Tips for elders while walking-60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழ&#299

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூடாது! :
மெதுவா நடங்க; அஜாக்கிரதை வேணாம்

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன் றவை வந்தால், அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட்டு, கன்ட்ரோலில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், 60 வயதை தாண்டி விட்டால், மிக மிக முக்கியமானது எது தெரியுமா?

வீட்டிலும், வெளியிலும் தடுமாறி விழாமல் இருப்பது தான், மற்ற எல்லாவற்றை விட முக்கியம். விழுந்துவிட்டால், அதனால் வரக்கூடிய விளைவுகள் படு மோசமானவை.
அவர்களுக்கும் மீள முடியாத வேதனை; அவர்களின் குடும்பத்தினருக்கும் மாளாத கஷ்டங்கள். அதனால், அறுபது வயதை தாண்டியவர்கள் நடக்கும் போது, குளிக்கும் போது, கழிப்பறை செல்லும் போது, படுக்கை அறை மெத்தையில் படுக்கும் போது…

சிறிய அளவில் கூட அஜாக்கிரதையாக இருக்கவே கூடாது. எதனால் , தடுமாற்றம் வருகிறது, விழாமல் இருக்க என்ன செய்யலாம்? தடுப்பு முறைகள் என்னென்ன?

இதோ படியுங்கள்:
மருந்துகளால் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க நமக்கு மூளையின் திறன் முக்கியம். அதில் பலவீனம் ஏற்பட, வயதான காலத்தில் சாப்பிடும் மருந்துகளும் காரணம். சில நோய் தீருவதற்காக சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், மூளை திறனை பாதிக்கும்.

தடுப்பு முறை: எந்த மருந்தால் அடிக்கடி தடுமாற்றம் ஏற்படுகிறது. சோர்வு ஏற்பட்டு ஆளை தள்ளுகிறது என்பதை அறிந்து, அதை டாக்டரிடம் சொல்ல வேண்டும். டாக்டர் சொல்லாமல், பொதுவான மாத்திரையை கூட சாப்பிடவே கூடாது. மருந்து சாப்பிடுவோர், மதுவை தொடக்கூடாது.

உடற்பயிற்சியின்மை : ஓய்வு பெற்று விட்டால், வீட்டில் முடங்கி விடுவது தான் பலரின் வழக்கமாகி விட்டது. காலை எழுந்து, சாப்பிட்டு, இரவில் தூங்குவது தான் வேலை என்று நினைக்காமல், முடிந்தவரை உடற்பயிற்சி செய்வது முக்கியம். பாதுகாப்பாக வெளியில் சென்று வருவது, காலார நடப்பது, சிறிய வேலைகளை செய்வது முக்கியம். இது இல்லாவிட்டால், எலும்புகள் திடத்தன்மை குறையும். அதனால், உடல் அழுத் தத்தை அது தாங்காமல், ஆளை அடிக்கடி தள்ளும்.

தடுப்பு முறை: எலும்பு, தசைகள் பலவீனம் அடையாமல் இருக்க வீட்டில் சிறிய வேலைகளை செய்யலாம்; சிறிய அளவில் உடற்பயிற்சி செய்யலாம். பாதுகாப்பான முறையில் உடலை வளைத்து வேலை செய்யலாம். அளவுக்கு மீறி உடலை வருத்தக்கூடாது. பளுவான பொருட்களை தூக்கவே கூடாது.

பார்வை மங்குவதால் : வயதானால் பார்வை மங்கி விடும். வீட்டிலும், வெளியிலும் மிக உஷாராக நடக்க வேண்டும். அதிக வெளிச்சத்தை பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கும் போது தான் தடுமாறி விழ நேரிடும்.

தடுப்பு முறை: கண் டாக்டரிடம் அடிக்கடி செக்-அப் செய் வது முக்கியம். கருப்பு அல்லது கான்ட்ராஸ்ட் கலர் கண்ணாடி அணியலாம். தனியாக நடப் பதை தவிர்க்கலாம்.

எலும்பு முறிவு : வயதானவர்களுக்கு அடிக்கடிநேரும் பாதிப்பு எலும்பு முறிவு தான். கால்சியம், வைட்டமின் “டி’ சத்து இல்லாமல் இருந்தால் எலும்புகள் அப்பளம் போல நொறுங்கும். அதனால், லேசாக சறுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு தான்.

தடுப்பு முறை: பால், யோகர்ட், பாலாடை கட்டி, மீன் மற்றும் காய்கறி உணவுகளை சாப் பிட வேண்டும். டாக்டர் யோசனைப்படி, கால்சியம் மாத்திரைகளும் சாப்பிடலாம்.

