Tips for beautiful lips - உதடுகள் அழகாக

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
உதடுகள் அழகாக:

* பத்து கிராம் ரோஜா இதழ்களையும், பத்து கிராம் டீத்தூளையும், தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதை ஆற வைத்து உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்தால், கருத்த உதடுகள் சிவந்து காணப்படும்.

* பீட்ரூட் மற்றும் மாதுளம்பழத்தின் சாற்றை, முறையாக உதடுகளின் மேல் தடவி வர, உதடுகள் அழகாகும்.

* தினமும் உதடுகளின் மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால், உதடுகள் வறண்டு போகாமல் இருக்கும்.

* ஆலிவ் ஆயிலுடன் சிறிது தேனும், பன்னீரும் கலந்து தடவி வந்தால், சொரசொரப்பான உதடுகள் பொலிவு பெறும்,

* கொத்தமல்லிச் சாற்றை, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன், உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் உதவியின்றி இயற்கை சிவப்பழகு பெறும்.

* உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குடன் தூங்கச் செல்லக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவிய பின்னரே, தூங்கச் செல்ல வேண்டும்.

* உதடுகளைக் கடிப்பது மற்றும் நாக்கினால் ஈரப் படுத்திக் கொண்டே இருப்பது போன்றப் பழக்கங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.