Tips for Hair Care - முடியை பாதுகாக்க...

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
  • முடியை பாதுகாக்க...
  • * உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
  • * எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருது வாக இருக்கும்.
  • * வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரைமணி நேரம் ஊறிய பின், குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும், தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும்; பொடுகு நீங்கும்.
  • * கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி, தலையில் தேய்த்து வர, நரைமுடி குறையும்.
​courtesy;''dinamalar
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: முடியை பாதுகாக்க...

Wonderful tips for hair care. thank you sir!
 
Joined
Sep 9, 2011
Messages
92
Likes
69
Location
chennai
#5
hey friends,
this is not my own stuff.....
net la irunthu sutathu:angel:


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்
 
Joined
Sep 9, 2011
Messages
92
Likes
69
Location
chennai
#6
Re: முடியை பாதுகாக்க...

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.