சுற்றுப்புற பாதிப்பு : வீட்டில் பொதுவான சுற்றுச்சூழல் காரணங்களால் தான் வயதானவர்கள் விழுந்து அடிபடுகின்றனர். விளக்கு வெளிச்சம் இன்மை, நடக்க முடியாத அளவுக்கு பொருட்களை ஆங்காங்கு வைப்பது , ஆணி உட்பட கூரிய பொருட்கள் சிதறி இருப்பது போன்றவை தான் இதற்கு காரணம்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: 60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூ&a

தடுப்பு முறை: வீட்டில் வயதானவர்கள் இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு ஏற்ப சோபா மற்றும் பொருட்களை வைக்க வேண்டும். கதவு, ஜன்னல்கள் வயதானவர் கையில் , காலில் இடிக்கும் வகையில் கூர்மையான வகையில் அமைக்கக்கூடாது.

* தரை வழுவழுப்பாக இருக்கக்கூடாது. தண்ணீர் சிதறி இருக்கக்கூடாது. தரை விரிப்பை திடமானதாக போட வேண்டும். இல்லாவிட்டால், வழுக்கி விடும். தரையில் எக்காரணம் கொண்டும் துணிகளை பரப்பக்கூடாது. அதிலும் வழுக்கும் படி தரை விரிப்புகளை போடக்கூடாது.

* குளியல் அறையில் , கைப்பிடி அமைக்க வேண்டும். பாத் டப்பும் வழுக்கும் வகையில் இருக்கக்கூடாது. கழிவறையில் டாய்லெட் இருக்கையை உயர்த்த வேண்டும். சோப்பு நுரை பரவி இருக்கக்கூடாது.

* அறைகளில் வெளிச்சம் அதிகமாகவும் இருக்கக்கூடாது; மங்கலாகவும் இருக்கக்கூடாது. வயதானவர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும். இரவிலும் எல்லா அறையிலும் இரவு விளக்கு போடவேண்டும்.

* படுக்கை அறையில், வயதான வர்கள் கட்டிலில் படுத்தால், பாதுகாப்பாக படுக்க வேண்டும். விழும்படி விளிம்பில் படுக்கக்கூடாது. பக்கத்தில் விளக்கு சுவிட்ச், கார்டுலஸ் போன் வைத்திருக்க வேண்டும்.

* மாடிப்படி உட்பட எந்த அறையிலும் கைப்பிடி வைக்கலாம். தரையை எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும். சிறிய பொருட்கள் கூட, காலில் குத்தி வயதானவர்களுக்கு பாதிப்பு தரலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: 60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூ&a

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்;

தவறினால் அது நாளடைவில், படுத்த படுக்கையாகி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும். அதுபோல், நீண்ட நேரம், ‘ஷூ’ அணிவது கூடாது என்கிறார், டாக்டர் டேவிட் விஜய் குமார்.

சென்னையில், முதன் முறையாக, தவறி கீழே விழும் முதியோருக்கான சிறப்பு பிசியோதரபி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். முதியோருக்கான பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் இதோ:

1முதியோர் அடிக்கடி தவறி கீழே விழுவது ஏன்?
குழந்தைகள் கீழே விழுந்தால் சிறிது நேரம் அழுதுவிட்டு, பழைய படியே சிரித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடும். ஆனால், முதியோர் விழுதல், சாதாரண உடல் சிராய்ப்பில் ஆரம்பித்து, தலைக்காயம் வரை ஏற்பட்டு, மரணத்தைக் கூட ஏற்படுத்தி விடும். வயது ஆக ஆக, இயங்கும் உறுப்புகளின் திறன், கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்பதால், உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, சிறு மூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு.


2 தசை வலிமை குன்றுவது இதற்கு காரணமா?
அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறு வாதம், பக்கவாதம், பார்வை குறைதல், மூட்டு வலி, தசை சார்ந்த நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். மூளையில் (செரிபலம்) உள்ள, நிலைத்தன்மைக்கான செல்கள் இறப்பால், தளர்வு ஏற்பட்டு, அழுத்தம் தர முடியாத நிலை; தசை வலிமை குறைதல், மூட்டு மடக்கி நீட்ட முடியாத நிலை, எலும்பு சார்ந்த பாதிப்புகளாலும் மயங்கி விழுகின்றனர். ‘வெஸ்டிபுலர் பிராப்ளம்’ எனப்படும், நடு காதில் ஏற்படும் பிரச்னையும், தலை சுற்றலுக்கு காரணம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: 60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூ&a

3 ரத்த அழுத்த பாதிப்பும் காரணமா?

ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்த அழுத்தம் வேகமாகக் குறைவதால், கீழே விழும் நிலை ஏற்படுகிறது. மது, போதை பழக்கமும் காரணம்.
மூளைக்கு செல்லும் ரத்தம் சீராக செல்லாவிட்டாலும், தலை சுற்றல் வரும். இப்படி பல்வேறு காரணங்கள் உள்ளதால், எந்த காரணத்தால் பாதிப்பு வருகிறது என, கண்டறிய வேண்டும். 60 சதவீத முதியோர் தவறி விழும் நிலை உள்ளது.

