The benefit of eating food in Banana leaf - வாழை இலை உணவு

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
நாம் உண்ணும் உணவு உடலுக்குள் செரிமானமாகி நமக்கு சக்தியை தர வேண்டும். உணவு உண்பதே ஒரு கலை. உண்ணும் இலையைப் பொருத்து உணவின் சக்தி மாறுபடுகிறது. என்னென்ன இலைகளில் சாப்பிடலாம்? எந்த இலைகளை தைத்து சாப்பிடலாம் என்ற விபரம் சாஸ்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எந்த இலையில் உண்டால் என்ன கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழை இலை உணவு

வாழை இலைகளில் சாப்பிடுவது நாம் அறிந்த ஒன்று. பெரும்பாலான விருந்துகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலைகளில் வாழை இலையும் வேங்கை இலையும் சமமான பலனை தரக்கூடியது..

வாழை இலையில் உணவு உண்பதால் அக்னி மாந்தம், வாய்வு, இளைப்பு, பித்தநோய்
போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும். ஆண்மையை வளர்க்கும்.. வயிறுமந்தத்தைப் போக்கும்.

பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள் நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும்.. பக்க வாதம் குணமாகும். உடல் நடுக்கம் காசநோய் குணமாகும்.

தையல் இலைகள்

தையல் இலையை ஒரேவகையான இலையை தைத்து உருவாக்கி அதில்தான் சாப்பிடவேண்டும். மாவிலை, பின்னை இலை, பலாஇலை, தாமரை இலை, இலுப்பை இலை, செண்பக இலை, பாதிரிஇலை,பலாசு இலை, சுரை இலை, கமுகமடல் ஆகிய இலைகளை உணவு உண்ணப்பயன்படுத்தலாம்..

இருப்பினும் பலா இலையில் அதிகமாக உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய்
மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும். சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும்.




 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2
சூடான சாப்பாட்டினால் வாழை இலையில் உள்ள"க்ரோமொசெம்" சத்து கிடைக்குமாம்
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#5
புதிய தாமரை இலையில் சாதம் போட்டு நடுவிலே பாத்தி கட்டி, சூடான ரசம் விட்டால் இலையின் காம்பு பகுதியிலிருந்து கொப்புளம் [bubles] வரும் அதாவது இலையில் இருந்த காற்று வெளிப்படும். குழந்தைகளுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வாழை இலை கிடைக்காதபொழுது வாழைபட்டை உபயோகிக்கலாம் அந்தகால பாட்டிமார்கள் எல்லாம் வாழை பட்டை, வாழைஇலை சரகு,பலா இலை , தேக்கு இலை, மந்தார இலை இவைகளை தைத்து உபயோகித்தனர்.


ஒரு பழமொழி நினைவுக்கு வருது .
விருந்துக்கு போனால் முதல் நாள் வாழை இலை, இரண்டாம்நாள் தையல் இலை, மூன்றம்நாள் "கையிலே" நான்காம் நாள் "தெருவிலே" /
திண்ணையிலே
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.