Thyroid problems and remedies -தைராய்டுபிரச்சினைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தைராய்டு சுரப்பி குறைபாடு பெண்களை அதிகம் பாதிக்கும்


தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின் எனும் ஹார்மோன் (ஜி4) சுரக்கிறது. தைராய்டு ஹார்மோன் உடலின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாகும். உடலில் நடைபெறும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்கள் சீராக அமைய தைராய்டு ஹார்மோன்கள் உதவுகின்றன. பல்வேறு விதமான உபாதைகள் தைராய்டு சுரப்பியின் குறைப்பாட்டால் உண்டாகிறது. இந்த நோய் இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாவதால் உருவாகிறது.

ஹைப்போ தைராய்டு நோய்:


இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்தத் தைராகசின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர்தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல்.

மருத்துவமுறை:

தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை ஆண்டுக�கு ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதிக தைராக்சின் உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

தைராய்டு கட்டிகள்:

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை காய்டர் என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது. இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி:

இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக நடுத்தர வயது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. பெண்கள் தைராய்டு நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நோய் அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பி பெரிதாகி கட்டிகள் தெரிதல், இதய படப்படப்பு, தூக்கமின்மை, அதிகமான வியர்வை வெளிப்படுதல், பேதி, எடை குறைவு, பசி அதிகமாதல், மாதவிடாய் ரத்தப் போக்கின் அளவு குறைவாகபடுதல், கண்கள் பெரிதாக தோன்றுதல். கைவிரல் நடுக்கத்திற்கு தகுந்த முறையில் சிகிச்சை செய்து கொள்வதின் முலம் உடல் நலம் பெறலாம். நிரந்தர தீர்வுக்கு, கதிரியக்க மாத்திரை தைராய்டு அறுவை சிகிச்சை அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்

அமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.. மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.

கழுத்து பகுதியில் கட்டி

குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.

பேசுவதில் கடினம்

இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.

நிணநீர் கணுக்கள்

தைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும்.

விழுங்குவதில் சிரமம்

பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.

சுவாசித்தலில் சிரமம்

வழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது..

கழுத்து வலி

கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
தைராய்டு
இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு உன்னத படைப்பாகும். பல கோடி நரம்புகள், எலும்புகள், தசைகள் பிண்ணிப் பிணைந்து உருவாக்கப்பட்டது தான் மனித உடல். இந்த மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புகளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது.
இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை நாளமில்லாச் சுரப்பிகள்(Endocrine glands) நம் உடலில் பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, அட்ரீனல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் (Harmone) என்று அழைக்கிறோம்.

நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும்.

கருவில் குழந்தை உருவாகும்பொழுது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந்திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடையுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொண்டது. வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள், நடுவில் இணைப்பு திசுவால் (Isthumus) இணைக்கப் பட்டுள்ளது.

தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணைக்கப் பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங்கும்போது குரல் வளையோடு தைராய்டு சுரப்பியும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகிற தென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையை விட மிகுதியாய் இருக்கிறது என்பதை அறியலாம்.

தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவாகி இரண்டு வார காலத்தில் இருந்தே துவக்கிவிடுகிறது. சுரக்கும் ஹார்மோனின் பெயர் தைராக்சின். தைராக்சின் தைராய்டு செல்களால் சுரக்கப்படுகிறது. தைராய்டு செல்களிடையே செழிப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற மூலத்தை இந்த செல்கள் கவர்ந்தெடுத்து தைரோஸின் என்னும் அமைனோ அமிலத்துடன் இணைத்து தைராக்சின் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட ஹார்மோன் தைரோகுளோபுலின் சேமித்து வைக்கப்படுகிறது.

தேவையான பொழுது இவை இரத்தத்தில் கலக்கப்படுகிறது இந்த தைராக்சின் உருவாகும் செல்கள் அனைத்தும் தைராய்டு ஊக்கி ஹார்மோன் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்கள் என்று நாம் கீழ்கண்டவற்றை அழைக்கிறோம்.