4 தவறி விழுவதால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
கீழே விழும் முதியோரில், 20 சதவீதம் பேருக்கு, இடுப்பு எலும்பு முறிவதுண்டு. தலையில் அடிபடுவதால் காயமும், அதனால் மூளையில் ரத்தக்கசிவும் ஏற்படும். சிலர் படுத்த படுக்கையாகி விடுவர். தோல்களில் புண் ஏற்படும்; சிறுநீரக தொற்று ஏற்படும்; மார்பு சளி கட்ட வாய்ப்புள்ளது. அலட்சியம் காட்டினால், உயிர் இழப்புக்கும் வழி வகுத்துவிடும். ஒருமுறை கீழே விழுந்தால், மீண்டும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால், பலர் நடக்க பயப்படுகின்றனர். தன் தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை நாடுவதே, அவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்கி விடுகிறது.

5 நிலை தடுமாறும் நிலை எந்த வயதில் வருகிறது?
முதியோருக்கு, 70 வயதில் நிலை தடுமாறும் நிலை வருகிறது. 80, 90 வயதுகளில் உள்ளோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 60 வயதிலேயே இதற்கான ஆரம்பகட்ட பாதிப்புகள் வந்து விடுகின்றன. ரத்த ஓட்டத்தை சீராக்கவும், நிலை தடுமாறி விழும் நிலைக்கும் தீர்வு காண பயிற்சிகள் செய்ய வேண்டும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: 60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூ&a

6 இதற்கான பிரத்யேக பயிற்சிகள் ஏதும் உள்ளதா?

பேலன்ஸ் டிரெய்னிங் புரகிராம் என்ற, ஆறு வார பயிற்சி உள்ளது. ஆரம்ப நிலை என்றால், அடிப்படை பயிற்சி எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தே செய்யலாம். பாதிப்பு அதிகம் இருந்தால், ‘பிசியோதரபிஸ்ட்’ மற்றும் பயிற்சி சாதனங்கள் உதவியுடன், பயிற்சி மையங்களில் சென்று பயிற்சி பெற வேண்டும். மேலும், ‘வாபில் போர்டு’, பேலன்ஸ் போர்டு, டிராம்போலைன் போர்ட், பாசு பால், டேண்டன் வாக்கிங் பிளாட்பார்ம், வைபிரேஷன் போர்டு, வாக்கிங் டிரெய்னர் என, பல்வேறு பயிற்சிகள் உள்ளன. இவை, முதியோருக்கு நல்ல பலன்களைத் தரும்.

7 நீண்ட நேரம், ‘ஷூ’ அணிவோருக்கும் இந்த பாதிப்பு வரும் என்கிறார்களே?
அலுவலங்களில், நீண்ட நேரம் ‘ஷூ’ அணிவோர், விரல்களை அசைக்க முடியாத நிலை வருவதால், வயதாகும்போது, தவறி விழும் பாதிப்பு வருவது உண்மை தான். நீண்ட நேரம், ‘ஷூ’ அணிவோர், சிறிதுநேரம் கழற்றி வைத்து, கால், விரல்களுக்கு சற்று நேரம் அசைவு தருவது நல்லது. ‘ஷூ’ அணிவது அவசியம் என்றால், விரல்களை உள்ளிருந்தபடியே அசைவு தர வசதியுள்ள, முன்புறம் அகலமான, ‘ஷூ’க்களை பயன்படுத்தலாம்.

8 முதியோருக்கு சிறப்பு ஆலோசனை என்ன?
‘டைம் டு டாய்லட்’ பயிற்சி முக்கியம். எந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கும் நிலை வருகிறது என, தெரிந்து கொண்டு, அதற்கு சற்று முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இரவு நேரங்களில், சிறுநீர் சிந்திவிடுமோ என, அவசரமாக செல்லும்போது தான் தவறி விழுகின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல், காபி, டீ, தண்ணீர் அதிகம் குடிப்பதை, முதியோர் குறைத்துக் கொள்வது நல்லது.

* கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி அணிவோர், பார்வை திறனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காதுகளில் அழுக்கு படியாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

* பக்க விளைவுகளால் பாதிப்பு வரும் என்பதால் மருந்து, மாத்திரை சாப்பிடுவோர், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். கால்களுக்கு பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும்.

* குளியல் அறை வழுக்கி விடாத வகையிலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்வதோடு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கைக்கு எட்டும் துாரத்தில் வைத்துக் கொள்வதாலும், தவறி விழும் நிலையில் இருந்து தப்பலாம்.

– டாக்டர் டேவிட் விஜய் குமார்,
இயக்குனர், முதியோர் பிசியோதரபி மையம்,
38/1, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#6
Re: 60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூ&a

thanks for sharing..
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#7
Re: 60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூ&a

Thanks for all the necessary info. We will try to adopt these sugession as we have crossed 60+.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#8
Re: Tips for elders while walking-60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழ&

Very useful suggestions.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.