Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
தோழமைகளுக்கு வணக்கம்!

"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்!"

திருமணவாழ்வின் நிறைவே மக்கட்பேறு தான்.

இந்தத் திரியில் மக்கட்பேறு கிடைக்க சொல்ல வேண்டிய சுலோகங்களும், பிரார்த்தனைகளும், அதற்கான கோயில்களும், வழிமுறைகளும் தொகுத்து வழங்கப்படும். மேலும் சிக்கலின்றி பிரசவம் நல்லபடியாக நிகழவும் உகந்த சுலோகங்களும் பதியப்படும்.


வேண்டியவர்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

வேண்டியவர்களுக்கு பலன் கிடைக்க இறைவனை வாழ்த்தி வணங்கி இந்தத் திரியை துவங்குகிறேன்
.

 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#2
குழந்தை பாக்கியம் பெற சொல்லவேண்டிய கர்பரக்ஷாம்பிகை சுலோகம்

ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்
[/FONT]

தேவேந்திர பிரிய பாமினி[/FONT]
விவாஹா பாக்கியம் ஆரோக்கியம்[/FONT]
புத்திர லாபம் சதேஹிமே[/FONT]
பதிம் தேஹி சுதம் தேஹி[/FONT]
சௌபாக்கியம் தேஹிமே சுப்ஹி[/FONT]
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்[/FONT]
தேஹிமே கர்பரக்ஷகே[/FONT]
காத்யாயினி மஹாமாயே[/FONT]
மஹா யோகின்ய திச்வரி[/FONT]
நந்தகோப சீதம் தேவம்[/FONT]
பதிம் மேகுருதே நமஹா[/FONT]


 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#3
குழந்தை பேறுக்கான கோவில்கள்

சிவபுரம் என்றழைக்கப்படும் "திருச்சிவபுரம்"

திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். த்தில் வீற்றிருந்து அருளும், "சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி" என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம்.

இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சாக்கோட்டை வழியாக சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதுஇத்தலம்.

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#4
ஆதி கும்பேஸ்வரர் திருக் கோயில் "நவநீத கணபதி"

காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் "வெண்ணெய் கணபதி" ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய "குர" தீர்த்தத்தில் நீராடி, இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் "மந்திர பீடேஸ்வரியாய்" அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்த்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும்.

கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது. கும்பகோணத்தின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது இத் திருத்தலம்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#5
மகப் பேறு அருளும் "பாணபுரீஸ்வரர் திருக்கோயில்"

பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து, பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பாணாதுறையானது. தல நாயகன் "பாணபுரீஸ்வரரானார்". இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனிவி காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்ட்தால், தீராத தன் "குஷ்ட நோய்" நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான்.

இத் தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாமகக் குளக் கரையில் அமைந்துள்ளது. கும்பகோணத்தின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது இத் திருத்தலம்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#6
ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள "குழந்தை கிருஷ்ணன்".

3 வது திவ்ய தேசமாக விளங்கும் சார்ங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப் பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.

கும்பகோணத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம்.

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#8
மழலை பாக்கியம் கிடைக்க மந்திரம் - துதி


பெண்ணுக்கு ஏற்படும் பிரசவ வலிக்கு அந்தத் தெய்வமே
இரங்கி 'தாயும் ஆனவனாக' வந்து அருள் புரிந்தது உண்டு.
அப்பேர்ப்பட்ட இறைவனை நம் தகையோர்கள் துதித்த
மந்திர வார்த்தைகளால் துதியுங்கள். மகப்பேறு எளிதாக
அமையும். மழலை பாக்கியம் வேண்டுவோரும்
இப்பாடல்களால் இறைவனை துதித்துப் பயன் அடையலாம்.
முதலில் விநாயக பூஜை செய்தபின், அவரவர் குலதெய்வத்தை
தொழுது, பிறகு இந்த துதியை தினமும் பதினெட்டு முறை
காலையும் மாலையும் துதியுங்கள். இறைவன் செவிசாய்ப்பான்.


மட்டு வார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
சித்தர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே.


அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்
அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள்
பெரியவன் சிராப்பள்ளியைப் பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.


அரிச்சு இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு
கரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக் கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.


தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம்வினை நாசமே.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#9
குழந்தை வரம் அளிக்கும் சங்கரநாராயணர் கோவில்

ஸ்தல வரலாறு:
சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் ஆலயங்கள் நம் தமிழ் நாட்டில் பல உண்டு. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் தஞ்சாவூரில் உள்ள அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில். தஞ்சாவூர் மேல ராஜ வீதியில், சிவகங்கை பூங்காவுக்கு அருகே உள்ளது சங்கரநாராயணன் ஆலயம்.

பழமை வாய்ந்த இந்த ஆலயம் குழந்தைச் செல்வம் வழங்கும் சிறப்பு மிக்க கோவிலாக வணங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். சோழ நாட்டில் கரிகாலனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த மன்னன் பீம சோழன். இவனது மனைவி பெயர் கமல பத்ராஷி.

இவள் கேரள தேசத்துப் பெண். பீம சோழன் தனது ஆட்சி காலத்தில், கோவில்களுக்கு பல திருப்பணிகளைச் செய்தான். மேலும் தன் பெயரால் பீமேஸ்வர ஆலயம் என்ற புதியதொரு ஆலயத்தையும் நிர்மாணம் செய்தான். இவ்வாறு பல நற்பணிகளை செய்து வந்தாலும், பீம சோழ மன்னனுக்கு பெரும் வருத்தம் ஒன்று இருந்தது.

அது அவனுக்கு குழந்தைச் செல்வம் இல்லை என்பதுதான். இந்த ஏக்கம் காரணமாக தினமும் இறைவனை எண்ணி வழிபட்டு, தன் வேதனையை கூறி மனைவியுடன் சேர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்து வந்தான். கணவன்– மனைவி இருவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை.

அவர்களது பிரார்த்தனையைக் கண்டு இறைவன் மனம் கசிந்தான். ஒரு நாள், பீம சோழனின் மனைவியின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அப்போது, ‘தஞ்சாவூரில் உள்ள பிருகதீஸ்வரர் ஆலயத்திற்கும், கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடையே, சங்கரநாராயணர் என்ற பெயரில், எனக்கும் விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோவிலை கட்டுவிக்க வேண்டும்.

நான் அங்கு லிங்க ரூபமாக இருக்கிறேன். உன் கணவன் இந்தப் பணியைச் செய்தால் உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்’ எனக் கூறி மறைந்தார். தான் கண்ட கனவை அரசியார், மன்னரிடம் கூறினாள். மன்னருக்கோ அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. இறைவனின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்க முன்வந்தான்.

உடனடியாக தன் மனைவி மற்றும் மந்திரிகளுடன் இறைவன் குறிப்பிட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றான். பிருகதீஸ்வரர் ஆலயத்திற்கும், கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடையே ஓரிடத்தில், தன் மனைவி கனவில் கண்டதாக கூறியபடியே ஒரு சிவலிங்கம் இருப்பதை பீம சோழ மன்னன் கண்டான்.

மனம் மகிழ்ந்து போன அவன், அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தான். அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘மன்னா! நீ இங்கு அமைக்கப்போகும் கோவிலுக்கு அருகில் ஒரு குளம் உள்ளது. வைகாசி மாதத்தில் அந்தக் குளத்தில் நீராடி என்னை தரிசித்து வந்தால், உனக்கு மக்கள் செல்வம் உண்டாகும்’ என்று நல்வாக்கு கூறியது, அந்த அசரீரி குரல்.

பீம சோழன், இறைவனின் அருள்வாக்குப்படியே அந்த இடத்தில் ஒரு அழகான கோவிலைக் கட்டினான். பின்னர் அந்த ஆலயத்தில், தான் கண்டெடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அதுவே தற்போது உள்ள சங்கரநாராயணர் திருக்கோவில். கோவில் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும், பீம சோழ மன்னன் அருகே உள்ள குளத்தில் நீராடி, பக்தி சிரத்தையுடன் சங்கரநாராயணரை வணங்கி வந்தான்.

