The Significance Of Jewellery That Indian Women Wear - உடல் உறுப்புகளில் துளையிட்டுக&#30

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடல் உறுப்புகளில் துளையிட்டுக்கொள்வதால் உடலுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா

அந்தக் காலத்தில் காதில் பாம்படம், மூக்கில் புல்லாக்கு, மூக்குத்தி எனப் பெரிய பெரிய அணிகலன்களை அணிந்து இருக்கிறார்கள். இன்றும் வடக்கத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காதுகளில் பெரிதாக நகை அணிகின்றனர். இப்படி உடல் உறுப்புகளில் துளையிட்டுக்கொள்வதால் உடலுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? இல்லை சம்பிரதாயத்துக்காக இப்படிச் செய்கிறார்களா?



ராஜராஜன், அக்குபஞ்சர் நிபுணர், திருப்பூர்.

பிரசவ நேரத்தில் தாயின் வயிற்றில் சிசு எந்த அமைப்பில் இருக்குமோ, அந்த வடிவம்தான் நம் காதுப் பகுதிக்கும். ஒட்டுமொத்த உடல் பகுதிக்குமான அக்குபஞ்சர் புள்ளிகள் இந்த காதுப் பகுதியில் அமைந்துள்ளன. கம்மலுக்காகக் காதில் துளையிடப்படும் பகுதி கண்ணுக்கான அக்குபிரஷர் இருக்கும் பகுதியாகும்.

எனவே, இந்த இடத்தில் துளையிட்டு கம்மல் அணிவிக்கும்போது கம்மலின் எடை காதுப்பகுதியை கீழ் நோக்கி இழுக்கும். இந்த அழுத்தத்தினால், கண்ணின் செயல்பாடு மற்றும் பார்வைத் திறன் தூண்டப்படுகிறது. கம்மல் அணிந்திருக்கும் துளைப் பகுதியைச் சுற்றி முகம், பற்கள், தாடைகள், நெற்றி போன்றவற்றின் மையப் புள்ளிகளும் உள்ளன.

கம்மலின் அழுத்தத்தால் இந்தப் பகுதிகளும் தூண்டப்படுகின்றன. உடல் பருமனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்த வழிமுறை துணைபுரிகிறது. கிராமப்புறங்களில் காதில் பாம்படம் அணிந்திருக்கும் பாட்டிமார்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருப்பதைக் கவனித்து இருக்கலாம்.

கம்மல் அழுத்தம் கொடுக்கக் கொடுக்கப் பசியைத் தூண்டும் உறுப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்த அளவு உணவே எடுத்துக்கொள்வோம். மேலும், மூக்கில் துளையிடும்போது சுவாசம் தொடர்பான பிரச்னைகளும் கட்டுக்குள் வைக்கப்படும். நம் முன்னோர்கள் சில சம்பிரதாயங்களைக் காரண காரியங்களோடுதான் கடைப்பிடித்து இருக்கிறார்கள். எதனால் அந்த சம்பிரதாயம் என யோசித்தாலே, அவர்களின் அறிவியல் பளிச்சென விளங்கும்.
 
Last edited:

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: உடல் உறுப்புகளில் துளையிட்டுக்கொள்வத&#3006

Good info, Latchmy.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.