் துப்பினால் வாயில் ஏறபடும் கிருமித் தொற்று குணமாகும்.

கிராம்பு, கோட்டைப் பாக்கு இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து பல் துலக்கினால், பல்வலி குணமாகும், ஈறுகள் வலுப்படும்.

கொய்யா இலையை மென்று, தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, பல் துலக்கு வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
டிப்ஸ்களுக்கு மிக்க நன்றி கத்யா .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.