Tips for a Healthy Friendship-நட்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

கடலில் திசை தெரியாமல் தத்தளிக்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்காய் ஒளி கொடுக்கும் நட்பு எல்லோருக்கும் இயல்பாய் அமைவதில்லை அமையாதவிடத்தில் பல தெளிவுகளை நாம் உணர வேண்டும்.

ஆண் பெண் இருவருக்குள்ளும் இயல்பான நட்பு உருவாகி காலபோக்கில் அந்த நட்பில் ஒருவர் உள்ளத்தில் மட்டும் காதலாய் உருவெடுத்து நிற்கும். இப்பிரச்சனையை திர்க்க காதலை உணரும் பட்சத்தில் வெளிபடையாக பேசி மனதில் உள்ள குழப்பத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பதே சிறந்தது.

ஆரோக்கியமான நட்பை உடன் இருக்கும் நட்பு வட்டாரங்கள் காதலாய் சித்தரிப்பது. இங்கு பிரச்சனை இருவருக்கு மட்டும் அல்ல நட்பிர்க்கும்தான். சில சமயம் இதனால் இருவர் மனதிலும் தனித்தனியாக ஒருவர் மிது மற்றொருவரின் சந்தேக பார்வை ஏற்படுவதுண்டு. இவைகளை தடுக்க ஆரம்பத்திலேயே நட்பு வட்டாரத்திடம் தெளிவாக உங்கள் நட்பை விளக்கி கேலி பேசுக்களுக்கு இடமளிக்காமல் இருத்தல் நன்று.


அடுத்து எங்கு நாம் நம் நண்பர்/ நண்பியை காதலித்து விடுவோமோ என்னும் பயம். மேலும் அவரும் நம்மை காதலிப்பாரோ என்ற பயம் கலந்த சந்தேகம். பிரச்சனையை போக்க அன்று வரை நல்ல நண்பர்களாய் இருந்தவர்களில் ஒருவர் மட்டும் மற்றொருவரை விட்டு விலகி செல்வது அல்லது அவர்களை ஊதாசினபடுத்துவது. இதனால் மற்றொருவர் மிகுந்த மனக்குழப்பதிலும் வேதனையிலும் ஆழ்வது உண்டு. உண்மையான நட்பிற்கு புரிதல் மிக அவசியம். எனவே தம் மனநிலை என்ன என்பதை அவரிடம் வெளிப்படையாக பேசிவிட்டு தேவைப்பட்டால் சிறிது விலகி இருப்பதும் நலமே. அதை விட்டுவிட்டு நாமாகவே ஒரு கணிப்பை உருவாக்கி கொள்வது பெரும்பாலும் தவறான முடிவையே தரும்.

நட்பில் ஆண் பெண் இருவருக்குள்ளும் ஓர் ஆரோக்கியமான இடைவெளி இருப்பதே நலம். எல்லை இல்லாத நட்பு என்பது சேரும்மிடம் தெரியாமல் பயணிப்பது போன்றது. நம்மை துயரில் ஆழ்த்த நாமே வழி அமைப்பதாகும். அர்த்தமற்ற தொடுதல்கள் இல்லாதிருப்பதே அவர்களுக்கும், சமுகத்தில் இருக்கும் அவர்கள் நட்பிற்கான அங்கிகாரதிர்க்கும் பாதுகாப்பாய் அமையும்.


மேலும் நட்பில் பெண்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நன்று. ஏனெனில் உங்கள் ஆறுதலுக்காக உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இதர விஷயங்களை கூறினாலும் கேட்பவரின் உள்ளத்தில் உங்களை பற்றிய (நன்)மதிப்பு என்னும் உருவம் பதிந்துவிடும் வாய்ப்பு கிடைக்காதவரை மட்டுமே நல்லவர்களாக இருப்பவர்கள் வாழும் உலகம் இது. ஒரு நாள் உங்கள் சந்தோசம் கேள்விக்குறியாக மாறும் நிலையை ஊருவாக்கிவிடாதிர்கள்.


நினைவில் இருக்கட்டும் இன்று உங்கள் துயர் துடைக்கும் என நீங்கள் என்னும் நட்பு ஒரு நாள் உங்கள் செயல்களை குத்திகாட்டி பேச கூடும். ஆணோ பெண்ணோ உங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைத்தையும் தாண்டிய அந்தரங்கத்தை பகிராதிர்கள்.


நட்பை ஒரு பறவையாக கருதுவோம், பறவை விரும்புவது சுதந்திரமாக பறப்பதையே நம்மீது அன்பு இருந்தால் அப்பறவை நம்மை தேடி நிச்சயம் வரும் எனவே நட்பை கூண்டிற்குள் அடைத்து காத்திட முடியும் என எண்ண வேண்டாம். அதற்கான சுதந்திரத்தை கெடுக்காமல் அதன் ஆனந்தத்தை கண்டு மகிழுங்கள்.

நண்பர் நண்பி தவறான பாதையில் சென்றால் அவர்கள் செய்வது தவறு என சுட்டிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. அதே சமயம் அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லையெனில் உங்கள் நிம்மதியையும் கெடுத்து கொள்ள வேண்டாம் ஆரோக்கியமான முறையில் கூறியும் கேட்கவில்லையெனில் நிங்களாகவே விலகிக்கொள்வதும் நன்மை பயக்கும்.

நட்பு இருவருக்குள் இருக்கும் ஆழமான புரிதலின் வெளிப்பாடே. இன்று நம்மை புரிந்து கொள்ளாமல் விலகி செல்பவர்களை கூட காலம ஒரு நாள் நம்மிடம் அற்புதமான நண்பர் / நண்பியாய் நமக்கு திருப்பி தரலாம், எனவே புரிந்துகொள்ளாத நட்பை காலத்தின் கைகளில் விட்டுவிடலாம்.

இந்த உலகில் யாருமே முழுமையான மனிதராக இருப்பதில்லை எல்லோரிடமும் எதாவது ஒரு குறை இருக்கும் எனவே தவறு செய்து பின் திருந்தி வாழ என்னும் தோழமையை மனித்து மறந்து ஏற்றுக்கொள்வதே நலம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
அவசியம் கவனிக்க வேண்டிய டிப்ஸ் . நன்றி ஜெயா .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
அவசியம் கவனிக்க வேண்டிய டிப்ஸ் . நன்றி ஜெயா .
My pleasure aunty......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.