T3 – Triiodothyronin
T4 – Thyroxine
TSH – Thyroid stimulating hormone (தைராய்டு ஊக்கி ஹார்மோன்)
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
தைராய்டு ஹார்மோனின் வேலைகள்
உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், தைராய்டு ஹார்மோன்கள் பெரிதும் உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் உதவுகிறது. செல் மற்றும் திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பம் உண்டாக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

· புரதப் பொருள்களை (Protein) சிதைவுப்படுத்தி செல்களின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் உதவுகிறது. குளுகோஸ் (Glucose)உறிஞ்சப் படுவதை தூண்டுகிறது.

· கிளைக்கோஜன் (Glycogen) சிதைவுபட உதவுகிறது.

· கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளில் இருந்து அதிக அளவில் விடுபட வைக்கிறது. வைட்டமின் அ உருவாக ஏதுவாக உள்ளது.

· குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

· இதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப் படுத்துகிறது.

· இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற உதவுகிறது. பால் சுரப்பு கோளங்களை தூண்டி அதிக அளவில் பாலை சுரக்க வைக்கிறது.

தைராய்டு சுரப்பியின் இயக்கக் குறைவினாலோ, மிகுதியாலோ நோய்கள் ஏற்படலாம். தைராய்டு இயக்க குறை நோயை (Hypothyroidism) என்றும் தைராய்டு இயக்க மிகை நோய் (Hyper thyroidism) என்றும் அழைக்கின்றனர்
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
தைராய்டு இயக்க குறை நோய் ( Hypothyroidism)

குழந்தை கருவிலிருக்கும் போதே தைராய்டின் இயக்கம் குறைந்திருந்தால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையில் குழந்தை சுறுசுறுப்பாக உலாவவில்லை என்ற அறிகுறியின் மூலம் அறியலாம். அப்படிப்பட்ட குழந்தைகள். குழந்தை பிறந்த உடனேயே வீறிட்டு அழுவதில்லை. உடனே மலம் கழிப்பதில்லை, மூச்சு எடுத்து விடக் காலம் கடத்தும். மற்றும் வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கத்துடன் காணப்படும். இக்குழந்தைக்கு இயல்பாக பிறந்தவுடன் ஏற்படும் மஞ்சள் காமாலை நெடுநாள் வரை நீடிக்கும். பிறந்தது முதல் குழந்தையின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் மற்ற குழந்தைகளை விட பின் தங்கியே இருக்கும்.

வயதாக வயதாக குழந்தையின் அறிவு முதிர்ச்சி பின்தங்கத் துவங்கும். பெற்றோர்கள் இப்பருவத்தில் இதனை உணரத் துவங்குவார். கற்பதில் குறைபாடுகள், நினைவுக் குறைபாடுகள் ஆகியன தெரிய ஆரம்பிக்கும்.
பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின் தைராய்டு குறை ஏற்பட்டால், இக்குழந்தைகளின் செயல் வேகம் குறைந்து இருப்பதைக் காண முடியும். பருவ வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தக்க சமயத்தில் பருவம் எய்துவதில்லை.

இதுவே வயது வந்தவர்களுக்கு தைராய்டுக் குறை ஏற்படின் அதைக் கண்டு பிடிப்பதற்கே மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

தலை முடி கொட்டுதல், புருவங்களில் இருந்து முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். முகம் எப்பொழுது பார்த்தாலும் தூங்கி வழிந்தது போலவே இருக்கும். கண்ணைச் சுற்றி ஒரு வீக்கம் இருக்கும்.

பேச்சு ஏற்றத் தாழ்வில்லாமல், மெதுவான வேகத்தில் இருக்கும். குரல் தடித்திருக்கும். மலச்சிக்கல், நீர் பிரியாமை, உடல் முழுவதும் வீக்கம் ஆகிய பிற அறிகுறிகள் தோன்றலாம். ஆண்மைக் குறைவு, மாத சுழற்சியின் போது உதிரம் அதிகம் போதல், மலட்டுத்தன்மை ஆகியவையும் தைராய்டு இயக்க குறையால் ஏற்படலாம்.


