Things You Shouldn't Do Before Bed - தூங்கும் போது நீங்கள் செய்யக் கூட&#300

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
இரு நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்திடலாம். ஆனால் சிறிதும் தூங்காமல் இருக்க முடியுமா? முடியாது. அதுதான் தூக்கத்தின் முக்கியத்துவம். உணவுகளையும் அதன் சக்தியையும் உடல் சேமித்து வைக்கும். ஆனால் தூக்கத்தை சேமிக்க முடியாது. உடலுக்குத் தேவையான ஓய்வை கொடுத்தாகவேண்டும்.

மனோரீதியாகவே நாம் நன்றாக தூங்கினால் மிகவும் புத்துணர்வோடு இருப்போம். அன்றைய நாள் பாஸிடிவாக இருக்கும். ஆனால் தூக்கமில்லையென்றால் உடல் சோர்ந்து காண்ப்படும்.

தூங்காததால் வரும் பிரச்சனைகள் என்ன?
நீங்கள் சரியாக தூங்கவில்லையென்றால் உங்கள் உடல் கூற்றில் மாற்றம் வரும். இயல்பான செயல்கள் பாதித்து, நிறைய பிரச்சனைகளை தரும். தூக்கமின்மை வியாதி, மன வியாதி, நரம்புத் தளர்ச்சி, தலை சுற்றல், உடல்பருமன், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, பக்க வாதம், இதய நோய்கள் என பலப்பல நோய்களுக்கு கோடிட்டு செல்லும்.

காரணங்கள் :
சரியான தூக்கம் இல்லாததற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். மன அழுத்தம், வேலைப் பளு, குழப்பங்கள், தவறான உணவுப் பழக்கம் என காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தூங்காமலே இருக்கும்போது அது தூக்கமின்மை வியாதிக்கு காரணமாகிவிடும். தூக்கம் வராததற்கு காரணங்களை என்னவென்று கண்டுபிடித்து அதனை சரி செய்வது அவசியம். நம்மையும் அறியாமலே தூங்கச் செல்லும் முன் சில தவறுகளை செய்கிறோம். அவை என்னவென்ரு பார்ப்போம்.

செயல்பாடு :
அலுவலகத்திலோ, கல்லூரியிலோ நம்முடைய வேலை சரியாக செய்யவில்லையென்றால் அது அன்றைய தூக்கத்தை பாதிக்கும். இது நிறைய பேருக்கு நடக்கும். இதனை தவிர்க்க , உங்கள் மனதை திசை திருப்ப வேண்டும். இல்லையெனில் அது உங்களை வேறு விதமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். தூக்கமின்மையே மனச் சோர்வு தந்து உங்களை மென்மேலும் உயரவிடாதபடி செய்துவிடும்.

அலாரத்தை நீட்டிக்காதீர்கள் :
இன்னும் 5 நிமிடம் கழித்து எழுந்திரிக்கலாம் என கடிகார அலாரத்தை 5 நிமிடத்திற்கு அதிகமாக ஒத்திப் போடுவது உங்கள் உடலை இன்னும் அதிகமாக சோர்வுபடுத்தும். முதலில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். ஒரே நேரத்தை பின்பற்றினால் தூக்க ரிதம் சரியாக உடலில் அமையும். இதனால் உடல் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடக்கும்.

சர்க்கரை கூடாது :
தூங்குவதற்கு முன் இனிப்பான உணவுகளை சாப்பிடாதீர்கள். இவை குளுகோஸின் அளவை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்து, எனர்ஜியை தரும். இதுவே உங்களை விழித்திருக்கச் செய்யும்.

மது, புகைப் பழக்கம் :
இந்த இரண்டுமே தவறானது. தூங்குவதற்கு முன் புகைப் பிடித்தால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு இறுக்கத்தை தருகிறது. இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும். அதே போல் சிலர் மது அருந்தினால் நன்றாக தூங்கலாம் என நினைக்கிறார்கள். இது தவறு. நீங்கள் நன்றாக கவனித்தீர்களேயானால், மது அருந்திய அடுத்த நாள் உங்கள் உடல் சோர்வாகதான் கானப்படும். இது ஏனென்றால் , மது அருந்தினால் மேலோட்டமாகத்தான் தூங்குவீர்கள். ஆழ்ந்த தூக்கம் தடைபடும்.

உடற்பயிற்சி :
தூங்குவதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே உடற்பயிற்சியை செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் அவை உடல் தசைகளையும் . ஹார்மோன்களையும் தூண்டி உங்களை விழித்திருக்கச் செய்து விடும்.

காபி, மசாலா உணவுகள் :
காபி மூளையை தூண்டி சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனை இரவு 7 மணிக்கு மேல் குடிக்கக் கூடாது. அதேபோல் மசாலா உணவுகளும் உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். அல்லது மிக குறைந்த நேரம் தூங்கலாம். இல்லையென்றால் இரவில் தூக்கத்தை பாதிக்கும்.


 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,300
Likes
12,762
Location
chennai
#4
Re: Things You Shouldn't Do Before Bed - தூங்கும் போது நீங்கள் செய்யக் கூட&

thanks for sharing ka
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#6
Re: Things You Shouldn't Do Before Bed - தூங்கும் போது நீங்கள் செய்யக் கூட&

Very good sharing, Bhuvana. :thumbsup
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#7
Re: Things You Shouldn't Do Before Bed - தூங்கும் போது நீங்கள் செய்யக் கூட&

Very good sharing, Bhuvana. :thumbsup
Thanks sissy :)
 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#8
Re: Things You Shouldn't Do Before Bed - தூங்கும் போது நீங்கள் செய்யக் கூட&

Good sharing sis ..:)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.