Tips for Maintaining long Black Hair - கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா &#

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, பெண்களுக்காகவே
* வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.
* அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை போய் விடும்.
* தனியாக சீப்பு வைத்துக் கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளை தவிர்க்கவும்.
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில் தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
* விளக்கெண்ணையை போல உடலுக்கு குளிர்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* தலையில், ஆங்காங்கே சிறு பொட்டல் இருந்தால், சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால், மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்கு, போஷாக்குத் தரும் ஷாம்பூவை, வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.
* வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி; முடியும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த் தூள் தேய்க்கும் போது, சீயக்காயுடன் தண்ணீருக்கு பதில், மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.

முடி பளபளப்பாக இருக்க...
வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு கப் அளந்து எடுத்து, அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது, யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து, மயிர் கால்களில் படும்படி நன்றாக, "மசாஜ்' செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால், முடி பளபளப்பாக மென்மையாக மாறு
courtesy;''dinamalar''
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர

பகிர்வுக்கு நன்றி . . .
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.