முதுமையில் தைராய்டு இயக்க குறைவு ஏற்பட்டால், அது நரம்புகள் பலம் இழப்பு, நரம்புகள் தடித்துப் போவதால் கைகளிலும், கால்களிலும் மதமதப்பு போன்றவை ஏற்படலாம். கைகால் வலிப்பு உண்டாகலாம். சிறு மூளை, பாதிக்கப்பட்டு தள்ளாட்டமும் நடுக்கமும் ஏற்படலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
தைராய்டு இயக்க மிகை நோய் ( Hyperthyroid)

வளர்சிதை மாற்றம் அதிக அளவில் நடப்பதால் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். அதிக அளவு வெப்பத்தை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

வயிற்றுப் போக்கு அதிகம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உதிரம் குறைவாகவே வெளியேறும்.
ஒரு நாளில் பலமுறை மலம் கழிப்பதுண்டு. மனதில் இனம் புரியாத பயம், படபடப்பு ஏற்படும். கைகள் நடுங்கும், இதயம் படபடக்கும். உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டும். எளிதில் சோர்வு ஏற்படும். சரியான உறக்கம் ஏற்படாது.

வயதானவர்களுக்கு இந்த நோய் ஆண்மை குறைவை ஏற்படுத்தும். மாத சுழற்சி சிலசமயம் நின்றுவிடலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புண்டு இதயத்தின் இயக்கம் சீர் கெடும். நாடித்துடிப்பு 200க்கு மேலாகவும் சீரில்லாமலும் இருக்கும்.
பரிசோதனைகள்
தைராய்டு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா என்று ஆராயும்போது இரண்டு செய்திகள் கவனிக்கப்படுகின்றன.

· தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாகவா, சரியாகவா அல்லது மிகுதியாகவா என்பது.

· தைராய்டு சுரப்பியின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பது.
உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை பரிசோதிப்பது தைராய்டு செயல்படும் நிலையை அறிய உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை அளப்பது, அடிப்படை வளர் சிதை மாற்ற விகிதத்தைக் கணிப்பது, இரத்தத்தில் கூ3, கூ4, கூகுஏ ஆகியவற்றின் அளவை அளப்பது போன்றவை மற்ற பரிசோதனை முறைகள் ஆகும்.

இதய மின் வரைபடங்களில் (ECG) ஏற்படும் மாறுதல்கள் கூட தைராய்டு செயல்படு நிலையில் உள்ள மாறுபாடுகளை எடுத்துக்காட்டும்.

தைராய்டு சுரப்பியின் வடிவத்தை அறிய எக்ஸ் – கதிர் படம், கணினி அச்சு வெட்டுப்படம், காந்த அதிர்வு படம் மற்றும் நுண் ஒலித் துருவு படங்கள் உதவுகின்றன. கதிரியக்க அயோடின், டெக்னீஷியம் 99-எம், தாலியம் ஆகிய மூலகங்களைத் தைராய்டு சுரப்பி கவரும் தன்மை கொண்டது. இத்தன்மையை பயன்படுத்தி சில துருவுப் படங்கள் எடுப்பதன் மூலம் தைராய்டின் வடிவம் மட்டுமின்றி எந்தப் பகுதி மிகுதியாக வேலை செய்கிறது, எந்தப் பகுதி குறைவாக வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்.
மருத்துவம்
தைராய்டு இயக்க கோளாறுகளால் ஏற்படும் நோயை தக்க மருத்துவரின் உதவியுடன் அறிந்து அதற்கு உகந்த மருந்துகளை உட்கொள்வது சாலச் சிறந்தது. மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது. இதனால் தைராய்டு நோய்கள் முளையிலேயே தடுக்கப் படுகிறது.
இந்திய மருத்துவ முறைகளில் தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துகள் உள்ளன
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
தைராய்டு தரும் பகீர்..!

