Thirumanathirku Horoscope match avasiyama?

jeyar

Friends's of Penmai
Joined
Dec 23, 2013
Messages
110
Likes
199
Location
Chenani
#1
hi friends, Hindu marriage matching pakkama Hindu marriage ella. Horoscope matching avlo important? my cousin sister ku full matching pathu marriage pannaga but mama 35th age la heart attach la erandhutar, eppam akka mattum 2 kids erukanga. ean Astrologer ku future la eppadi nadakum nu theriadha?

next Chevvai dosham nu solranga adhu unmaiya?
Chevvai dosham girl chevvai dosam boy dan marriage pannanum. ean eppadi?
unga ideas enna? will you share with us.....
 
srikumarsavi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 24, 2013
Messages
1,530
Likes
6,395
Location
......
#2
எங்கப்பா ஜோசியம் பார்ப்பவர்.
அதனால எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
1. மனப்பொருத்தம் இருந்தால் ஜோடி பொருத்தம் பார்க்க தேவை இல்லை.
2.வாழ்வில் நடப்பதை தான் ஜாதகத்தில் கணிக்க முடியும்.
3. அக்கா அவருடன் ஒற்றுமையாய் குறுகிய காலமே ஆனாலும் நிறைவான வாழ்க்கை வாழ்திருக்கலாம்
4. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எதிலும் அதிகம்.
சரியான துணை கிடைத்தால் நிறைவான வாழ்வு.
5. ஜாதகம் என்பது நடப்பதை முன்னரே ஓரளவு அறிந்து கொள்ளத்தான். முன்னெச்சரிக்கையுடன்--- கடவுள் பக்தியுடன்--- கர்மபலங்களை----அனுபவிக்கும் துன்பகளை குறைத்துக்கொள்ள முடியும்.
எதிர்பாராமல் நடப்பதற்கும் ,எதிர்பார்த்து- நடந்து -அதனை எதிர் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு தானே?
 
chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#4

thank you .friend நீங்கள் சொல்வது..சரி..எப்படி இவ்வளவு சரியாக சொல்கிறீர்கள்.......
 
srikumarsavi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 24, 2013
Messages
1,530
Likes
6,395
Location
......
#5
thank you .friend நீங்கள் சொல்வது..சரி..எப்படி இவ்வளவு சரியாக சொல்கிறீர்கள்.......
இதே கேள்விகளை அப்பாகிட்ட நானே கேட்டு பெற்ற பதில்கள் தான் இவையெல்லாம்.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,539
Location
Hosur
#6
எனக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நமக்கு என்ன விதித்ததோ அது தான் நம் வாழ்க்கையில் நடக்கும். நம் வாழ்வில் இந்தந்த வயதில் இது இது நடக்கவேண்டும் என்பது நாம் பிறக்கும்போதே நமக்கு விதிக்கப்பட்டது.

நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான்.

நம் எண்ணமும், குணமும் நன்றாக இருந்தால் நமக்கு நன்மையே விளையும் என்பது என் கருத்து.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#7
எனக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நமக்கு என்ன விதித்ததோ அது தான் நம் வாழ்க்கையில் நடக்கும். நம் வாழ்வில் இந்தந்த வயதில் இது இது நடக்கவேண்டும் என்பது நாம் பிறக்கும்போதே நமக்கு விதிக்கப்பட்டது.

நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான்.

நம் எண்ணமும், குணமும் நன்றாக இருந்தால் நமக்கு நன்மையே விளையும் என்பது என் கருத்து.

:tea: சுமதி .....உங்கள் கருத்தே என் கருத்து.....சிறிதளவு கூட மாற்றம் இல்லை
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#9
ஹாய் ஜெயா...

திருமண பொருத்தம் பார்ப்பது என்பது அவரவர் விருப்பமும் நம்பிக்கையுமே. ஒரு சாரார் அதை உறுதியாக நம்புவர்கள். ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

எனக்கு தெரிந்த திருமண பொருத்தம் சம்மந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

பையனின் சரியான ஜனித்த நேரமும், பெண்ணின் சரியான பருவமெய்திய நேரமும் கொண்டு தான் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது அப்படி எல்லாம் பார்ப்பது இல்லை. அதே போல திருமண பொருத்தம் பார்ப்பதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு..

  • கந்தர்வம் எனும் காதல் திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கத்தேவையில்லை, அதே போல், குருதெய்வநியமனம், சகுனநிச்சிதம், போன்றவைகளுக்கும் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.
  • மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம், ஆகிய நட்சத்திரங்கள் பெண்ணிற்கோ, மாப்பிள்ளைக்கோ இருப்பினும் சில விதிவிலக்குகள் தவிர பொருத்தம் பாரக்காமல் திருமணம் செய்யலாம்.
  • திருமணப்பொருத்தம் ஜாதக ரீதியாக தோஷங்களை அனுசரித்தும்,பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷங்களையும், புத்திர பாவத்தையும் ஆண் பெண் இருவருடைய ஜாதகங்களைக்கொண்டு பார்க்க வேண்டும்.
 
jeyar

Friends's of Penmai
Joined
Dec 23, 2013
Messages
110
Likes
199
Location
Chenani
#10
love marriage panni sandosama eruka vangalum erukanga, horoscope match panni marriage pannvanga ellam sandosamava erukanga...
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.