The Impact of Today's Indian Cinema on Kids.

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
இன்றைய திரை படங்களில் நாம் எவ்வாறு பாதிக்க படுகிறோம்...நம் குழந்தைகள் எவ்வாறு psychological ஆகா பாதிக்க படுகிறார்கள். நம் ரசனை எங்கு போய் கொண்டு இருக்கிறது. இன்றைய திரைப்படங்களில் எத்தனை வன்முறை, ஆபாசம்(இதை காதல் என்று சொல்லி கொண்டு), கலாச்சார சீரழிவு.. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்..
ஒரு நல்ல கருத்தை எடுத்து கொண்டு அதை சொல்லுவதற்கு கூட (அது பெரும்பாலும் இறுதி காட்சிகளில் தான் இருக்கும்) அந்த படம் முழுவதும் வன்முறையை tanker லாரியில் கொண்டு வந்து தலையில் கொட்டுகிறார்கள்... இதில் அவர்கள் சொல்ல வரும் (!!??) நல்ல கருத்து ஒரு amoeba அளவு கூட மனதில் நிற்பது இல்லை... அதுவும் தத்ரூபமாக நடிக்கிறேன்/அல்லது காட்சிகள் அமைத்து உள்ளதாக நினைத்துகொண்டு நாம் காண கூடாத,நம் பிள்ளைகள் காண கூடாத காட்சிகள் எல்லாம் வைத்து திரைப்படத்தை தருகிறார்கள்...
அந்த காட்சிகள் எவ்வளவு கொடூரத்தை , நஞ்சை நம் பிள்ளைகளின் மனதில் விதைக்கிறது என்று நம்மால் அறிந்துக்கொள்ள முடியுமா?... அந்த வயதிற்குரிய சிறுபிள்ளை தனத்தோடு இல்லாமல் அவர்கள் மனது எவ்வளவு முதிர்ச்சி அடிக்கிறது என்று பெற்றோர்கள் அறிவோமா?...இதில் 24 மணி நேரமும் ஓடி கொண்டு இருக்கும் தொலைக்கட்சியில் ஒவ்வரு 10 nimashathukkumஅந்த படத்தை பற்றி chinna trailer வேறு(அதுவும் வன்முறையை அள்ளி தெளிக்கும்).
இதற்கு சென்சர் போர்டு வேறு... என்னதான் சென்சர் போர்டு அந்த படத்திற்கேற்ப சான்றிதல்கள் வழங்கினாலும் அதற்கு மதிப்பு உண்டா? A சான்றிதல்கள் வாங்கிய படங்களும் அடுத்த 3 மாதங்களில் நம் வீட்டிற்குள்ளே நல்ல நாள் கிழமையில் "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக.. என்று வீட்டிற்கு உள்ளே வந்து நிற்கும். அதையும் நாம் நம் குடும்பத்தாருடன் பார்போம்... இதற்கு என்ன வழி?... படம் எடுப்பதை நிறுத்த முடியாது... ஆனால் நம் குழந்தைகளை நாம் ஓர் அளவுக்கு காக்க என்ன வழி? இதில் மெகா சீரியல், ரியாலிட்டி ஷோ, கார்ட்டூன் சேனல் பற்றி அரம்பிக்கவே இல்லை....
பெற்றோர்களே .. நம் குழந்தைகளை எப்படி இந்த தவறான உந்துதலில் இருந்து காப்பது? எப்படி அவர்களை நல்ல பொறுப்புள்ள பாதையில் திசை திருப்புவது? அது முழுவதும் நம் கையில் தான் இருக்கிறது...எத்தனை குழந்தைகள் குப்பையை அதற்குரிய இடத்தில் போட பழகுகிறார்கள்.எத்தனை குழந்தைகளுக்கு Global warming பற்றி தெரியும்...எத்தனை குழந்தைகள் சேவை மனப்பான்மையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். நல்ல விஷயங்களை அவர்கள் முன்னால் வைக்க நாம் கடமை பட்டு இருக்கிறோம். நமது கடமை அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது!!!!
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#2
சீரிய சிந்தனை கொண்டு சினிமா ஏற்படுத்தும் சீரழிவை லக்ஷ்மி தன் சீறல்களால் சிந்திக்க வைத்ததற்கு நன்றி.
இந்த நவநாகரீக மனித இயல்பு வாழ்க்கையில் சினிமா ரத்தத்தோடு ஊறிப்போன ஒன்று. அதனால் அதன் தாக்கம் தவிர்க்க முடியாதது ஆகிறது. இதிலிருந்து மீள ஒவ்வொருவரும் அவரவர்கள் சூழலுக்கு ஏற்றார்போல் தனமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க தயாராக வேண்டும். நல்லவைகளும் தீயவைகளும் அவரவர்கள் அறிந்து நல்லவைகளை ஏற்கவும் தீயவைகளை புறக்கணிக்கவும் முன்வரவேண்டும். இது அவரவர்களின் தனிப்பட்ட எண்ணகளையும் சூழலையும் சார்ந்த விஷயங்கள். இந்த விஷயங்களை தனது படிப்பறிவையும் அனுபவ அறிவையும் கொண்டு வரையறைதுக் கொள்ளலாம்.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#3
சீரிய சிந்தனை கொண்டு சினிமா ஏற்படுத்தும்சீரழிவை லக்ஷ்மி தன் சீறல்களால் சிந்திக்க வைத்ததற்கு நன்றி.
இந்த நவநாகரீக மனித இயல்பு வாழ்க்கையில் சினிமா ரத்தத்தோடு ஊறிப்போன
ஒன்று. அதனால் அதன் தாக்கம் தவிர்க்க முடியாதது ஆகிறது. இதிலிருந்து மீள
ஒவ்வொருவரும் அவரவர்கள் சூழலுக்கு ஏற்றார்போல் தனிமனிதஒழுக்கத்தை
கடைபிடிக்க தயாராக வேண்டும். நல்லவைகளும் தீயவைகளும் அவரவர்கள் அறிந்து நல்லவைகளை ஏற்கவும் தீயவைகளை புறக்கணிக்கவும் muன்வரவேண்டும். இது அவரவர்களின் தனிப்பட்ட எண்ணகளையும் சூழலையும் சார்ந்த விஷயங்கள். இந்த விஷயங்களை தனது படிப்பறிவையும் அனுபவ அறிவையும் கொண்டு வரையறைதுக் கொள்ளலாம்.
 
Last edited:

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#4
Nanri guna ... Unga commentskku.. Thani manitha ozhukkam entha oru seyalilum avasiyam vendum... Aana ithil baathikka paduvathu kuzhandhaigal than... 1/2 hr okkandhu oru jokes program kooda familyoda pakka mudiyala.... Nagai chuvai nigalchiyilum kuppaigal athigama ullathu...athan moolam kuzhandhaigal eppadi pathikka padranga... SAga manida mariyathai enbathu kanamal poi kondu irukirathu... Ithula cinema la chinna pillainga periyavangala pesura pechu... Mugam suzhikka vaikithu.... Athai parthu kuzhandhaigalum katru kolgirathu.... Ithuku ore vazhi veetula namma tv timea restrict pannNum.... CN, jetix ithellam parkurathu perumainu ninaikirathe vidanum... Veetula periyavanga kooda ithuku mukkiyama othulaikanum... Parentskku ethu prioritynu theriyanum...innum neriya... Irukku...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.