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொடை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.

இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.

தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இப்படி உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம்!

அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.

பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கபட்டு, சங்கிலித்தொடர் நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கபடலாம். அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால்… மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
[h=2]தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள்[/h]தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் இதன் வேலைகள் மிக அதிகம். பட்டாம்பூச்சு வடிவம் கொண்ட இந்த சுரப்பி 2-3 அங்குலம் அளவானது. ஒரு அவுன்ஸ் எடையுடையது. கழுத்தில் உள்ள இது மூச்சு குழலின் இருபுறமுமாக அமைந்து இருக்கிறது.

இதன் பின்னால் இருப்பதுதான் நான்கு பேரா தைராய்டு சுரப்பி. இது உடலின் கால்சியம் அளவினை சீர் செய்கிறது. இதன் வேலைக்கும் பேரா தைராய்டு சுரப்பியின் வேலைக்கும் சம்பந்தமில்லை. உடலின் செயல்பாட்டு திறனுக்கு தைராய்டு சுரக்கும் ஹார்மோன் அவசியம். தைராக்ஸின் (t4), ட்ரையோ டோதைரோனின் (t3) மற்றும் கல்ஸிடோனின் என்பவையே தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள்.

தைராய்டு சுரப்பி தண்ணீர் மற்றும் உணவில் உள்ள `அயோடினை’ உபயோகித்து இந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. தைராய்டு செல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. தைராய்டு செல் மட்டுமே அயோடினை எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தது. இந்த தைராய்டுக்கு எஜமான் உண்டு. பிட்டியூட்டரி சுரப்பிதான் தைராய்டின் எஜமான்.

இந்த பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடியில் உள்ளது. பிட்யூட்டரி சுரப்பியில் தைராய்டினை தூண்டி விடும் ஹார்மோன் சுரக்கின்றது. T3, t4 சற்று குறைந்தால் பிட்யூட்டரி சுரக்கும் tsh தைராய்டு சுரப்பியினைத் தூண்டி விடும். இந்த பிட்யூட்டரி சுரப்பிக்கும் ஒரு பெரிய எஜமான் இருக்கின்றது. அதுதான் ஹைப்போதலாமஸ்.

இது மூளையில் இருக்கின்றது. இதன் ஹார்மோன் தைரோடிராசின் (trh) இதன் வேலை பிட்யூட்டரியினை வேலை வாங்குவதுதான். இத்தனை வேலைகளில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் `தைராய்டு நோய்கள்’ ஏற்படுகின்றன.

தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள் :
இந்த தைராய்டு ஹார்மோனுக்கு உடலின் நிர்வாகத்தில் பல பொறுப்புகளும், பங்கும் உண்டு. பொதுவாக 35 வயதை கடக்கும் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது. பலர் இதன் பாதிப்பினை பல காலம் அறியாமலேயே கஷ்டப்பட்டு காலம் தள்ளுகின்றனர்.

தைராய்டு ஹார்மோன் குறைந்தாலும் பிரச்சனைதான். கூடினாலும் பிரச்சனைதான். பரம்பரை, கர்ப்பம், மன உளைச்சல், சத்தான உணவின்மை, நச்சுத்தன்மை, சுற்றப்புற சூழ்நிலை இவைகள் இதன் பாதிப்பிற்கு காரணமாகின்றன.

* கை, கால் ஓய்ந்து விட்டது போல் இருக்கின்றதா, நல்ல தூக்கத்திற்குப்பிறகும் காலையிலும், நாள் முழுவதும் உடல் அதிக சோர்வாக இருக்கின்றதா? உடனடியாக தைராய்டு சோதனை செய்து கொள்ளுங்கள்.

