The Right Amount of Nuts to Eat - நட்ஸ் வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆர&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]நட்ஸ் வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம்[/h]வேர்க்கடலை :

கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

சைவம் சாப்பிடுபவர்கள் 30 கிராமும், அசைவம் சாப்பிடுபவர்கள் 20 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது.
பச்சை வேர்க்கடலை ஜீரணம் ஆகாது. வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.

வேர்க்கடலையில் முளைவிட்ட பகுதி கருப்பாக இருந்தால், அதில் நச்சுக்கள் அதிகம் இருக்கும். அதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடும்போது, கல்லீரல் பாதிக்கக்கூடும்.

பாதாம் :
கெட்டக் கொழுப்பைக் குறைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு அதிகம். புரதம், கொழுப்பு என நிறைய சத்துக்கள் இதில் உள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 5 பாதாம் சாப்பிடலாம்.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், எடை குறைந்தவர்கள் பாலுடன் கலந்து பருகலாம்.

சர்க்கரை நோயாளிகள் மட்டும் 2 பாதாமை இரவே வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடலாம்.

அதிக எனர்ஜி தேவைப்படுபவர்கள், கூடுதலாகச் சாப்பிட்டாலும் தப்பில்லை.

முந்திரிப் பருப்பு :
கொழுப்பு மிக அதிகமாக இருக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

வயதானவர்களுக்குத் தேவையே இல்லை. உடலுக்குப் புரதச் சத்து தேவைப்படுபவர்கள், உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பிள்ளைகள் தினமும் 3 சாப்பிடலாம்.

நெய்யில் வறுத்து சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னையைக் கொண்டுவரும்.

இதய நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

இதிலுள்ள சத்துக்கள் நம் அன்றாட இயற்கை உணவிலேயே இருப்பதால், பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

பிஸ்தா :
கொழுப்பு அதிகம். உடல் வளர்ச்சியைத் தரக்கூடிய புரதம், கால்சியம் மற்றும் தாது உப்புக்கள் இதில் இருப்பதால், நல்ல ஆற்றலைத் தரும்.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் மூன்று முதல் நான்கு பருப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.

அதிக எடை இருப்பவர்கள் எப்போதாவது ஒன்று இரண்டு சாப்பிடலாம்.

இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தினமும் சாப்பிட்டு வந்தால், சரும நோய் பாதிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அக்ரூட் :
மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு இதில் அதிகமாக இருக்கிறது. ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் வாரம் 30 முதல் 35 கிராம் அளவில் சாப்பிடலாம்.

சைவ உணவு சாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பருப்புகள் சாப்பிடலாம். வாரம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இதய நோயாளிகளுக்கு ஏற்ற பருப்பு இது.

"நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."

உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...

"உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."

எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.