Temples, Slokas & Mantras for Marriage

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#1
தோழமைகளுக்கு வணக்கம்!

இந்தத் திரியில் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடக்க சுலோகங்களும், பிரார்த்தனைகளும், அதற்கான கோயில்களும், வழிமுறைகளும் தொகுத்து வழங்கப்படும். வேண்டியவர்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

வேண்டியவர்களுக்கு பலன் கிடைக்க இறைவனை வாழ்த்தி வணங்கி
இந்தத் திரியை துவங்குகிறேன்
.


 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#2
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:

இந்த ஸ்லோகத்தை கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் நிச்சயமாக நடைபெறும் என்பது நம்பிக்கை. 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#3
திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற
ருக் வேதத்தில் உள்ள பாக்ய சூக்த மந்த்ரமாகும்.

ப்ராதரக்நிம் ப்ராதரிந்தரம் ஹவாமஹே
ப்ராதர்மித்ரா வருணா பராதரச்விநா
ப்ராதர்பகம் பூஷணம் ப்ரம்மணஸ்பதிம்
ப்ராதஸ்ஸோமமுத ருத்ரம் ஹூவேம


இந்த மந்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்து வந்தாலும், செய்ய முடியாதவர்கள் சாஸ்திரிகளை கொண்டு ஜபித்து ஹோமம் செய்ய நல்ல முறையில் விவாஹம் நடைப்பெறும் என்பது சாஸ்திர திண்ணம்.

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#4
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் குத்து விளக்கைத் தேய்த்து குங்குமம், பூ வைத்து, கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து,

"ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாமாயே மகாயோகின்யை ஈஸ்வரி!
நந்தகோப ஸுதம் தேவி பதிம்தே குருவே நமஹ'

என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும்.

இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டும்கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#5
தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் 'திருநல்லம்'

முக்கண்ணன் "உமா மகேஸ்வரராய்" மேற்கு நோக்கி வீற்றிருக்க, "அங்கவள நாயகியாய்" அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும்.

"பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன்" என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், "ஸ்ரீ வைத்திய நாதர்" சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் இத் திருத்தலம்.
 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#6
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் ஆடி மாதத்தில் தாழம்பூவை மூன்று நாட்கள் தொடர்ந்து தலையில் சூடினால் விரைவில் திருமணம் நடக்கும். ஆடி மாதத்தில் மட்டும் தான் தாழம்பூ சூட வேண்டும். மற்ற மாதங்களில் சூடக் கூடாது.
 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#7
வாசனை உள்ள மலரில் வாசனை இல்லா மலரைச் சேர்த்துக் கட்டக் கூடாது. கட்டினால் கணவன் மனைவி இடையே மன சஞ்சலம் உண்டாகும். கன்னிப்பெண்கள் இதைச் செய்தால் நல்ல கணவன் அமையாது..

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#8
Very useful details Sumathi. Thanks for these.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#10
கல்யாண சித்தி பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.