* எப்பொழுதும் சோகமாகவே இருக்கின்றீர்களா? மகிழ்ச்சி தரும் `செரடோனின்’ எனும் ரசாயனம் தைராய்டு ஹார்மோன் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

* எதற்கெடுத்தாலும் அதிக வேகம், படபடப்பு என்று இருக்கின்றதா? மனதை அமைதி படுத்த முடியவில்லையா? இது தைராய்டு ஹார்மோன் கூடுதலாக சுரப்பதன் காரணமாக இருக்கலாம்.

* ஹார்மோன் அதிகம் சுரந்தால் அதிக பசி இருக்கும். ஆனால் அதிக உணவிலும் எடை கூடாமல் இருக்கும்.

* ஹார்மோன் குறைவாக சுரந்தால் சுவை, வாசனை இவற்றில் மாறுதல் இருக்கும்.

* அதிக ஹார்மோன் படபடப்பின் காரணமாக கவனக்குறைப்பாட்டினை ஏற்படுத்தும். குறைந்த ஹார்மோன் அதிக மறதியினை ஏற்படுத்தும்.

* குறைந்த ஹார்மோன் உடலுறவில் நாட்டமின்மையை ஏற்படுத்தும். குறைந்த ஹார்மோனால் எடை கூடும். சக்தி குறையும் உடல் வலி ஏற்படும்.

* உடலில் பல இடங்களில் நாடி துடிப்பு படபடவென இருப்பது போல் இருந்தால் ஹார்மோன் அதிகம் இருக்கலாம்.

* ஹார்மோன் குறைபாட்டால் உடல் வறண்டு, அரிப்பு இருக்கலாம்.

* ஹார்மோன் குறைவு மலச்சிக்கலையும், ஹார்மோன் அதிகம் இருப்பது வயிற்றுப் போக்கினையும் ஏற்படுத்தும்.

* ஹார்மோன் குறைவு மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு, வயிற்று வலி, குறைந்த இடைவெளியில் அடிக்கடி மாதவிலக்கு ஏற்படுத்தும்.

* ஹார்மோன் கூடுதலாக இருப்பின் மாதவிலக்குகின் இடைவெளி கூடும். ரத்தப்போக்கு குறைவாக இருக்கும்.

* பாதம், கை, கால், தோள் இவற்றில் வலி, ஒரு வித குறு குறுப்பு போன்றவை ஹார்மோன் குறைவினால் ஏற்படுபவை.

* ஹார்மோன் குறைவு, கூடுதல் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

* குளிர், உடல் சில்லிப்பு போன்றவை ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுபவை.

* உடல் சூடு, அதிக வியர்வை இவை கூடுதல் ஹார்மோனால் இருக்கலாம்.

* ஹார்மோன் குறைவினால் எப்போதும் தூங்க வேண்டும் என்றே இருக்கும். கூடுதல் ஹார்மோன் தூக்கமின்மையைக் கொடுக்கும்.
* குறைந்த ஹார்மோன் காரணமின்றி எடை கூடச் செய்யும்.

அதிக ஹார்மோன் அதிகம் சாப்பிட்டும் எடை குறையச் செய்யும்.
* முடி கொட்டி, தேய்த்து மெலிந்து போகின்றதா? உடனடியாக உங்கள் தைராய்டு ஹார்மோனை சோதனை செய்யுங்கள்.

* உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இருக்கின்றதா?

உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு, மருந்து எதற்கும் கேட்கவில்லையா? வேறேன்ன உடனடி தைராய்டு டெஸ்ட்தான்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
தைராய்டுஹார்மோன் செய்யும் மாயாஜாலம்

டாக்டர் ஆர்.பரத்,

“வெயிட் ஏறிட்டே போகுது, பீரியட்ஸ் ஒழுங்கா வரலை, ரொம்ப டயர்டா இருக்கு” - இப்படி யாராவது சொன்னால், உடனே அவர்களிடம் கேட்பது, தைராய்டு பிரச்னை இருக்கா என்றுதான். இந்தியாவில் பெரும்பான்மையான பெண்களுக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. ஆனால் இதில் பாதிப் பேருக்்கு தைராய்டு பற்றிய விழிப்புஉணர்வே இல்லை.

