Tips for Newborns - பிறந்த குழந்தைகளுக்கான டிப்ஸ்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
குழந்தையும் கை மருத்துவமும் :


 • பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
 • பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடையகல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது “மஞ்சள் காமாலை” நோயாக இருக்கலாம்.
 • பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும்.இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
 • சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
 • குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
 • கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லிஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
 • இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான்என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
 • பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.


குழந்தைகளுக்கான சுகாதாரம் :

 • கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
 • புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
 • குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
 • குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
 • குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
 • குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
 • குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி : டாக்டர் ஸ்டீபன்


 
Last edited:

rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#2
பயனுள்ள தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி..
 

rameshshan

Commander's of Penmai
Joined
May 7, 2012
Messages
1,392
Likes
7,248
Location
Bangalore
#4
'குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.'

Hi jv,

Regarding the above point i have a query . Not daily but whenever Ishan gets head bath, we use sambrani smoke (just mild smoke) and expose his body and head (from backside) at a safe distance with care. That actually dry the hidden damp parts of him.

Little oil (Gingelly oil) was used on his head before bath (atleast twice a month) and washed with baby shampoo during bath. Later the sambrani procedure follows.

Both these are traditionally followed custom in south india and no complaints yet from the mothers? 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
'குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.'

Hi jv,

Regarding the above point i have a query . Not daily but whenever Ishan gets head bath, we use sambrani smoke (just mild smoke) and expose his body and head (from backside) at a safe distance with care. That actually dry the hidden damp parts of him.

Little oil (Gingelly oil) was used on his head before bath (atleast twice a month) and washed with baby shampoo during bath. Later the sambrani procedure follows.

Both these are traditionally followed custom in south india and no complaints yet from the mothers?

Hi Ramesh,

Long time ...no see......

First of all, these are not my original views. I have given the doctor's name in the end of the post.

மேலும் , காலங்காலமாக , எல்லா டாக்டர்களும் , எல்லா புதுத் தாய்மார்களுக்கும் , வழக்கமாகச் சொல்லும் , அறிவுரை தான் இது . டாக்டர்களைப் பொறுத்த வரை , எண்ணை தேய்க்கக் கூடாது , புகை போடக் கூடாது .

ஆனால் , எல்லா பெண்களும் , இதை மனதில் கொள்ளாமல் , அவர்கள் , தாய் மற்றும் பாட்டி சொல்வதைத்தான் , குழந்தைகளுக்குச் செய்கிறார்கள் .

ஆனால் , இப்போதெல்லாம் , நகரங்களில் உள்ள பல பெண்கள் , டாக்டர் சொல்வதை மட்டுமே செய்கிறார்கள் , அவர்கள் அம்மா சொல்வதை செய்வதில்லை . இதை நான் கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன் .

BTW, நான் , என் மகனுக்கு , எண்ணை தேய்த்ததும் இல்லை , சாம்பிராணி போட்டதும் இல்லை .

தினமும் , காலுக்கு , shark liver oil தடவி , உடம்புக்கு தேங்காய் எண்ணை தடவி , காலை இளம் வெய்யிலில் , கொண்டு வைத்துக் கொள்வேன் .

பிறகு , பயத்தம் மாவு கொண்டு , தலை முதல் , கால் வரை தேய்த்துக் குளிப்பாட்டுவேன் .

மாலையில் , சிறிது தேங்காய் எண்ணை , தலையில் தடவுவேன் .
 

rameshshan

Commander's of Penmai
Joined
May 7, 2012
Messages
1,392
Likes
7,248
Location
Bangalore
#6
ya ya ...long time..no see...but small world..u see! ha ha..

Yes! Now u got it right! Ipo indha thread padikra almost all mothers...whose instructions u think they will follow?!

Obviously JV's, u know why? coz u shared YOUR experience! Let all the mothers come here n share their tips.

It will be so lively isnt!
 

NivetaMohan

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 4, 2011
Messages
5,453
Likes
26,327
Location
Madurai
#7
wow shan anna.. jeyan eppidi irukinga.. rendu perum..

anna kutty epidi irukanga..........jeyan .... chance ah illa semma tips .......moms are... really god's gift thaan...
 

rameshshan

Commander's of Penmai
Joined
May 7, 2012
Messages
1,392
Likes
7,248
Location
Bangalore
#8
Hi 'Cheerer' Niveta,

Fine here! Hopefully u too!

Ishan is fine, ipo 10 months going on! Thats y all info related to infants going thru keenly!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#9
ya ya ...long time..no see...but small world..u see! ha ha..

Yes! Now u got it right! Ipo indha thread padikra almost all mothers...whose instructions u think they will follow?!

Obviously JV's, u know why? coz u shared YOUR experience! Let all the mothers come here n share their tips.

It will be so lively isnt!

Happa....indha humor ai romba romba miss panrom Ramesh......

Ya.....that's true.....all mothers can share their tips.......

BTW, hope Ishaan is fine with all looties, hope he is talking, walking etc.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#10
wow shan anna.. jeyan eppidi irukinga.. rendu perum..

anna kutty epidi irukanga..........jeyan .... chance ah illa semma tips .......moms are... really god's gift thaan...

Nee epdi iruka da Nivi.....Kaanama ponavargal ellarum, indha thread il meet pannuvom nu varingala, neeyum , Ramesh um
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.