காலப்போக்கில் அவன் மனைவி கருவுற்றாள். சில மாதங்களில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மன்னரும், அரசியாரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். சைவ, வைணவ ஒற்றுமையின் பொருட்டு எழுந்தருளியுள்ள மூர்த்தி தான் சங்கர நாராயணர். இவர் ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில், தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

சங்கர நாராயணர் உருவம்:

சங்கரநாராயணரின் உருவம், ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகர குண்டலம், பாம்புடன் கூடிய ருத்ராட்ச மாலை என சிவதோற்றத்துடன் காணப்படுகிறார். அதே வலப்பக்கத்தில் மழு, அபய, ஹஸ்தம், புலி தோல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

இதே போல் இடதுபுறத்தில் கிரீடம், திருநாமம், திரு ஆபரணங்கள், சங்கஹஸ்தம், பஞ்சகச்சம் இவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சி அளிக்கிறார். வலதுபுறம் சிவனின் மனைவியான பார்வதியும், இடதுபுறம் மகாவிஷ்ணுவின் மனைவியான லட்சுமியும் வீற்றிருக்கின்றனர். இரண்டு அம்பாளுடன் கூடிய சங்கர நாராயணர் எழுந்தருளியுள்ள கோலம் அபூர்வமானது எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய ராஜகோபுரத்தை கடந்தவுடன், அகன்று விரிந்த பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டப முகப்பில் இரு புறமும் துவாரபாலகர்களின் திருமேனி உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே நந்தியும், பலிபீடமும் இருக்கிறது. அதன் வலது புறத்தில் அன்னை பாலாம்பிகை தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறாள்.

அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. அடுத்துள்ள அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. இங்கு இறைவன் லிங்கத் திருமேனியுடன் கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த லிங்க வடிவ இறைவனின் பெயரும் சங்கரநாராயணன் தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

கோவில் அமைப்பு:

தேவக் கோஷ்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை அம்மனும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் தென்புறம் கோணலிங்கர் சன்னிதி உள்ளது. இந்த தனிச் சன்னிதியில் இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன.

தீராத கவலைகள் தீரவும், மனக் குழப்பங்கள் தீரவும் கோணலிங்கங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தால் நிச்சயம் தெளிவு பெறலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. திருச்சுற்றின் மேல் திசையில் செல்வ விநாயகர், நாகர், வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, ராமர்– சீதை, இலக்குவன், அனுமன், விசுவநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.

விசாலாட்சி சன்னிதியில் ஓர் அம்மையார் அமர்ந்து சிவபெருமானை மலரால் அர்ச்சனை செய்வது போன்ற சிற்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் அவ்வையார் எனக் கூறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி இருக்கிறது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.

அவர்களின் அருகே கால பைரவர், சூரியன், சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. ஆலயத்தின் தலவிருட்சம் வில்வ மரமாகும். அம்பாளின் கருவறை கோஷ்டத்தின் கீழ் திசையில் ஜுரஹரேஸ்வரரின் திருமேனி உள்ளது.

நீண்ட நாள் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஜுரஹரேஸ்வரரை வணங்கி, ஆராதனை செய்தால் விரைந்து குணம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். குழந்தை பேறு வேண்டி தன்னை ஆராதிக்கும் பக்தர் களுக்கு சங்கர நாராயணன் அந்த பாக்கியத்தை அளித்து அருள் புரிவது நிஜமே! 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#10
ஒரு சமயம் பார்வதி தேவியார் பரமசிவனைப் பார்த்து, ‘புத்திரதோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் யாது’ எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கமும் அளித்தார்.

சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்:

க்லாம் - க்லீம் - க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ
ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாம
ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம்
யஸஸ்வினம்

பொருள்:

தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே!

இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா! நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!

மக்கட்பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேற்படி ஸ்லோகத்தை ஆழ்ந்த ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலையில் தினமும் 11 தடவைக்கும் குறையாமல் சொல்லி வந்தால், கட்டாயம் புத்திரப்பேறு உண்டாகும்.

10 வருடம் குழந்தையில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் குடியிருந்த, பெண்ணுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்தேன். முதலில் ஆண் குழந்தையும், அடுத்து பெண்ணும் பிறந்துள்ளனர்.

ஒரு பலகையில் விளக்கை ஏற்றி வைத்து, பக்கத்தில் ஒரு கிருஷ்ணர் படத்தை வைத்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொன்னேன். இதைச் சொன்ன பலரும் குழந்தைப் பேறு அடைந்துள்ளனர்.

- லஷ்மி ஸந்தானம்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.