தைராய்டு என்பது என்ன?
“தைராய்டு நம் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவம்கொண்ட ஓர் உறுப்பு. உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றப் பணிக்குத் தேவையான, பிரதான நாளமில்லா சுரப்பி இது. பலரும் ஆரோக்கியத்துடன் வாழ உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றுகிறோம். ஆனால், உடலின் சீரான, ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மிக முக்கியம்.”

தைராய்டு பாதிப்பு பெண்களுக்குதான் ஏற்படுமா?
“தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் ஆண், பெண் இருவருக்குமே வரும். ஆனால் ஆண்களைவிட பெண்களையே 5 முதல் 10 மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. அதிலும் இளம் வயதுப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உடலில் தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தால், அதை ஹைப் போதைராய்டிசம் (Hypothyroidism) என்றும், அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyrodism) என்றும் குறிப்பிடுவோம்.

” தைராய்டு பாதிப்பால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?
‘‘ பெண்கள் பருவம் அைடயும்போதும், குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் போதும், உடல் மற்றும் மனதளவில் பல சிக்கல்களை தைராய்டு பாதிப்பால் சந்திக்க நேரிடும். தைராய்டு சுரப்பியில் இருந்து வெளிப்படும் டி3, டி4 என்ற இரண்டு ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. நமது உடலின் நரம்பு மண்டலம், நினைவாற்றல், உடல் மற்றும் மூளை வளர்ச்சி, பாலின உறுப்புகளின் செயல்பாடு, கருத்தரித்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தைராய்டு சுரப்பு குறைந்தால், உடல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல், தோலில் வறட்சி, நினைவாற்றல் குறைதல் போன்றவை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால், உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும்.

குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு, தைராய்டு பிரச்னை உள்ளது. மேலும், கருவுற்ற தாயின் தைராய்டு நோய், கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. முதலிலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கருச்சிதைவைத் தவிர்க்க முடியும்.”

தைராய்டு நோய் ஏன் பெண்களையே அதிகளவில் பாதிக்கிறது?
‘‘மிக முக்கியமான ஒரு காரணம், ஆட்டோ இம்யூனிட்டி (Autoimmunity) எனப்படும் தன் எதிர்ப்பு ஆற்றல். அதாவது, நம் உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள்,சொந்த உடலின் உறுப்புகளையே, வெளியில் இருந்து வரும் நோய்க் கிருமிகளை போல கருதி அழிக்கத் துணிகின்றன. இந்த தன்எதிர்ப்பு ஆற்றல் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) என்ற ஹார்மோன், இந்த தன்மையைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது.

மேலும் பெண்களின் மரபணுவில் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் (Chromosomes) இருப்பதும் காரணம். இயற்கையாகப் பெண்களுக்கே அதிக அழுத்தமான சூழ்நிலைகள் உள்ளன. நமது முன்னோர்களைவிட, இன்றைய தலைமுறையினரிடம் தைராய்டு நோய் அதிகமாகக் காணப்படுவதற்கு ஸ்ட்ரெஸ் முக்கிய காரணம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கு, ஸ்ட்ரெஸ் ஒரு முக்கிய காரணமாகும்.”

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு?
‘‘தைராய்டு நோய்க்கு தீர்வு இல்லை என்ற எண்ணம் மிகவும் தவறானது. ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்களின் அளவைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னை உள்ள பெண்களும் மற்ற பெண்களைப் போல ஆரோக்கியமாக வாழ முடியும். நாளமில்லா சுரப்பியியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, மருந்து உட்கொள்வதன் மூலம், மாதவிடாய் கோளாறு மற்றும் மலட்டுத்தன்மைக்கும் தீர்வு காண முடியும். பேறு காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தவிர்க்க முடியும்.”

நன்றி டாக்டர் விகடன்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.